|
||||
|
வெலிக்கடை சிறையில்
கைதிகள் பொலிஸ் மீது
தாக்குதல்
வெலிக்கடை
சிறைச்சாலையில்
நேற்றுக்
காலை திடீர்
சோதனை மேற்கொள்ள
சென்ற விசேட பொலிஸ்
குழு மீது
கைதிகள் நடத்திய தாக்குதலில்
45 பொலிஸாரும்,
5 சிறைக் காவலர்களும்
காயமடைந்துள்ளனர்.
வெலிக்கடை
சிறைச்சாலையில்
விளக்க மறியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த
பிரிவில்
சோதனை நடத்திக் கொண்டிருக்கும்
போதே இந்த
தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,
பொலிஸ் அத்தியட்சகர்
பிரிஷாந்த
ஜயகொடி தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில்
காயமடைந்த
ஐம்பது பேரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்
டுள்ளதாக
அவர் மேலும்
தெரிவித்தார்.
இது தொடர்பாக
மேலும் தெரிய வருவ
தாவது, வெலிக்கடை
சிறைச்சாலைக்குள்
போதைப் பொருள் பாவனை இடம்
பெறுவதாகவும்,
கைதிகள் சிலர் சட்ட
விரோத நடவடிக்கைகளில்
ஈடுபட்டு
வருவதாகவும்
கிடைக்கப்
பெற்ற தகவல் களை
அடிப்படையாகக்
கொண்டு நீதிமன்ற அனுமதியைப்
பெற்று விசேட பொலிஸ்
குழுவினர்
திடீர் தேடுதல் நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலை
அதிகாரிகளின்
ஒத்துழைப்
புடன் 66 பொலிஸார் அடங்கிய இந்த விசேட
குழுவினர்
தேடுதல் நடத்திக்கொண்டு
இருக்கும்
போது குறித்த
பிரிவில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த
சிறைக் கைதிகள் சிலர் பொலிஸார்
மீது கற்களை
எறிந்து தாக்குதல்
நடத்த ஆரம்பித்துள்ளனர்.
அதனை அடுத்து
ஏனைய கைதிகளும்
கற்கள், போத்தல்கள்
மற்றும் உபகரணங்களை
பயன்படுத்தி
தாக்குதல்
நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலை
அடுத்து அந்தப் பிரதேசத்தில்
பெரும் பதற்ற நிலை
ஏற்பட்டுள்ளது.
உடனடியாக
அங்கு விரைந்த மேலதிக பொலிஸாரும்,
சிறைக் காவலர்களும்,
முப்படையினரும்
தாக்குதல்களுக்கு
உள்ளானவர்களை
மீட்டெடுத்துள்ளதுடன்
நிலைமையை
கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வந்ததாக சிறைச்சாலை
அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அங்கு விரைந்த
விசேட படைப் பிரிவினர்
காயமடைந்தவர்களை
உடனடியாக
கொழும்பு
தேசிய வைத்தியசாலைக்கு
எடுத்துச்
சென்று அனுமதித்துள்ளனர்.
இவர்களில் சிலர் அவசர சிகிச்சை
பிரிவுக்கும்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுமதிக்கப்பட்டவர்களில்
அநேகமானவர்களின்
தலை மற்றும்
உடம்பிலேயே
காயங்கள்
ஏற்பட்டுள்ளதாக
கொழும்பு
தேசிய வைத்தியசாலை
பணிப்பாளர்
டாக்டர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை,
இந்த சம்பவம்
தொடர்பான
மேலதிக விசாரணைகளை
மேற்கொள்ளவென
விசேட குற்றப் புலனாய்வு
பிரிவு பொலிஸ் (சி. ஐ. டி.)
குழுவொன்று
நியமிக்கப்பட்டுள்ளதுடன்
அந்தக் குழு தமது
விசாரணைகளை
உடனடியாக
ஆரம்பித்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
தெரிவித்தார்.
பாலிஸார்
மற்றும் சிறைக் காவலர் மீது தாக்குதல்
நடத்துவதற்கு
பயன்படுத்தப்பட்ட
கற்கள், போத்தல்கள்
மற்றும் பொருட்கள்
சிறைக் கூடங்களுக்குள்
எவ்வாறு கொண்டு வரப்பட்டன
என்பன தொடர்பாகவும்
தாக்குதல்
நடத்தியவர்கள்
யார் என்பது
தொடர்பாகவும்
சி. ஐ. டி.யினர்
விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர்
என்றும் அவர் மேலும்
தெரிவித்தார்.
இந்த
தாக்குதல்
சம்பவத்தை
அடுத்து அங்கு விரைந்த
பொலிஸ், விசேட அதிரடிப்
படையினர்
மற்றும் முப்படையினர்
இணைந்து சிறைச் சாலைக்குள்
மீண்டும்
ஒரு விசேட
தேடுதல் நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை,
கடந்த மாதம் 18ம் திகதி உதவிப்
பொலிஸ் அத்தியட்சகர்
மஜீத் தலைமையில்
வெலிக்கடை
சிறைச்சாலையின்
பெண்கள் பிரிவை சுற்றிவளைத்து
நடத்திய இது போன்ற
திடீர் தேடுதல் நடவடிக்கையின்
போது 53 கையடக்கத்
தொலைபேசிகள்,
பற்றரிகள்,
சார்ஜர்கள்
மற்றும் 44 கஞ்சா சுருட்டுக்களை
கைப்பற்றியமை
குறிப்பிடத்தக்கதாகும். இதே மாதிரியான விரைந்தத விவேகமான செயற்பாட்டை 1983 ஜுலை வெலிக்கடைச் சிறைப் படுகொலை நிகழ்ந்த போது மேற்கொண்டிருந்தால் பல தமிழ் சிறைக் கைதிகள் காப்பற்றப்பட்டிருப்பார்கள். இலங்கை அரசின் மீதும் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் நடந்திருப்பார்கள். அது மட்டும் அல்லாமல் இதனைத் தொடர்ந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் சில வேளைகளின் நம்பிக்கையின் அடித்தளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருக்கும். தொடர்ந்த பல ஆயிரம் அப்பாவிப் பொது மக்களின் மரணங்களும் தடுக்கப்பட்டிருக்கலாம், தவிர்க்கப்பட்டிருக்கலாம். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |