|
||||
|
1990ல்
முஸ்லிம்கள்
விரட்டப்பட்ட
போது ஆயர்
இராயப்பு
மெளனம்
தமிழ் - முஸ்லிம் மக்களிடையே
இன விரிசலை
ஏற்படுத்தி
நல்லுறவை
சீர்குலைக்கின்றது
TNA
தமிழ், முஸ்லிம்
உறவை சீர்குலைத்து
இனங்களுக்கிடையே
பிளவை உருவாக்கி
அரசியலில்
குளிர்காய
தமிழ் கூட்டமைப்பு
பாராளுமன்ற
உறுப்பினர்கள்
மீண்டும்
முற்பட்டுள்ளதாக
வன்னி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்
ஹுனைஸ் பாரூக் எம்.பி. தெரிவித்துள்ளார். மன்னார்
ஆயர் இராயப்பு
யோசப்பின்
நடவடிக்கைகள்
தொடர்பாக
பாராளுமன்றத்தில்
எமது கட்சியின்
தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனால்
தெரிவிக்கப்பட்டிருந்த
நியாயமான
குற்றச்சாட்டுக்களை
பூதாகரப்படுத்தி,
இனங்களுக்கிடையேயான
நல்லுறவை
சீரழிக்க
கூட்டமைப்பு
எம்.பிக்களான
வினோநோகராதலிங்கமும்,
மாவை சேனாதிராஜாவும்
முயற்சி செய்வதாக ஹுனைஸ் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
வடக்கிலிருந்து 1990 ம் ஆண்டு
முஸ்லிம்கள்
உடுத்த உடையுடன் புலிகளால்
விரட்டப்பட்ட
போது வாய்மூடி
மெளனம் காத்தவர்தான்
மன்னார் ஆயர் இராயப்பு
யோசப் அவர்கள். புலிகளால் விரட்டப்பட்ட
முஸ்லிம்கள்
மீண்டும்
தமது தாயக
பூமியில்
குடியேற முயற்சிக்கும்
போது மன்னார்
ஆயர் தடையாக
இருப்பது
வேதனையாயுள்ளது.
மன்னார் மாவட்டத்தில்
சன்னார் என்ற கிராமத்தில்,
அகதி முஸ்லிம்கள்
மீண்டும்
தமது பூர்வீக
காணியில்
குடியேற முற்படும்
போது அதையெதிர்த்து
ஜனாதிபதிக்கு
அவர் கடிதமொன்றை
எழுதியிருப்பது
முஸ்லிம்கள்
மத்தியில்
வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
விடத்தல்தீவு முஸ்லிம்களுடனோ,
அந்த முஸ்லிம்களின்
பிரதிநிதிகளுடனோ
அல்லது பள்ளிவாசல்
நிருவாகத்தினரு
டனோ கலந்து
பேசி உண்மை
நிலையை தெரிந்து கொள்ளாமல்
மன்னார் ஆயர் ஜனாதிபதிக்கு
கடிதம் எழுதியமையை
மாவை எம்.பியும்
வினோ எம்.பியும்
ஏற்றுக் கொள்கின்றனரா?...
மக்களால்
போற்றப்படும்
மத பிரமுகரொருவர்
ஓரினத்திற்கெதிராக
அதுவும் புலிகளால்
மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட
ஒரு சமூகத்திற்கெதிராக
ஜனாதிபதியிடம்
கடிதம் அனுப்பியமையை
மனித நேயமுள்ள
எவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
வன்னி மாவட்ட மக்களின் பிரதிநிதி
என்ற வகையிலும்
பொறுப்புணர்வுள்ள
அமைச்சர்
என்ற வகையிலும்
அமைச்சர்
ரிசாத் பதியுதீன்,
பாராளுமன்றத்தில்
ஆயர் ஜோசப்பின்
செயற்பாடுகள்
குறித்து
பிரஸ்தாபித்ததை
கறுப்புக்
கண்ணாடி கொண்டு நோக்கி அதனை மிகைப்படுத்தி
பத்திரிகைகளில்
அரைவேக்காட்டுத்தனமாக
எம்.பிக்களான
மாவையும்
வினோவும்
அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
விடத்தல்தீவுடன் தொடர்புடைய
வினோ எம்.பிக்கு
சன்னார் பிரதேசக் காணிகளின்
பூர்வீக வரலாறு தெரியாததொன்றல்ல.
விடத்தல்தீவை
பூர்வீகமாகக்
கொண்டவர்களின்
சொந்தக் காணியே அது என்ற
உண்மை அவருக்குத்
தெரியும்.
முஸ்லிம்கள்
அங்கிருந்து
வெளியேற்றப்பட்ட
பின்னர் அந்த காணிகளின்
ஒரு பகுதியில்
நூற்றுக்கணக்காக
தமிழ் குடும்பங்கள்
குடியேற்றப்பட்டிருந்தமையும்
அவருக்குத்
தெரியும்.
அத்துடன் அதையண்டிய
முஸ்லிம்களுக்கு
சொந்தமான
ஈச்சளவக்கை
எனும் இடத்தில் மாவீரர் குடும்பங்களை
புலிகள் குடியமர்த்தியமையையும்
விநோ எம்.பி.
