Contact us at: sooddram@gmail.com

 

இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தி

சம்பந்தன் எம்.பி. யின் அறிவிப்பு நாட்டில் உருவாகியுள்ள புரட்சிகர மாற்றமாகும் - திஸ்ஸ

இலங்கையின் தேசியக் கொடியை ஏந்தி நிலையான அரசியல் தீர்வுக்கு தயார் என்ற சம்பந்தன் எம்.பி.யின் அறிவிப்பு நாட்டில் உருவாகியுள்ள புரட்சிகரமாற்றமாகும். அரசாங்கமிதனை வரவேற்க வேண்டும் என்று சி÷ஷ்ட அமைச்சரும் இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருந்த சர்வகட்சிக் குழுவின் தலைவருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்பதற்கு எந்தத் தரப்பும் நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐ.தே.க. தலைமையிலான பொது எதிர்க்கட்சிகளின் மே தின கூட்டத்தில் எதிர்ககட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி. யுமான இரா. சம்பந்தன் தேசியக் கொடியை ஏந்தியதுடன் நிலையான அரசியல் தீர்வுக்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென்று அறிவித்திருந்தார்.

இந்த கருத்து குறித்து விஞ்ஞான தொழில்துட்பத் துறை சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக சிரேஷ்ட அமைச்சர் மேலும் கூறியதாவது,

தேசியக் கொடியை கையிலெடுத்து அசைக்கும் சம்பந்தன் எம்.பி.யின் மனமாற்றம் நாட்டில் இடம்பெறப் போகும் புரட்சிகரமான இன நல்லிணக்கத்திற்கு சிறந்ததொரு எடுத்துக் காட்டாகும். இது எனக்கு அளப்பரிய மகிழ்ச்சியை அளிக்கின்றது. அரசாங்கம் இதனை வரவேற்க வேண்டும்.

ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அமையவே அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.

இது தொடர்பில் கூட்டமைப்பு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நிபந்தனை

அத்தோடு பாராளுமன்றத் தெரிவுக் குழு ஊடாக பேச்சு வார்த்தைகளை நடத்தி கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்வதன் மூலமே நிலையான அரசியல் தீர்வை நோக்கி நகர முடியும். ஆனால் பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்து கொள்வதற்காக அரசாங்கமோ ஐ.தே.க. வோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வேறெந்த அரசியல் கட்சிகளும் நிபந்தனைகளை விதிக்கலாகாது.

நிபந்தனைகள் விதிப்பதென்பது அரசியல் தீர்வை நோக்கி நகர்வதில் முட்டுக்கட்டையை ஏற்படுத்தும். எனவே நிபந்தனைகளின்றி பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

எனவே தமிழ், தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் தெரிவுக் குழுவுக்கு வர வேண்டும்.

எதிர்க்கட்சிகள்

தெரிவுக் குழுவில் அங்கம் வகிப்பதன் மூலம் அரசியல் தீர்வு தொடர்பான ஆளும் தரப்பு எதிர்த்தரப்பினரின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள முடியும்.
அவ்வாறான நிலைமை இல்லாமல் தீர்வைக் கண்டு விட முடியாது.

ஐ.தே.க.

அரசியல் தீர்வு என்னவென்பதை அரசாங்கம் அறிவிக்க வேண்டும். அதன் பினனர் நிபந்தனையுடன் தெரிவுக் குழுவில் கலந்து கொள்ளத் தயாரென்ற பிரதான எதிர்க்கட்சியான ஐ.தேக. வின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே நிபந்தனைகளை கைவிட்டு ஐ.தே.க. தெரிவுக் குழுவில் இணைய வேண்டும்.

சர்வகட்சி மாநாடு

சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட கட்சிகள் மத்தியில் இணக்கப்பாடுகள் காணப்பட்டன.
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாகவும் பெரும்பாலான விடயங்களில் ஜாதிக ஹெல உறுமயவும் இணங்கியது.

ஆனால் பொலிஸ், காணி உட்பட சில விடயங்கள் தொடர்பில் மத்திய அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேணடும் என்ற விடயம் தொடர்பில் இறுதித் தீர்வை காண முடியாமல் போனதால் ஹெல உறுமய வெளியேறியது. எனவே இவை தொடர்பில் மீண்டும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

அரசியலமைப்பு

அதிகாரத்தை பரவலாக்குவதற்காக அரசியலமைப்பில் பல திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும்.
மத்திய அரசாங்கத்தையும் பங்குதாரர்களாக்கிக் கொண்டு அதிகாரங்களை மாகாணங்களுக்கு பரவலாக்குவது தொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தேவையானால் புதிய அரசியலமைப்பையும் உருவாக்கலாம்.
___

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com