Contact us at: sooddram@gmail.com

 

அச்சுறுத்தலால் பொய் சொன்னேன் - வைத்தியர் டி.வரதராஜா

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாகவும் தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தினர் எவ்விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவில் சேவையாற்றிய வைத்தியர் டி.வரதராஜா தெரிவித்துள்ளார். மனித உரிமை கண்காணிப்பகம் ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அனுபவத்தை தெரிவித்ததன் பின்னர் பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவருடைய சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு, பி.பி.சி.யுடனான நேர்காணலை டாக்டர் வரதராஜா நிராகரித்துவிட்டார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை, நான்காவது மாடியில் தடுத்து வைத்திருந்த காலத்தில், பொய் கூறுமாறு அரசாங்கம் தனக்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இரகசிய பொலிஸ் முன்னிலையில் மீண்டும் ஆஜராகுமாறு வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், உங்களால் வருகை தர முடியாது விடின் உங்களுடைய தங்கையை பொலிஸுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் வரையிலும் யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அரச வைத்தியர்கள் பலரில் டாக்டர்  ி.வரதராஜாவும் ஒருவராவார். அவர் உள்ளிட்ட வைத்தியர்கள் ஐந்து பேர், அந்த நாட்களில் யுத்த களம் தொடர்பில் பி.பி.சி சிங்கள சேவை உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு தொடர்;ச்சியாக தகவல்களை வெளியிட்டனர்.

யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி ஐந்து வைத்தியர்களும், பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டதுடன் 2009ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது புலிகளின் அச்சுறுத்தலினால் யுத்த களம் தொடர்பில் கருத்துகளை தெரிவித்ததாக கூறினர். அதற்கு பின்னர் அவர்கள் அனைவருக்கும் ஓமந்தையில் சேவையாற்றுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்தது.

யுத்த காலத்தில் தான் எவ்விதமான மிகைப்படுத்தல் செய்திகளையும் வழங்கவில்லை என்றும் தான் அக்காலப்பகுதியில் தான் கூறியவை உண்மையானவை என்றும் தான் வழங்கிய செய்திகள் உண்மை என்பதை அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களிடம் வருவர். ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு புலிகள் எங்களிடம் கூறவில்லை என்றும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார்.

விசேடமாக நாங்கள் சேவையாற்றிய தற்காலிக வைத்தியசாலைகள் பலவற்றின் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறியுள்ள வரதராஜா, யுத்தத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் செஞ்சிலுவை சங்கத்தினால் படுகாயமடைந்த 9,000 பேர், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களிலிருந்து திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

யுத்த வலயத்தில் 3 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த வேளையில் அங்கு 80 ஆயிரம் பேர் மாத்திரமே எஞ்சி இருந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மருந்துகள்,சாப்பாடு உள்ளிட்ட சகலதையும் 80 ஆயிரமு; பேருக்கும் போதுமான அளவு கொடுத்தோம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் மயக்கமடைய செய்யும் மருந்து இல்லை, இரத்தம் கொடுக்கவில்லை, அதனால் பெரிய பெரிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மருந்துகள் இன்றி, சிகிச்சை இல்லாமல் மரணமடைந்தனர் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.

எனினும்
யுத்த காலத்தில் வைத்தியர்களால் முன்வைக்கப்பட்ட அறிக்கை உண்மையானது அல்ல என்று இலங்கை அரசாங்கம் அடிக்கொருதடவை கூறிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com