Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையை சீரழிக்க முயலும் அமெரிக்க தலையீட்டிற்கு தமிழர்கள் துணைபோக கூடாது

இலங்கை அரசியல் சாசனத்திற்கு கொண்டு வரப்பட்ட 13வது திருத்தச் சட்டம் இன்னும் சரியான முறையில் அமுலாக்கப்படவில்லை. 1987ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்த 13வது திருத்த சட்ட மூலத்தைக் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முனையவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டம் ஒரு ஆரம்பமே ஆகும். அதை வைத்துக் கொண்டே பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு மென்மேலும் நட வடிக்கை எடுக்க வேண்டும். சிங்கள மக்களின் ஆதரவின்றி, எந்த அரசியல் தீர்வையும் ஏற்படுத்த முடியாது.

தென்னி லங்கையில் இருந்துவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இந்நாட்டு பெரும்பான்மை சிங்கள மக்களின் முழுமை யான ஆதரவு இருக்கின்ற காரணத்தினால், இந்தத் தலைவருக்கே இனப்பிரச்சினைக்கு எல்லா சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை கொண்டுவர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுமார் ஒரு மாத காலமாக ஜெனீவாவில் தங்கியிருக்கும் அருண் தம்பிமுத்து, அமெ ரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டு வந்திருக்கும் பிரேரணைக்கு எதிராக, இலங்கையின் உண்மை நிலையை விளக்கிக் கூறுவதற்காக தனது முழுமையான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தினகரனுக்கு அளித்த பிரத்தி யேக பேட்டியிலேயே இவ்வாறு தெரி வித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

1950ம் ஆண்டிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்பட்டு வருகின்றனர். அவ்வமைப்பு அக்காலப்பகுதியில் வேறு பெயர்களில் இயங்கினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றியே வந்திருக்கிறது.

த.தே. கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளின் மூலம் சிங்களத் தலைவர்களுடன் யதார்த்த பூர்வமாக பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்கு பதில் இலங்கையில் ஆயுத போராட்டத்தை நடத்தி அதன் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்ந்தெடுத்து சர்வதேச சமூகத்தை இலங்கையின் உள் விவகாரங்களில் தலையிடச் செய்து அதன் மூலம் தமிழர் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்ற தவறான கொள்கையை கடைப்பிடித்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

1956ம் ஆண்டில் சிங்கள மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இன்று ஜனாதிபதி அவர்கள் தன்னுடைய சிறந்த ஆளுமைத்திறன் மூலம் சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக மும்மொழி திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி யிருக்கிறார்.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து தமிழ் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் சிங்கள மக்களும் நாட்டின் ஏனைய சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைப்பது அவசியம்.

ஐக்கிய தேசியக் கட்சியினர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அர சாங்கம் கொண்டு வர முயற்சி செய்த அரசியல் சாசன சட்டத்திருத்த நகலை பாராளுமன்றத்திற்குள்ளே கிழித்து எறிந்த மையும் நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

அமெரிக்க அரசாங்கம் இலங்கையில் தனது ஈடுபாட்டை அதிகரிப்பதற்காக மேற் கொண்டுவரும் தற்போதைய முயற்சிகள் தமிழர்களுக்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை. இலங்கையைப் பற்றி எந்தவொரு நாடும் கவலைப்படப் போவதுமில்லை.

எனவே, நாம் அனை வரும் ஒன்றி ணைந்து ஒரு சமூகத் தீர்வை ஏற்படுத்துவது அவசியம்.

1956ல் சிங்கள மட்டும் சட்டம் நிறை வேற்றப்பட்டு 56 வருடங்கள் கடந்து விட்ட இன்றைய சூழ்நிலையில், தமிழ் மொழிக்கு அரசாங்கம் சிறந்த முறையில் உரிமைகளை பெற்றுக் கொடுத்துள்ளது. ஆரம்ப கட்டம் முதல் தமிழ்த் தலைவர்கள் எதிரும் புதி ருமாக இருந்துள்ளார்கள். தமிழ் தலை வர்களும் சிங்கள முற்போக்குவாதிகளும் சேர்ந்து செயற்பட்டிருந்தால் தமிழ் இனத்தின் நிலை இவ்விதம் இன்று இருந்திருக்காது.

மேற்கத்திய நாடுகள் உண்மையாகவே இலங்கை மக்கள், தங்கள் வாழ்க்கையை கட்டியமைக்க வேண்டுமென்று விரும் பினால், அநாவசியமான தலையீடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வல் லரசுகளின் விளையாட்டின் மூலம் நாம் பல தடவைகள் பிரச்சினைகளை எதிர் நோக்கியிருக்கிறோம்.

இந்த பிரேரணை மூலம் இந்நாட்டில் தலையிடுவதையும் நாட்டின் ஒருமைப் பாட்டையும், இறை மையையும் பறிக்க வல்லரசுகள் எத்தனிக் கலாகாது. இதன் மூலமே எமது மக்களின் உரிமையை நாம் பாதுகாக்க முடியும் என அருண் தம்பி முத்து மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com