|
||||
|
ஜனாதிபதியின்
தலைமையின் கீழ் பிரச்சி;னைக்கு தீர்வு காண முடியும்
- வடக்கு முதல்வர் புதிய ஜனாதிபதியாகிய உங்கள் தலைமையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், 1948லிருந்து தொடரும் தேசிய பிரச்சினைக்கு உங்கள் தலைமையிலான அரசாங்கம் நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன், எமது மாகாணத்திற்கு வருகை தந்துள்ள உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். தேசிய பிரச்சினைக்கு மூளையின் மூலமன்றி இதயத்திலிருந்தே தீர்வு காண முடியும். மனங்களில் மாற்றமேற்பட்டு சிந்தனை மாற்றம் ஏற்படுதல் இதற்குமிக அவசியமாகும். பெளத்த மதத்தின் முக்கியமான பெரியார்கள் வாழ்ந்த பொலன்னறுவையில் வாழும் உங்களுக்கு அன்றை மதப்பெரியார்களைப் போன்றே மக்களின் மனங்களில் மாற்றமேற்படுத்துவது இலகுவானது. உங்களால் அது முடியும். நான் எனது சிறுபராயத்தில் அநுராதபுரம் மகா போதிக்கருகில் வாழ்ந்தவன். எமது இந்து மக்களும் மஹா போதிக்கு பெரும் கெளரவமளித்து வருகின்றனர். மஹா போதியானது அன்பு கருணை போன்றவற்றை மனதிற்கு வழங்குகின்றது. இதனால் அதனை அண்டி வாழ்ந்த எமக்கும் அன்பும் கருணையும் எப்போதும் எமது மனதில் நிலைத்துள்ளது. எமது தேசிய பிரச்சினையைப் பொறுத்த வரை 1948 லிருந்து தொடர்கிறது. சில காலங்களில் சிலர் இதனூடே இனவாதத்தைக் கிளப்பினர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட பல விடயங்கள் பல்வேறு சந்தேகங்களுக்கே வழி வகுத்தன. 13வது திருத்தம் ரணசிங்க பிரேமதாச காலத்திலும் அதற்கு பின்னரான நீதிமன்ற தீர்ப்பிலும் பலமிழந்திருந்தது. 18வது திருத்தம் மற்றும் ‘திவிநெகும’ சட்டம் மூலமும் இது பல மற்ற தாக்கப்பட்டதை சகலரும் உணர்வர். 1987 காலங்களில் தலைவர் அமிர்தலிங்கமும, ஆர். சம்பந்தனும் 13வது திருத்தம் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் மார்க்கமல்ல என்பதை வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மத்திய அரசின் கருத்தை மாகாண அரசு ஏற்கவேண்டும் என்ற விதத்திலேயே செயற்பட்டார். வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை இரண்டு மாகாணங்களாக இவை விருந்தபோதும் பாரதூரமான ஒரேவிதமான பிரச்சினைகளைக் கொண்ட மாகாணங்களாகவே இருந்தன. இரண்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள் என்ற ரீதியில் இவற்றுக்கு முக்கிய கவனம் செலுத்தி செயற்படுவது முக்கியமாகும். மேலும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்களின் பிரச்சினை பற்றி ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். வழக்குத் தொடரப்படாதவர்களை மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார். அரச துறைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புதல் மற்றும் சுன்னாகம் குடிநீர் பிரச்சினை போன்றவை தொடர்பில் ஜனாதிபதி தமது மேலான கவனத்தை செலுத்தி தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |