Contact us at: sooddram@gmail.com

 

புலிகள் புரிந்த கொடூரங்களுக்கு முஸ்லிம்கள் வன்மையான கண்டனம்

கடந்த காலங்களில் இன அழிப்புக்காக எல்.ரீ.ரீ.ஈ.யினர் மேற்கொண்ட கொடூரமான செயற்பாடுகளை இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம்களும் வன்மையாகக் கண்டித் துள்ளனர். பிரிவினை கோரிப் போராடிய எல்.ரீ.ரீ.ஈ.யினரால் தமக்கு ஏற்பட்டிருந்த பல்வேறு பாதிப்புகள் மற்றும் கொடிய யுகத்தில் முஸ்லிம் சமூகத்தினர் எதிர்கொண்ட நிலைமைகள் குறித்தும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம், சிங்கள மக்கள் கொல்லப் பட்டமைக்கும் அவர்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர். 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 4ஆம் திகதி தனது ஊரான ஏறாவூரில் 173 பேர் எல்.ரீ.ரீ.ஈ.யினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவுகூர்ந்த ஏறாவூரைச் சேர்ந்த விவசாயியான அனீஸ், வாள்கள் மற்றும் ஆயுதங்களுடன் நுழைந்த எல்.ரீ.ரீ.ஈ.யினர் நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த அப்பாவிப் பொதுமக்களைப் படுகொலை செய்ததாகக் கூறுகின்றார்.

கர்ப்பிணிப் பெண்கள் கூட எல்.ரீ.ரீ.ஈ.யினரால் விட்டுவைக்கப்பட வில்லையென்றும், கைக்குழந்தைகள்கூட பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவிக்கின்றார். கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான முஸ்லிம் சமூகத்தினர் மீன்பிடி மற்றும் விவசாயத்தை நம்பியே இருந்தனர். தமது தொழில்களைச் செய்வதற்கு முட்டுக்கட்டையாகவிருந்த எல்.ரீ.ரீ.ஈ.யினர், முஸ்லிம் கிராமங்களுக்குள் புகுந்து தாக்குதல்களையும் நடத்தியிருந்தனர். பல ஏக்கர் விவசாயக் காணிகள் வேளாண்மை செய்யாமல் கைவிடப்பட்டது என்றும் அனீஸ் குறிப்பிட்டார்.

மோதல்கள் இடம்பெற்ற சூழ்நிலைகளில் வடக்கு, கிழக்கிலிருந்து முஸ்லிம் சமூகங்கள் பல்வேறு சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்ததாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். தமது தனிநாட்டுக் கோரிக்கையை நிறைவேற்றிக் கொள்வதற்காக எல்.ரீ.ரீ.ஈ.யினரால் மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்திகரிப்பின் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன், பல முஸ்லிம் கிராமங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களில் வங்கிகளை எல்.ரீ.ரீ.ஈ.யினர் கொள்ளையடித்தனர். முஸ்லிம்களின் நிலங்களைப் பறித்து தமது உறுப்பினர்களுக்கு வழங்கியதால் முஸ்லிம்கள் அச்சம் காரணமாகத் தமது இடங்களிலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மீன்பிடி மற்றும் விவசாயமே முஸ்லிம்களின் வாழ்வாதாரத் தொழில்களாகவிருந்தன. இதனைக் கூடச் செய்வதற்கு எல்.ரி.ரி.ஈ.யினர் அனுமதி வழங்கவில்லை என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.

அமைதியான இஸ்லாம் தொடர்பில் அச்சம் கொண்டிருக்கும் அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு மனித உரிமைகள் பற்றிக் கற்பிக்க முயற்சிப்பதுடன், தாம் செய்தவற்றை நியாயப்படுத்துவதற்கு முயல்வதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்துள்ளார். எல்.ரீ.ரீ.ஈ.யினரும் வடக்கில் இவ்வாறான இனப்படுகொலைகளையே மேற்கொண்டனர். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கு, கிழக்கில் கொல்லப் பட்டனர்.

அப்பாவி முஸ்லிம்களுக்கு எல்.ரீ.ரீ.ஈ.யினர் செய்த கொடுமைகளை மறந்துவிட்ட அமெரிக்கா, தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார். எல்.ரீ.ரீ.ஈ.யினர் அப்பாவி முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்தபோது, கண்களை மூடியிருந்த அமெரிக்கா தற்போது, மனித உரிமைகளைப் படிப்பிக்க வருவதாக தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார். அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்திருக்கும் பிரேரணை, தற்பொழுது நாட்டில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்கத்தைக் குழப்பி புதிய பிரச்சினைகளையே தோற்றுவிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

பள்ளிவாசல்களில் தொழுதுகொண்டிருந்த முஸ்லிம்களைப் படுகொலை செய்தமையானது எல்.ரீ.ரீ.ஈ.யினரின் உச்சகட்ட வன்முறையை வெளிக்கொணர்வ தாக ஊடகவியலாளரும், கலைஞருமான நிலார்.என்.காசிம் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவம் உலகில் எந்தவொரு பகுதியிலும் இடம்பெற்றிரு க்காது. எல்.ரீ.ரீ.ஈ.யினர். ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை துப்பாக்கிகளால் சுட்டு அவர்களின் சொந்த இடங்களிலிருந்து விரட்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com