|
||||
|
அரசியல் தீர்வொன்றின்
மூலமே இனங்களிடையே
நல்லிணக்கத்தை
ஏற்படுத்த
முடியும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்
காணும் நடவடிக்கைகளைத்
தீவிரப்படுத்த
வேண்டுமென்று
கத்தோலிக்க
பேராயர்கள்
அரசாங்கத்திற்கு
வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
அரசியல் தீர்வொன்றின்
மூலமே இனங்களுக்கிடையே
நல்லிணக்கத்தை
ஏற்படுத்த
முடியுமென்று
கற்றறிந்த
பாடங்கள்
மற்றும் நல்லிணக்கம்
பற்றிய ஆணைக்குழு
முன்னிலையில்
அவர்கள் வலியுறுத்தினர்.
கர்தினாலாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ள
கொழும்பு
பேராயர் அதி வண. மல்கம் ரஞ்சித்
ஆண்டகை தலைமையிலான
கத்தோலிக்க
திருச்சபையினர்
நேற்று (03) நல்லிணக்க
ஆணைக் குழு முன்னிலையில்
சாட்சிய மளித்தனர்.
வன்முறைகளுக்கான மூல காரணத்தையும்
இனங்களுக்
கிடையே அமைதியின்மை
யையும், சந்தேகத்தையும்,
நம்பிக் கையீனத்தையும்
இல்லாதொழிப்ப
தற்கு அரசியல் தீர்வே ஒரே வழியாகுமென்று
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
சகல பாடசாலைகளிலும்
மூன்று மொழிக் கல்வியை அறிமுகப்படுத்த
வேண்டுமென்று
குறிப்பிட்ட
பேராயர், அதன் மூலம்
இனங்களுக்கிடையே
புரிந்துணர்வு
ஏற்படுமென்று
அவர் தெரிவித்தார்.
அதேநேரம், சிங்களமும்
தமிழும் உத்தியோக பூர்வ மொழிகளாகவும்
தேசிய மொழிகளாகவும்
அரசியலமைப்பில்
பிரகடனப்படுத்த
வேண்டுமென்றும்
பேராயர் குறிப்பிட்டார். ஆயர் கிங்ஸ்லி
சுவாம்பிள்ளை
சாட்சியமளிக்கையில்,
வடக்கு, கிழக்குப்
பகுதிகளில்
உள்ள ஆயுதக்
குழுக்களுக்குப்
புனர்வாழ்வளிக்கப்பட
வேண்டும்
என்று கூறினார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின்
கீழ் தடுத்து
வைக்கப்பட்டுள்ள
வர்கள் விடுவிக்கப்பட
வேண்டுமென்றும்
மலையகப் பகுதியைச்
சேர்ந்த இளைஞர்கள்
நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டு
ள்ளதாகவும்
ஆயர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை மக்கள் இழந்துவிட்டுள்ள
உத்தியோகபூர்வ
ஆவணங்களைப்
பெற்றுக்
கொள்வதற்கு
உதவி புரிய
வேண்டுமென்று
குறிப்பிட்ட
அவர், வடக்கு,
கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில்
இடம்பெற்ற
குண்டு வெடிப்புகளால்
கொல்லப்ப ட்டவர்களுக்கு
நட்ட ஈடு
வழங்க வேண்டுமென்றும்
வேண்டுகோள்
விடுத்தார்.
கத்தோலிக்க திருச்சபையைச்
சேர்ந்த சட்டத்தரணி
சமில் பெரேரா சாட்சியமளிக்
கையில், புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்
பட்டுள்ளதால்
பயங்கரவாத
தடைச் சட்டத்தையும்
அவசரகாலச்
சட்டத்தையும்
நீக்கிவிடலாமென்று
ஆலோசனை தெரிவித்தார்.
வடக்கு, கிழக்குப்
பதிகளில்
சிவில் நிர்வாகம்
பலப்படுத்தப்பட
வேண்டுமென்றும்
அவர் தெரிவித்தார்.
அருட்தந்தை ஜோர்ஜ் சிகாமணி சாட்சியமளிக்கையில்,
வடபகுதியில்
உள்ள உயர்
பாதுகாப்பு
வலயங்களை
நீக்கி அந்தக் காணிகளை உரிய பொதுமக்களிடம்
கையளிகக்
வேண்டுமென்று
கேட்டுக்கொண்டார்.
உயர் பாதுகாப்பு
வலயத்தை ஏற்படுத்தியிருப்பதால்,
பெறுமதியான
விவசாய நிலங்கள் வீணாகுவதாகக்
குறிப்பிட்ட
அவர், மக்கள்
சொந்த வாழ்விடங்களில்
குடியமர்த்தப்பட
வேண்டும்.
முல்லைத்தீவு, நந்திக்
கடல் பகுதி
மக்கள் மீளக்குடியமர்த்தப்பட
வேண்டும்.
சம்பூர் மக்கள் அவர்களின்
சொந்த இடத்தில் மீளக் குடியமர்த்தப்பட
வேண்டும்
என்று கூறியதுடன்
இந்திய அகதி முகாம்களில்
உள்ள இலங்கை
அகதிகள் நாடு திரும்புவதற்கு
அவர்களை அரசாங்கம்
ஊக்கப்படுத்த
வேண்டும்
என்றும் தெரிவித்தார்.
‘வன்னி மக்கள் தமக்கே உரிய தனித்துவமான
வாழ்வியலைக்
கொண்டுள்ளனர். அவர்கள் அவ்வாறே
வாழ்வதற்கான
ஏற்பாடுகளைச்
செய்ய வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.
அருட்தந்தை ரஞ்சித்
மதுராவல சாட்சியமளிக்கையில்,
வட பகுதி
மாணவர்களின்
கல்வி நடவடிக்கைகளைச்
சீராக்க வேண்டுமென்று
குறிப்பிட்டார். அந்த மாணவர்கள்
எதிர்கொள்ளும்
பிரச்சினைகள்
களையப்பட
வேண்டுமென்றும்
அவர் கூறினார்.
சாட்சியத்தின் நிறைவில்
குறுக்கு
விசாரணை செய்த ஆணைக்
குழுவின்
தலைவர் சீ. ஆர். டி. சில்வா,
அவசரகாலச்
சட்டத்தையும்
பயங்கரவாதத்
தடைச் சட்டத்தையும்
உடனடியாக
நீக்குவதில்
நடைமுறைச்
சிக்கல்கள்
காணப்படுவதாகக்
கூறியதோடு,
அது தொடர்பில்
சட்த்தரணி
சமில் பெரேராவின்
கருத்தினைக்
கேட்டார்.
அதற்குப் பதில் அளித்த அவர், நாட்டில்
பயங்கரவாதம்
தோற்கடிக்கப்பட்டுள்ளதால்
இந்தச் சட்டங்களை
நீடிப்பதற்கான
அவசியம் இல்லை எனக்
கருதுவதாகக்
கூறினார். நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும்
ஏற்படுத்துவதற்கான
முதற்படியாக
குறைந்தது
அவசரகாலச்
சட்டத்தையாவது
நீக்க வேண்டுமென்றார்.
நிறைவாகக் கருத்துரைத்த
பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஒன்றுபட்ட
இலங்கைக்குள்
அனைத்து இன மக்களும்
ஐக்கியமாக
வாழ வேண்டுமென்பதே
எமது நிலைப்பாடு. பிரிவினையை ஒருபோதும்
நாம் ஆதரித்ததில்லை.
இரு தரப்பினரையும்
பேச்சுவார்த்தையில்
ஈடுபடச் செய்வதற்கு
ஆரம்பம் முதலே முயற்சித்தோம்.
ஆனால், அடிப்படையில்
இரு தரப்பிற்கும்
நம்பிக்கை
இல்லாததால்
அது பலனளிக்கவில்லை’
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |