Contact us at: sooddram@gmail.com

 

சகல சமூகங்களையும் திருப்திப்படுத்தும் தீர்வுகளே வெற்றிபெற முடியும்

நாட்டின் சகல சமூகங்களையும் திருப்திப்படுத்தக் கூடிய தீர்வுகளே வெற்றிபெற முடியும். எந்த வொரு தரப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீர்வுகாண முற்பட்டால் அதில் வெற்றியடைய முடியாது. சுனாமி கட்டமைப்பு என்று திணிக்கப்பட்ட தீர்வு முயற்சி தோல்வியில் முடிந்தது அதற்குச் சான்றாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 23 ஆவது பேராளர் மாநாடு வவுனியா புதிய நகர மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் நடைபெற்ற போது அங்கு பிரதான உரையை ஆற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். நூர்தீன் மஷர் அரங்கில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது:-

வன்னிப் பெருநிலப் பரப்பின் நுழைவாயிலாக மதிக்கப்படும். வவுனியாவில் எமது கட்சியின் 23 ஆவது பேராளர் மாநாடு நடைபெறுவதற்கு பிரதான காரணம் இந்த வன்னி மண்ணில் பிரிந்த சென்ற துரோகிகளின் சவால்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும், அட்டகாசங் களுக்கும் இந்தக் கட்சி முகம் கொடுத்திருப்பதாகும்.

இடம்பெயர்ந்த வன்னி மாவட்ட வாக்காளர்களை மீளக் குடியேறிய இட ங்களில் தேர்தல் இடாப்புகளில் பதிவு செய்வது தொடர்பில் நாம் இன்னமும் அரசாங்கத்துடன் பேசி வருகின்றோம். வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் அநேகரது வாக்குரிமை பறிபோவதன் விளைவாகத் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் ஆபத்து உண்டு.

தீர்வுகளைத் திணிக்க முடியாது. அவை இந் நாட்டில் வாழும் சகல சமூகத்தினரையும் திருப்திப்படுத்துவனவாக இருக்க வேண்டும்.

சுனாமிக் கட்டமைப்புக்கு என்ன நேர்ந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். சுனாமி பேரவையில் ஏனைய சமூகத்தினரின் இழப்புக்குச் சற்றும் குறையாத இழப்பு இந் நாட்டின் முஸ்லிம் சமூகத்திற்கும் நேர்ந்திருந்தது.

இலங்கையின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க பிறசக்திகள் முயற்சிக்கின்றன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற முறையில் எமது ஆதரவை நாம் வழங்கி வருகின்றோம்.

வெளிநாட்டு சக்திகள் வீட்டோ (ரத்து) அதிகாரம் கொண்ட வல்லரசு நாடுகளுக்கு ஓர் அணுகுமுறையையும், இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு இன்னொரு விதமான அணுகுமுறையையும் கையாள்கின்றன.

அரசாங்கத்தின் பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாட்டை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். பிரச்சினைகளுக்கான நியாயமான தீர்வுகளை பேச்சு வார்த்தைகளினூடாகக் காண வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை நாம் நடுநிலையான போக்கை கடைப்பிடித்து வருகின்றோம்.

நாம் பின்பற்றும் இஸ்லாம் சமயமும் அதனையே வலியுறுத்துகின்றது. எந்தவொரு முடிவையும் நாம் தயக்கமின்றி துணிச்சலுடனேயே மேற்கொள்கின்றோம்.

இந்த நாட்டில் நாம் இரண்டாவது சிறுபான்மை சமூகத்தினராக வாழ்ந்து வருகின்றோம்பெரும்பான்மைச் சமூகமும், முதலாவது சிறுபான்மைச் சமூகமும் ஆயுதங்களை ஏந்திப் போராடினர்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் பெரும்பான்மைச் சமூகம் தோல்வி மனப்பான்மையோடு இருந்தது. கடந்த இரண்டு மூன்று வருடங்களாக முதலாவது சிறுபான்மைத் தமிழ் சமூகம் தோல்வி மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஏதோ ஒரு தரப்பு தோல்வி மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டு வருகின்றது. இந்நாட்டு முஸ்லிம் சமூகம் ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. இலங்கை முஸ்லிம்கள் யுத்த நிறுத்த காலத்தில் பாதிப்புக்களைச் சந்தித்திருக்கின்றனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வகி பாகத்தையும் அதன் பிரயோக வலுவையும், வீச்சையும் அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும், சர்வதேச சமூகமும் நன்கு தெரிந்து வைத்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தை கறுப்புக் கண்ணாடியின் ஊடாகப் பார்க்கின்றனர். பந்தியின் கடைசியில் எமக்கு ஓர் ஆசனத்தைப் போட்டு அதில் அமரச் சொன்னால் அதில் போய் எங்களால் உட்கார முடியாது. அரசியல் துறவறம் பூண வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாம் கோழைகள் அல்ல. வீரியத்துடன் செயற்படுவோம்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com