|
||||
|
பொருளாதார சுபீட்சம்
நோக்கி முன்னேறும்
நாடுகளை குழப்புவதே
அமெரிக்காவின்
நோக்கம்
ஜெனீவா மனித
உரிமைப் பேரவை மாநாட்டில்
இலங்கைக்கு
எதிராக அமெரிக்கா
சமர்ப்பித்திருக்கும்
பிரேரணையை
நாம் நடைமுறைப்படுத்துவோமாயின்
அது நாடு
துண்டாடப்படவே
வழி வகுக்கும்
என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால
சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.
இந்த நிலைமையை
உணர்ந்து
கட்சி, நிற பேதங்களை
மறந்து ஒற்றுமையாக
இலங்கைக்கு
எதிரான சதிகளையும்
சூழ்ச்சிகளையும்
முறியடிப்பதற்காக
அணிதிரள்வது
அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜெனீவா மனித
உரிமை பேரவை மாநாட்டில்
இலங்கைக்கு
எதிராக அமெரிக்கா
சமர்ப்பித்துள்ள
பிரேரணைக்கு
எதிர்ப்புத்
தெரிவித்து
பொலன்னறுவை
மாவட்டத்தில்
வாழும் கத்தோலிக்க
மக்கள் விசேட தெய்வ
வழிபாடொன்றை
நேற்று நடாத்தினர்.
இந்த நிகழ்வில்
விசேட அதிதியாகக்
கலந்துகொண்டு
உரையாற்றும்போதே
அமைச்சர்
மேற்கண்டவாறு
குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில்
அமைச்சர்
மைத்திரிபால
சிறிசேன தொடர்ந்தும்
உரையாற்றுகையில்;
எமது நாடு கடந்த
முப்பது வருடங்களாகப்
புலிப் பயங்கரவாதத்திற்கு
முகம் கொடுத்தது. இதனால் இந்நாட்டில்
வாழுகின்ற
சிங்கள, தமிழ், முஸ்லிம்
மக்கள் மிகமோசமான
பாதிப்புக்களுக்கும்,
உயிரிழப்புக்களுக்கும்
முகம் கொடுத்தார்கள்.
பயங்கரவாதம் அழிக்கப்பட்டதன்
பலனாக எமது மக்கள்
அச்சம் பீதியின்றி
அமைதியாகவும்,
ஒற்றுமையாகவும்
வாழுகின்றார்கள்.
எமது நாடு துரித பொருளாதார
வளர்ச்சியை
நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அமெரிக்கா தலைமையில்
மேற்குலக
நாடுகள் முழு உலக
மக்களுக்கும்
எதிராகவே
செயற்படுகின்றார்கள். மேற்குலக நாடுகளில்
பொருளாதார
நெருக்கடி
ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்நாடுகளின்
மக்கள் வீதிகளில்
இறங்கி ஆட்சியாளர்களுக்கு
எதிராக மறியல் போராட்டங்களில்
ஈடுபட்டுள்ளார்கள்.
ஆனால் அண்மைக்
காலமாக அரபு நாடுகளும்,
சில ஆசிய
நாடுகளும்
பொருளாதார
சுபீட்சத்தை
நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவினதும், மேற்கு
நாடுகளினதும்
பிடிக்குள்
இருந்த பொருளாதார
சுபீட்சம்
ஆசிய நாடுகளுக்குக்
கைமாறி இருப்பதை அந்நாடுகள்
பொறுத்துக்
கொள்ள முடியாதுள்ளன.
அதனால் பொருளாதார
சுபீட்சத்தை
நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும்
நாடுகளில்
குழப்பங்களையும்,
சீரழிவுகளையும்
மாத்திரமல்லாமல்
அந்நாடுகளைத்
துண்டாடவும்
இந்நாடுகள்
நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளன.
அமெரிக்கா தலைமையிலான
மேற்கு நாடுகளின்
சூழ்ச்சிகளின்
காரணமாக லிபியாவும்,
சூடானும்
துண்டாடப்பட்டுவிட்டன. ஆப்கானிஸ்தான் தொடர்ந்தும்
மோசமாகப்
தாக்கப்படுகின்றது.
பாகிஸ்தானையும் தாக்குகிறார்கள்.
ஈராக்கை மூன்று
துண்டாக்கியுள்ளார்கள்.
ஈரானை தாக்க தயாராகிறார்கள்.
மாலைதீவுக்கும் இதனையே
செய்தார்கள்.
அமெரிக்காவும், மேற்கு நாடுகள் சிலவும் இங்கு பயங்கரவாதம்
முழுமையாக
ஒழிக்கப்பட்டதைத்
தவறான, பிழையான நடவடிக்கையாகப்
பார்க்கின்றன. பயங்கரவாதம் காரணமாக
எமது மக்கள்
அனுபவித்து
வந்த துன்ப
துயரங்கள்
குறித்து
இவர்கள் சிறிதளவேனும்
கவனம் செலுத்துகிறார்கள்
இல்லை.
எமது நாட்டில்
புலி பயங்கரவாதம்
முழுமையாக
ஒழிக்கப்பட்டாலும்
கடல் கடந்த
புலிகள் சக்தி மிக்க
நாடுகளுக்கு
எமக்கு எதிராகப் பொய்த் தகவல்களை வழங்கி சதிகளிலும்,
சூழ்ச்சிகளிலும்
ஈடுபட்டிருக்கின்றார்கள்.
அதன் வெளிப்பாடே
எமக்கு எதிராக அமெரிக்கா
பிரேரணை கொண்டு வந்திருக்கின்றது.
இதேபோல வெவ்வேறு
விதமான சதிகளும், சூழ்ச்சிகளும்
முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நடவடிக்கைகளின் ஊடாக இலங்கைக்குள்
மீண்டும்
பயங்கரவாதத்தைக்
கொண்டுவரவும்,
நாட்டில்
மீண்டும்
அழிவுகளை
ஏற்படுத்தவும்,
இரத்தம் ஓடச் செய்யவும்
வழி செய்யப்படுகின்றது. இதற்கு ஒரு போதும் எமது மக்கள்
இடமளிக்க
மாட்டார்கள்.
கடல் கடந்துள்ள
புலிகளைத்
திருப்திப்படுத்துவதற்காக
அமெரிக்கா
மனித உரிமை
மீறலில் ஈடுபட்டதாகக்
கூறுகிறது. மனித உரிமை பாதுகாப்பு
குறித்து
எம்மை குற்றஞ் சாட்ட அமெரிக்காவுக்கு
எந்த அருகதையும்
கிடையாது.
அவர்கள் ஈராக்கில்
இலட்சக்கணக்கான
அப்பாவி மக்களைப் படுகொலை செய்துள்ளார்கள்.
இருபது வருட வியட்நாம்
யுத்தத்தில்
ஆயிரக்கணக்கான
அப்பாவிகளைக்
கொன்றொழித்துள்ளார்கள்.
இதேநிலைதான் ஆப்கானிஸ்தானிலும்
நடக்கின்றது.
அமெரிக்காவின் பிரேரணைக்கு
எதிராக இந்நாட்டில்
வாழுகின்ற
தமிழ் மக்கள் கூட கடும்
எதிர்ப்புத்
தெரிவிக்கின்றார்கள். எமக்கு எதிராகத்
தெரிவிக்கப்படும்
மனித உரிமை
மீறல் குற்றச்சாட்டை
அவர்கள் நிராகரிக்கின்றார்கள்.
இது இலங்கைக்கு
மிக முக்கியமான
கால கட்டம்.
நாம் அமெரிக்காவின்
யோசனையை நடைமுறைப்படுத்தினால்
அது நாடு
பிளவுபடவும்,
துண்டாடப்படவுமே
வழி செய்யும்.
இந்த நடுநிலைமையை
உணர்ந்து
கட்சி, நிற பேதங்களை
மறந்து சகலரும் ஒற்றுமையாக
இலங்கைக்கு
எதிரான சதிகளையும்,
சூழ்ச்சிகளையும்
முறியடிப்பதற்காக
அணி திரளவேண்டும்
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |