Contact us at: sooddram@gmail.com

 

கிழக்கு உக்ரைன் சுதந்திரம் பெற திட்டமிட்டபடி சர்வஜன வாக்கெடுப்பு

கிழக்கு உக்ரைன் சுயாட்சி பெறுவது அல்லது சுதந்திரம் பெறுவது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி இந்த வார இறுதியில் நடத்தப்படும் என ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். இந்த சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திவைக்கும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விடுத்த கோர்க்கையை பிரிவினைவாதிகள் ஏற்க மறுத்துள்ளனர். இதில் பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்து சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு புடின் கடந்த புதன்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் கிளர்ச்சியாளர்களின் முடிவு கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்காக மில்லியன் கணக்கான வாக்குச் சீட்டுகள் தயாராக உள்ளன.

'சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி மே 11 ஆம் திகதி நடத்தப்படும். வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு தயார் நிலையில் உள்ளன. எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும். எந்த மாற்றமும் இல்லை" என்று கிழக்கு நகரான லுஹன்ஸ்கில் இருக்கும் செயற்பாட்டாளர்கள் ரஷ்ய செய்திச்சேவைக்கு நேற்று குறிப்பிட்டனர். லுஹன்ஸ் நகரின் ரஷ்ய ஆதரவு செயற்பாட்டாளர் தலைவர் டெனிஸ் பு'pலினி குறிப்பிடும்போது, ஞாயிற்றுக்கிழமை தேர்தலை நடத்த ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.

'தென்கிழக்கு மக்கள் பற்றி கவலைப்படும் ஒருவரால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டது. ஆனால் நாம் காளை கொம்பின் மக்கள்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தலின் அபாயம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது. 'இந்த வாக்கெடுப்பு ஜனநாயக உரிமையை கொண்டதாக இருக்காது. இது நிலைமையை மேலும் மோசமாக்கவே உதவும்" என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைக்கான தலைவரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் எதிர்வரும் சர்வஜன வாக்கொடுப்பில் கிழக்கு உக்ரைனில் பெரும்பாலான மக்கள் தொடர்ந்து உக்ரைனுடன் இணைந்திருக்க விரும்புவதாக கருத்துக்கணிப்புகள் கூறும் நிலையிலேயே பிரிவினைவாதிகள் அங்கு வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இங்கு ரஷ்ய மொழி பேசுபவர்கள் பெரும்பான்;மையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் திடீர் கொள்கை மாற்றமாக சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி புடின் கடந்த புதன் கிழமை பிரிவினைவாதிகளை கோரியிருந்தார். அதில் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் உக்ரைனின் ஜனாதிபதி தேர்தலையும் புட்டின் வரவேற்றிருந்தார். உக்ரைன் ஜனாதிபதி தேர்தல் சரியான பாதையில் செல்வதாக கூறியிருந்தார். எனினும் கிழக்கு பிராந்தியத்தில் பிரிவினைவாதிகள் கோரும் அதிகபட்ச சுயாட்சியை உக்ரைன் இடைக்கால அரசு நிராகரித்து வருகிறது. இங்கு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரச கட்டிடங்களை மீட்க உக்ரைன் துருப்புகள் போராடி வருகின்றன.

முன்னர் இந்த சட்டவிரோதமான மற்றும் முறையற்ற வாக்கொடுப்பை ஒத்திவைப்பதை விட இரத்துச் செய்யும்படி வெள்ளை மாளிகை கூறியிருந்தது. ஏற்கனவே ரஷ்யாவின் பல தனிநபர்களுக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கும் தடை விதித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, உக்ரைன் மீது மேலும் தலையிட்டால் பரந்த அளவில் தடைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் என்று எச்சரித்திருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் சர்வஜன வாக்கெடுப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை மேலும் ஆத்திரமூட்டச் செய்யும் செயலாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ரஷ்ய துருப்புகளை உக்ரைன் எல்லையில் இருந்து திரும்பும்படி உத்தரவிட்டிருப்பதாகவும் குறிப்பட்டுள்ளார்.

எனினும் ரஷ்ய துருப்புகள் எல்லையை விட்டு பின்வாங்கியதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று நேட்டோ குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யா கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை தன்னுடன் இணைத்துக் கொண்டதை அடுத்து தெற்கு மற்றும் கிழக்கு உக்ரைனில் பதற்றம் தீவிரமடைந்தது. உக்ரைனின் ரஷ்ய ஆதரவு ஜனாதிபதியான விக்டர் யனுகோவிச் மேற்கு ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் கடந்த பெப்ரவரியில் பதவி கவிழ்க்கப்பட்டதை அடுத்தே ரஷ்யா, கிரிமியா தீபகற்பத்தின் மீது கைவைத்தது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com