Contact us at: sooddram@gmail.com

 

வேறு உள்நோக்கத்துடனே அமெரிக்கா இலங்கைக்கெதிராக பிரேரணை தயாரிப்பு

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வு குறித்தே தற்பொழுது பரபரப்பாகப் பேசப்படுகிறது. இலங்கைக்கு எதிரான சதி குறித்தும் 2012ல் அனைவருக்கும் மின்சார வசதி அளிக்கும் அரசின் இலக்கு குறித்தும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்கவுடன் நடத்திய நேர்காணல :
கேள்வி
: இலங்கைக்கு எதிராக அமெரிக்க பிரேரணையொன்றை கொண்டுவர உள்ளது. அமெரிக்கா திடீரென ஏன் இலங்கைக்கு எதிராக கடும் போக்கைப் பின்பற்றுகிறது?

பதில : பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற கோசத்தை அமெரிக்கவே ஆரம்பித்தது. சர்வதேச மட்டத்தில் நடந்த பல்வேறு பயங்கரவாதச் செயல்களுடன் புலிகளுக்கு தொடர்பு இருப்பதையும் அமெரிக்கா அறிந்தே இருந்தது. இலங்கை புலிகளை அழித்தது அமெரிக்காவுக்கும் ஒரு வகையில் சாதகமாகவே இருந்தது.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா இவ்வாறு பிரேரணை யொன்றை கொண்டு வருவது புதுமை யாகவே உள்ளது. இறுதிக்கட்ட யுத்தத் தில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்ட தாக பல்வேறு மட்டத்திலும் பரப்பப் பட்ட தகவல்கள் உண்மை என நம்பும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கில் நடத்தப்பட்ட தனியான சுயாதீன கணிப்பீட்டின் மூலம் இயற்கை மரணம், புலிகள் தரப்பு இறப்பு அடங்கலாக 2009 ஜனவரி முதல் மே வரையில் 8998 பேரே இறந்துள்ளனர்.

புலிகள் செய்த அநியாயங்கள் குறித்து எதுவும் கூறாது இலங்கைக்கு எதிராக இவ்வாறு பக்க சார்பான பிரேரணை கொண்டு வருவது அநீதி. இது தவிர ரொபட் பிளேக்கிற்கு இலங்கை தொடர்பில் தனிப்பட்ட குரோதம் இருக்கலாம்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபா கரன் அடங்கலான புர தலைவர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பும் திட்டமொன்று அமெரிக்காவிடம் இருந்தது. இதனை இலங்கை ஏற்காத கோபமும் அமெரிக்காவுக்கு இருக்கும்.

வெளிநாடுகளில் உள்ள சில தமிழ் புலம்பெயர் அமைப்புகள் அரசியல் வாதிகளுக்கு தேர்தல் செய்ய உதவுகின் றன. இதுவும் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு காரணம் எனலாம்.

இந்து சமுத்திரத்தினூடாகவே 50 வீதமான பண்டம் போக்குவரத்து நடக்கிறது. பல்வேறு வகையிலும் இந்து சமுத்திரம் கேந்திர முக்கியத்து வம் வாய்ந்தது. 19ம் நூற்றாண்டில் அத்லாந்திக் சமுத்திரமும் 20ம் நூற்றாண் டில் பசுபிக் சமுத்திரமும் 21ம் நூற்றாண் டில் பசுபிக் சமுத்திரமும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தன. இந்த நிலை யிலே இந்து சமுத்திர பிரதேசம் குறித்து அமெரிக்கா கண்வைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஈராக், மியன்மார், ஈரான், இந்தோனேஷியா, மாலைதீவு, பங்களாதேஷ் என பல நாடுகளின் மீது அமெரிக்கா தலையீடு செய்துள்ளது.

எனவே இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டை விட அமெரிக்கா பிரேரணை கொண்டு வருவதில் வேறு நோக்கம் உள்ளது.

கேள்வி : மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்க முடியும் என நினைக்கிaர்களா?

பதில : மனித உரிமை பேரவையி லுள்ள நாடுகளை நோக்கும் போது அமெரிக்க பிரேரணையை தோற்கடிப் பது கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அமெரிக்கா தோல்வியடையும் யோசனை கொண்டுவராது. அதனால் யாரும் ஏற்கக் கூடிய இலகுவான பிரேரணையே கொண்டு வரும். லிபியா விற்கு எதிராகவும் மனிதாபிமான உதவி வழங்கும் பிரேரணையே கொண்டு வரப்பட்டது.

ஆனால் மனிதாபிமான உதவிகளுக்குப் பதிலாக அந்த மக்களுக்கு துப்பாக்கியே வழங் கப்பட்டது. இவ்வாறு உதவி வழங்கும் நோக்குடன் அமெரிக்கா தலையீடு செய்த நாடுகள் நாசமடைந்துள்ளன. எனவே மக்கள் அமெரிக்கா குறித்து நல்ல விழிப்புடன் இருக்க வேண்டும்.

கேள்வி : அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்டால் இலங்கையின் நிலை என்ன?

பதில : இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மற்றும் தலையீடுகள் இடம்பெறலாம். யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தி படையினருக்கு எதிராக செயற்படலாம். எந்த சாவலுக்கும் நாம் முகம் கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.

அமெரிக்காவின் அநியாயங்களுக்கு எதிராக முழு உலக நாடுகளும் இணைய வேண்டும் அதன் மூலமே அதனை முறியடிக்கலாம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com