Contact us at: sooddram@gmail.com

 

மே 1 அன்று முழு வேலை நிறுத்தம்-அமெரிக்க வரலாற்றில் புதிய திருப்பம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவில் கடந்த ஆறு மாதங்களாக கைப் பற்றுவோம் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தப் போராட்டங்கள் மீது அமெரிக்கா கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த வாரத்தில் மட்டும் இதுவரையில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டிவிட்டது. முதன்முதலில் கடந்த ஆண்டு செப்.17 ஆம் தேதியன்று சுக்கோட்டி பூங்காவில்தான் இந்தப் போராட்டம் துவக்கப்பட்டது. ஆறு மாதங்கள் நிறைவு பெறுவதையொட்டி, அந்தப் பூங்காவை மீண்டும் கைப்பற்றப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க கைது மற்றும் மிரட்டல் போன்ற வழிகளில் காவல்துறையினர் இறங்கினர்.

எந்தவிதத் தொய்வும் இல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால், சுக்கோட்டி பூங்கா முன்பாக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுவிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நீதிகோரும் அமைப்புகள் ஆகியவை ஆதரவு தெரிவித்திருந்தன. தங்கள் அமைப்புகளின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்கள். நாடு முழுவதும் நடந்து வரும் அடக்கு முறையைக் கண்டித்து வரும் மே 1 ஆம் தேதியன்று முழு வேலை நிறுத்தம் நடத்த பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அமெரிக்க மக்கள் அனைவரும் பணிகளுக்குச் செல்லாமலும், மாணவர்கள் வகுப்புகளில் பங்கேற்காமலும் இருக்க வேண்டும் என்று அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அந்த ஒரு நாளில் மக்கள் எந்த செலவையும் செய்ய வேண்டாம் என்ற வித்தியாசமான கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறார்கள்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கைப்பற்றுவோம் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மன்ஹாட்டன் நகரைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டானிஸ் ரோட்ரிக்ஸ் காவல்துறையினரின் அடக்குமுறை நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டித்தார். போராட்டக்காரர்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் மன்ஹாட்டன் நகரக் கவுன்சிலில், போராடுபவர் உரிமைப் பாதுகாப்பு மசோதா கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவரது கருத்துக்கு தொழிற்சங்கங்கள், சமூக அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. நகரக்கவுன்சில் உறுப்பினர்களும் இத்தகைய மசோதாவை நிறைவேற்றத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் பொது இடங்களை ஆர்ப்பாட்டங்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்ற சட்டத்தில் ஒபாமா கையெழுத்திடுகிறார். அது அமலுக்கு வந்துவிட்டால் நகர கவுன்சில் தீர்மானம் செல்லாததாகி விடும்.

ஆசிரியர்களும் போராட்டக் களத்தில்லாஸ் ஏஞ்சல்சில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பேரணியாக வலம் வந்துள்ளனர். கல்விக்கான பட்ஜெட்டில் எக்கச்சக்க வெட்டை ஒபாமா தலைமையிலான அரசு செய்யப் போகிறது. ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின்வேலைபறிபோகப்போகிறது. இதுவரையில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணிநீக்கம் செய்யப்போகிறோம் என்கிற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்தான் அதிகமான அளவில் ஆசிரியர்கள் வேலையிழக்கிறார்கள். இவர்களுக்குப் பதிலாக புதிதாக ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை. அப்படி நியமிக்காத பட்சத்தில் சுமார் 40 விழுக்காடு பள்ளிக்கூடங்கள் இழுத்து மூடப்பட்டாலும் ஆச்சரியமில்லை. இது ஒட்டுமொத்த கலிபோர்னியாவின் கல்வித்துறையையே முடக்கி விடும் என்கிறார்கள் ஆசிரியர்கள். வேலை நீக்கத்திற்கு அடையாளமாக வழங்கப்பட்டுள்ள இளஞ்சிவப்பு அட்டைகளைக் கைகளில் ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்றனர்.

அமெரிக்கக் கல்வித்துறை தனது சொந்த ஊழியர்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமூகத்தையே மரியாதை இல்லாமல் நடத்துகிறது என்கிறார் போராடும் ஆசிரியர்களில் ஒருவரான ஜோஸ் லாரா. நடைமுறையில் என்ன பிரச்சனைகள் என்பது பற்றிக் கவலைப்படாமல் அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஐக்கிய ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான வாரன் பிளெட்சர், கலிபோர்னியா நிர்வாகம் மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்தால் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள். அதோடு, ஒட்டுமொத்த மாகாணத்தின் கல்வித்துறையே முடங்கிவிடும் என்கிறார். தங்களின் வேலை நீக்கம் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்பு என்பதோடு நிற்காமல், மாணவர்களின் கல்வி முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிடும் என்று எச்சரிக்கை மணியை ஒலிக்க விடுகிறார்கள் ஆசிரியர்கள். மாகாண நிர்வாகமோ, தந்திரமான மக்களை முன்னிறுத்துகிறார்கள். வரியைக் கூட்டினால் இதைச் சமாளித்துவிடலாமே என்று மக்களை மிரட்டிக் கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறையை முடக்கும் இந்தத் திட்டத்தோடு, முதியோர் கல்வி, இளங்கலை மற்றும் சிறுவர்களுக்கான திட்டங்கள் ஆகியவற்றை இல்லாமல் போகச் செய்யும் திட்டம் அமெரிக்க அரசுக்கு உள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் பட்ஜெட் பற்றாக்குறையைப் போக்குவதற்கான வேலைகளை நாங்கள் முடித்தாக வேண்டும் என்கிறது நிர்வாகம். இந்நிலையில்தான் நாடு முழுவதும் நடக்கும் கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒரு பகுதியாக கல்வித்துறை ஊழியர்களும் பங்கேற்கப் போகிறார்கள். மே 1 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் நாடு தழுவிய முழு வேலை நிறுத்தத்தில் அவர்களும் களமிறங்குகிறார்கள். 99 சதவிகித மக்களில் நாங்களும் ஒருபகுதிதான் என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் வகையில் பல்வேறு துறையினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com