நன்கறிவார். யுத்தம்
முடிவடைந்த
பின்னர் முஸ்லிம்கள்
அந்தப் பிரதேசங்களில்
மீளக்குடியேற
தலைப்பட்ட
போது அங்கு
புதிதாக குடியேறி வாழ்ந்து வரும் தமிழ்
குடும்பங்களுக்கு
எந்தவிதமான
பாதிப்புமில்லாமலேயே
தமது முயற்சியை
முன்னெடுத்தனர்.
குடியேறுவதற்கு அவர்கள்
ஆயத்தமான
போது இனவாதத்தை
கக்கி அவர்களின்
குடியேற்றத்தை
தடுக்கும்
முயற்சியில்
சில சக்திகள்
ஈடுபட்டன.
அந்த சக்திகளுக்கு
மன்னார் ஆயர் துணையாக
இருப்பது
வேதனையானது
எனவும் ரிசாத் பதியுதீன்
பாராளுமன்றத்தில்
சுட்டிக்காட்டியிருந்தார்.
வடக்கிலுள்ள
முஸ்லிம்களின்
87ற்கும் மேற்பட்ட
பள்ளிவாசல்கள்
புலிகளால்
துவம்சம்
செய்யப்பட்ட
போது பேசாதிருந்த
மன்னார் ஆயர் முஸ்லிம்கள்
மீள் குடியேறச்
செல்லும்
போதும் தடையாக இருக்கின்றாரே
என அமைச்சர்
வேதனைப்பட்டார்.
தம்புள்ளையில் பெளத்த
பிக்குமார்
பள்ளிவாசலை
அகற்ற முயற்சிப்பதுபோல
மன்னார் முஸ்லிம்களையும்
மீளக்குடியேற
விடாமல் ஆயர் தடுக்கின்றாரா?
என்ற கேள்வியையும்
அமைச்சர்
ரிசாத் பதியுதீன்
பாராளுமன்றத்தில்
எழுப்பினார்.
அமைச்சர் தனது நியாயமான ஆதங்கத்தை
உயர் சபையொன்றில்
தெரிவித்தமை
தவறா?
யுத்தத்தின் இறுதிப்பகுதியில்
தமிழ் மக்கள் வெளியேறி வவுனியாவில்
தஞ்சமடைந்த
போது அவர்களை
எட்டிப்பார்க்காத
இந்த எம்பிக்கள்
தற்போது அவர்களுக்காக
நீலிக்கண்ணீர்
வடிக்கின்றனர்.
அபலைகளாக வந்த அந்த மக்களை
சொந்த சகோதரர் போல அரவணைத்து
அவர்களுக்கு
உதவி வழங்கி
அதிகமானோரை
மீள்குடியேற்றியவர்
இந்த ரிசாத்
பதியுதீனே.
இந்த உண்மையை
மாவையும்,
விநோ எம்.பியும்
ஒருபோதும்
மறக்கக்கூடாது.
வன்னியில் பிறந்து, வளர்ந்த வினோ எம்.பியை
போன்ற நன்றி கெட்ட
மக்கள் பிரதிநிதிகள்
இதனை மறந்தாலும்
தமிழ் மக்கள் மறக்கப் போவதில்லை. அத்துடன்
மேடைகளிலே
தமிழ் முஸ்லிம்கள்
ஒற்றுமையை
பற்றிப் பேசும் பழம்பெரும்
தமிழ் அரசியல் வாதி மாவை
சேனாதிராஜா
போன்றவர்கள்
உண்மை நிலைகளை புரிந்து கொள்ளாமல்
ஆயருக்கு
பரிந்து பேசுவதுபோல
காட்டி அரசியல் இலாபம் தேடுவதே உள்நோக்கம்.
இதன் மூலம் அவர்கள் தமது இருப்பை
பாதுகாக்க
முயலுகின்றனர்.
விநோ எம்.பி. போன்றவர்கள் முழுப்பூசணிக்காயை
சோற்றில்
மறைக்க எத்தனிக்கக்
கூடாது. வடமாகாண தமிழர்களின்
மீள் குடியேற்றம்,
தொழில் வாய்ப்பு, நலவுரிமைகள்
போன்றவற்றில்
அக்கறையுடன்
செயற்பட்டு
வரும் அமைச்சர் ரிசாத்திற்கு
எதிராக ஊடகங்களை பயன்படுத்தி
இனவாதத்தைக்
கிளப்பி வரும் இந்த
எம்பிக்கள்
தமது நடவடிக்கைகளை
நிறுத்திக்
கொள்வதே தமிழ், முஸ்லிம்
உறவிற்கு
ஆரோக்கிய
மானதென ஹுனைஸ் பாரூக் எம்.பி. சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இனவாதத்திற்கு
தூபமிட்டு
அரசியல் நடத்த முடியுமென
இந்த எம்.பிக்கள்
பகற் கனவு
காணக்கூடாது.
இது முஸ்லிம்களின்
வாழ்வாதார
பிரச்சினை. 30 வருடங்கள்
அகதி வாழ்க்கையில்
துன்பப்பட்ட
இந்த மக்களின்
மீள்குடியேற்றத்திற்கு
ஒத்துழைப்பு
வழங்காவிட்டாலும்
கூட தடையாக
இருக்கக்
கூடாதென்பதே
இந்த மக்களின்
கோரிக்கையாகும்.... |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |