Contact us at: sooddram@gmail.com

 

நெதன்யாகுவின்

கொங்கிரஸ் அவை உரைக்கு ஒபாமா, ஈரான் கண்டனம்

ஈரான் விவகாரத்தில் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையை விமர்சித்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஆற்றிய உரைக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பாராளுமன்றமான கொங்கிரஸ் அவையில் நேற்று முன்தினம் உரையாற்றிய நெதன்யாகு, ஈரான் அணுத் திட்டம் தொடர்பில் உடன்பாடொன்றை எட்டுவதற்கான பேச்சு வார்த்தைகள் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு பதில் அதனை எட்டுவதற்கே வழிசெய்யும் என்று குற்றம் சாட்டினார். எனினும் நெதன்யாகு இந்த விவகாரத்தில் சாத்தியமான மாற்றுத் திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை என்று ஒபாமா குறிப் பிட்டுள்ளார். அதேபோன்று அமெரிக்க ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஈரானும் நெதன்யாகுவின் உரைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையின் ஆலோசனையை பெறாமல் குடியரசு கட்சி சபாநாயகரே நெதன் யாகுவை பாராளுமன்றத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்திருந்ததால் நெதன்யாகுவின் அமெரிக்க விஜயம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த விஜயத்தில் தாம் நெதன்யாகுவை சந்திப்பதில்லை என்று ஒபாமா அறிவித்திருந்தார். நெதன்யாகு இன்னும் இரு வாரத்தில் இஸ்ரேலில் சவாலான பொதுத் தேர்தலை எதிர் கொண்டுள்ளார்.

சர்வதேச சக்திகளுடன் இடம்பெறும் ஈரானின் அணுத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மார்ச் மாதம் இறுதிவரையே தீர்வொன்றை எட்டுவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் முழு உலகுக்குமே ஈரான் அச்சு றுத்தலாக இருப்பதாக அமெரிக்க கொங்கிரஸ் அவையில் நெதன்யாகு எச்சரித்தார். ஈரான் தம்மை நம்ப முடியாது என்பதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நிரூபித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஈரான் அணுத்திட்டம் குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜவாத் சரீப் மற்றும் அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி கடந்த செவ்வாயன்று சுவிட்சர்லாந்தில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடொன்றை எட்டுவதற்கான வரையறை களையும் நெதன்யாகு விமர்சித்தார். "மோசமான உடன்பாட்டை விட உடன்பா டொன்று எட்டாமலிருப்பது மேல் என்று நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம்" என்று குறிப்பிட்ட அவர், "இது ஒரு மோசமான உடன்பாடு, மிக மோசமான ஒரு உடன்பாடு, இது இல்லாமல் இருப்பதே எமக்கு சிறந்ததாக இருக்கும்" என்றார்.

கடுமையான சர்வதேச கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் ஐ.நா. கண்காணிப்பாளர்களிடமிருந்து மறைத்து மற்றும் மோசடி செய்து ஈரான் சிறந்த முறையில் காய் நகர்த்துகிறது என்றும் நெதன்யாகு குறிப்பிட்டார்.நெதன்யாகுவின் உரைக்கு கொங்கிரஸ் அவையில் அமர்ந்திருந்த உறுப்பினர்களிடம் உற்சாக வரவேற்பு கிடைத்தபோதும் துணை ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பெரும்பாலான ஜனநாயக கட்சியினர் பங்கேற்கவில்லை.

மக்களவையின் சிறுபான்மை தலைவரான நான்சி பொலேசி நெதன்யாகுவின் உரைக்கு கரகோசமிடுவதை தவிர்த்துக் கொண்டதோடு பின்னர் அறிக்கை ஒன்றையும் வெளியிட் டிருந்தார். அதில் நெதன்யாகுவின் உரை அமெரிக்காவின் புலனாய்வை அவமாதிப்ப தாகவும் தமக்கு கண்ணீரை வரவழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நெதன்யாகு ஆற்றிய உரையை தம்மால் பார்க்க முடியாமல் போனதாக குறிப்பிட்டிருக்கும் ஒபாமா, எழுத்துப் பிரதியை பார்த்ததில் அந்த உரையில் புதிதாக எதுவும் இல்லை என்பதை கண்டறிந்ததாக தெரிவித்தார். "உடன்பா டொன்றை எட்டாமல் இருப்பதற்கு பிரதமரின் உரையில் எந்த மாற்றும் குறிப்பிடப் பட்டிருக்கவில்லை. ஈரான் மீண்டும் ஒருமுறை எந்த நிபந்தனையும் இன்றி எமக்குத் தெரியாமல் தனது அணுத் திட்டத்தை செயற்படுத்தவே அது வழிவகுக்கும்" என்று ஒபாமா சுட்டிக்காட்டினார்.

மாற்று வழி இல்லாமல் ஈரான் மீது பொருளாதார தடைகளை மாத்திரம் விதிப்பது போதுமானாதாக இல்லை என்றும் கூறினார்.மறுபுறத்தில் நெதன்யாகு சலிப்பூட்டும் வகையில் திரும்பத் திரும்ப ஒன்றையே சொல்வதாக ஈரான் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. "ஈரானோபோபியா உரை டெல் அவிவ் கடும்போக்காளர்களின் தேர்தல் பிரசார மோசடி" என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மாரிசி அப்கான் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அணுத்திட்ட விவகாரத்தில் தீர் வொன்றை எட்டுவதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், nஜர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஈரான் அணு செயற் பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு மாற்றாக அதன் மீதான பொருளாதார தடைகளை தளர்த்துவது குறித்து இந்த ஆறு நாடுகளும் சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தியாரிக்க முயற் சிப்பதாகவே மேற்குலக நாடுகள் அச்சம் வெளியிட்டு வருகின்றன. ஆனால் இந்த குற்றச்சாட்டை நிராகரிக்கு ஈரான் அமைதியான தேவைக்காகவே அணு சக்தியை பயன்படுத் துவதாக கூறுகிறது. இது குறித்த பேச்சுவார்த்தையில் மார்ச் இறுதிக்குள் உடன்பாடோன்றுக்கான எல்லையை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜ{ன் கடைசியில் ஒரு விரிவான உடன்பாடொன்றை எட்ட கெடு நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com