Contact us at: sooddram@gmail.com

 

இடதுசாரி இயக்கத்தில் இவ்வளவு காலமும் இருந்தது அத்தனையும் நடிப்பா சொல்லு சுரேஸ் அத்தனையும் நடிப்பா?

எப்படி சுரேஸ் உங்களால் இப்படி பேசமுடிகிறது. உங்களுடைய அண்மையை அறிக்கையைப்படித்தவுட் இப்படித்தான் தோன்றியது. தமிழ்மக்கள் சிங்களமக்கள் ஒற்றுமையை வலியுறுத்த முற்போக்கு சிந்தனைகொண்டவர்கள் ஒருபக்கம் போராடிக்கொண்டிருக்கையில் சிங்கள மக்களுக்கு எதிராக இப்படி ஒரு வன்மத்தை கக்க எப்படி சுரேஸ் மனம் வந்தது.
இடதுசாரித்தத்துவத்தில் இருந்த வளர்க்கப்பட்ட நீங்கள் புலிகளுடன் கூட்டு சேர்ந்தபோது மனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன். நான் கட்சி சாராதவன் ஆனால் இடதுசாரி முற்போக்கு சிந்தனைகளில் என் சிந்தனைகளைச் செலுத்தி வருபவன். தமிழ்ச்சமூகம் எப்போதும் வலதுசாரிச்சிந்தனைகளில் வலம் வந்தபடி இருக்கிறது. இன்றைய அதன் துன்பங்களுக்கு காரணம் அந்தச்சமூகத்தின் மோசமான இந்த சிந்தனைகளே காரணம்.

அதை தான் இதுவரைகாலமும் தமிழ்த்தேசியக்கட்சிகளும் புலிகளும் உருவேற்றி உருவேற்றி தமிழச்சமூகத்தை மோசமான ஒரு சூழலுக்குள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றன. இதை உணரவில்லையா சுரேஸ் எப்போதாவது தனிமையில் இருந்து சிந்திக்கும்போது செய்வதெல்லாம் தவறு என தோணவில்லையா? பத்மநாபாவின் மரணத்தை நினைக்கும்போதெல்லாம் பாசிசத்தின் மீது கோபம் வரவில்லையா?

தமிழ்மக்களின் இன்றைய நிலைக்கு புலிகளும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புமே முக்கிய காரணங்கள் என்பது தங்களுக்குத் தெரியாதா சுரேஸ். சிங்கள மக்கள் எல்லாரையும் விரோதமாக கருதுகிற போக்கு தங்களிடம் எப்போது ஏற்பட்டது சுரேஸ். புலிகளிடம் சென்று சரணாகதியடைந்தபோதே மனதில் இருந்த நல்ல சிந்தனைகளுக்கெல்லாம் விடைகொடுத்துவிட்டீரா சுரேஸ் எத்தனை அற்புதமான மனிதர்கள் தமிழ்ச்சமூகத்திற்காக தமது உயிரை புலிகளினால் பலவந்தமாக கொல்லப்பட்டார்கள்.

அப்போதெல்லாம் உங்களுடைய மனம் துடிக்கவில்லையா? நல்ல மனிதர்களை சமூகம் இழக்கும்போது அங்கு ஏற்படுகிற வெற்றிடம் கவலைக்குரியது சுரேஸ். மனசைச் சொட்டு சொல்லும் சுரேஸ்! இந்த அற்புமான மனிதர்கள் எல்லாம் சிங்கள மக்களாலா கொல்லப்பட்டார்கள். இல்லையே புலிகளால்தானே! இது தெரிந்தும் இன்றுவரை புலிகள் தொடர்பாக ஏன் பேச மறுக்கிறீர்கள்.

இருப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்றா? சிங்கள மக்கள் தொடர்பான உங்கள் விமர்சன உரிமையை நான் மறுக்கவில்லை. ஆனால் அத்தகைய விமர்சனத்தை புலிகள் மீது ஏன் இன்றும் வைக்க மறுக்கிறீர்கள் யாழ்நூலகத்தில் நடைபெற்ற சம்பவம் பொய்யானது என செய்திகள் வெளிவந்தும் அதனை ஊதிப்பெருப்பிக்கிறீர்களே!. அன்று செல்லன் கந்தையா தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதற்காக புலிகளும் யாழ் உயர்குடியினரும் அவரை நூல் நிலையத்தை திறக்க விட வில்லை.

அப்போ எங்குபோனது சுரேஸ் இப்போதுள்ள ஞானம்.
சேராத இடம் சேர்ந்து அறிவு என்கிற கண்ணை மூடி எப்படி இப்படி ஒரு அறிக்கையை விட சிங்கள மக்களுக்கு எதிராக விட மனம் வந்தது சுரேஸ். வேண்டாம் சுரேஸ் இத்துடன் இந்தப்போக்குகளை நிறுத்தி விடுங்கள். இனவிரோதங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு வரலாறு எப்பவும் அவர்களுக்கு ஒரு மோசமான இடத்தைத்தான் தந்திருக்கிறது. அத்தகைய ஒரு இடத்திற்கு செல்ல நீங்களும் ஆசைப்படுகிறீர்களா? அதனால்தான் கேட்கிறேன் .இதுவரைகாலமும் ஒரு இடதுசாரி அமைப்பில் இருந்தது எல்லாம் நடிப்பா சொல்லுங்க சுரேஸ்
நடிப்பா


சிங்கள மக்கள் தாம் எதுவும் செய்யலாம் என நினைக்கின்றனர்
- சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.
குற்றச்சாட்டு

யாழ் நூலகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் படித்த நாகரிகம் தெரிந்த மக்களை வெட்கித் தலை குனிய வைத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் மூலம் இந்த நாட்டில் வாழும் தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள் தான் என்பதை அரசாங்கம் நிரூபித்து விட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த வாரம் யாழ். நூலகத்துக்குள் நுழைந்த தென்னிலங்கைச் சிங்கள சுற்றுலாப் பயணிகள் அறி வித்தலை மீறி நூலகத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்து அங்கி ருந்த புத்தக ராக்கைகளை கீழே தள்ளி விட்டுப் புத்தகங்களையும் வீசிய சம்பவம் தொடர்பிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இக் குற்றச்சாட்டைத் தெரிவித் தார். அவர் தெரிவித்ததாவது
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்டதன் பின்னர் தென்னிலங் கைச் சிங்கள மக்கள் மத்தியில் புதுவித கருத்தொன்று இன்று தோன் றியுள்ளது. தாங்கள் எங்கும் செல்லலாம் எதனையும் செய்லாம். யாரும் ஏன் எதற்கு என்று கேட்க முடியாது.

தாம் எப்படி நடந்து கொண்டாலும் அதற்கு இலங்கை அரசின் படைத் தரப்பு பாதுகாப்புத் தரவேண்டும் என்ற எண்ணத்திலேயே இவர்கள் உள்ளனர். விரும்பத்தகாத குறிப் பிட்ட சம்பவத்தை ஆராயும் போது கூட இதுவே புலப்படுகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com