|
||||
|
முதலமைச்சர் குழுவினர்
தாக்கியதாக
மாநகர சபை உறுப்பினர்
குற்றச்சாட்டு
- முதல்வர் தரப்பு மறுப்பு நேற்று மாலை மட்டக்களப்பு
மாநகர சபை மேயரின்
வாசஸ்தலத்தில்
வைத்து கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவனேசதுரை
சந்திரகாந்தனால்
தான் தாக்கப்பட்டதாக
மட்டக்களப்பு
மாநகர சபை உறுப்பினரும்
ஈரோஸ் கட்சியின்
செயலாளர்
நாயகமுமான
ஆர்.பிரபாகரன்
புகாரிட்டுள்ளார்.
இது தொடர்பாக
தமிழ்மிரர்
இணையத்தளத்திடம்
ஆர்.பிரபாகரன்
கூறுகையில்,"புதிதாக
கட்டப்பட்டுக்கொண்டிருக்கும்
மட்டக்களப்பு
பஸ் நிலையத்தில்
உள்ள கடைத்தொகுதியில்
தனக்கு 5 கடைகளும் உணவு விடுதி
மற்றும் சிற்றுண்டிசாலையும்
வழங்கும்படி
மேயர் சிவகீதா பிரபாகரனிடம்
கோரியிருந்தார்.இதற்கு
தான் எதிர்ப்பு
தெரிவித்ததன்
காரணமாக கடந்த 10ஆம்
திகதி புதன்கிழமை
சிவனேசதுரை
சந்திரகாந்தன்
தனக்கு தொலைபேசி மூலம் கொலை
அச்சுறுத்தல்விடுத்தார்.
இதனையடுத்து எனக்கு
எதுவும் நேர்ந்தால்
முதலமைச்சர்
சந்திரகாந்தன்
தான் பெறுப்புக்
கூற வேண்டும்
என மட்டக்களப்பு
பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு
செய்தேன். பஸ் நிலைய கடை
வழங்குவது
தொடர்பான
விசேட கூட்டம் நேற்று மாலை மேயரின்
வாசஸ்தலத்தில்
நடைபெற்றுக்
கொண்டிருந்த
போது தனது
அடியாட்களுடன்
வந்த கிழக்கு
மாகாண முதலமைச்சர்
சிவனேசதுரை
சந்திரகாந்தன்
தன்னை தாக்கியதுடன்
கழுத்திலிருந்த
4 1/2 பவுண் தங்கச் சங்கிலியையும்
இரண்டு கையடக்க தொலைபேசிகளையும்
பறிமுதல்
செய்தார்.
அவருடன் வந்த கிழக்கு
மாகாண சபை உறுப்பினார்களான
பிரசாந்தன்,
பிரதீப் மாஸ்டர் மற்றும் முதலமைச்சரின்
ஆலோசகர் செல்வேந்திரன்
ஆகியோர் உடபட 25 பேர்
கொண்ட கும்பல் என்னை தாக்கியது.
தற்போது நான் மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைகளுக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
எனக்கு உட்காயங்கள்
உள்ளன. எனக்கு முதலமைச்சர்
தாக்கியமை
தொடர்பில்
வைத்தியசாலை
பொலிஸாரிடமும்
மட்டக்களப்பு
பொலிஸாரிடமும்
முறைப்பாடு
செய்துள்ளேன்"
என்றார் ஆர்.பிரபாகரன்.
இது தொடர்பில்
பொலிஸ் பேச்சாளரான
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த
ஜயகொடியை
தமிழ்மிரர்
இணையத்தளம்
தொடர்பு கொண்டு வினவிய போது, "மட்டக்களப்பு
மாநகர சபை உறுப்பினர்கள்
கிழக்கு மாகாண சபை
உறுப்பினர்கள்
உட்பட நான்கு ஐந்து பேர்
கொண்ட குழுவால் தாக்கப்பட்டமை
தொடர்பில்
முறைப்பாடு
கிடைக்கப்பட்டுள்ளது.
தாக்கப்பட்டவர்கள் சிறு காயங்களுடன்
மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலை
சிகிச்சை
பெற்று வருகின்றனர்.
இது தொடர்பிலான
மேலதிக விசாரணைகளை
மட்டக்களப்பு
பொலிஸார்
மேற்கொண்டுவருகின்றனர்"
என்றார்.
தாக்கிய
மாகாண சபை உறுப்பினர்களின்
பெயர் தனக்கு தெரியாது எனவும் இச்சம்பவத்தில்
முதலமைச்சர்
சிவனேசதுரை
சந்திரகாந்தன்
தொடர்புபட்டதாக
எதுவும் குறிப்பிடப்படவில்லை
என பொலிஸ்
பேச்சாளர்
பிரசாந்த
ஜயகொடி குறிப்பிட்டார். இச்சம்பவம்
தொடர்பில்
கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவநேசதுரை
சந்திரகாந்தனை
பல தடவை
தமிழ்மிரர்
இணையத்தளம்
தொடர்புகொள்ள
முயற்சித்த
போதும் அது பயனளிக்கவில்லை. இது தொடர்பில்
கிழக்கு மாகாண சபை
உறுப்பினர்
பி.பிரசாந்தனை
தமிழ்மிரர்
இணையத்தளம்
தொடர்பு கொண்டு வினவிய போது, இச்சம்பவத்திற்கும்
எனக்கும்
எந்த தொடர்பில்லை.
நேற்று மாலை மட்டக்களப்பு
மேயரின் வாசஸ்தலத்தில்
இடம்பெற்ற
கூட்டத்திற்கு
முதலமைச்சருடன்
நானும் சென்றிருந்தேன்.
அங்கு வைத்து
முதலைமைச்சர்
சிவநேசதுரை
சந்திரகாந்தனோ
அல்லது அவரது குழுவினரோ
எந்தவொரு
மாநகர சபை உறுப்பினரையும்
தாக்கவில்லை.
எனினும் அங்கிருந்த
சிலர் முதல்மைச்சர்
என்று கூட மரியாதை
செலுத்தாமல்
அவதூறான வார்த்தைகளால்
ஏசினார்கள்.
இது தொடர்பில்
நாங்கள் மட்டக்களப்பு
பொலிஸில்
முறைப்பாடு
செய்துள்ளோம்"
என்றார் அவர். மாநகர சபை
உறுப்பினர்
என்னை தாக்க முற்பட்டார் - முதலமைச்சர்
வாக்குமூலம்
தனக்கு விடுத்த அழைப்பின்
பேரிலேயே
நான் மட்டக்களப்பு
மாநகர மேயரின் வாசஸ்தலத்தில்
நடைபெற்ற
கூட்டத்திற்கு
சென்றதாகவும்
மாநகர சபை உறுப்பினர்
ஆர்.பிரபாகரன்
தன்னை தாக்க முற்பட்டதாகவும்
கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவநேசதுரை
சந்திரகாந்தன்
நேற்று வெள்ளிக்கிழமை
இடம்பெற்ற
சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு
தலைமையகப்
பொலிஸ் அதிகாரிகளுக்கு
இன்று சனிக்கிழமை
வழங்கிய வாக்கு மூலத்தில்
தெரிவித்துள்ளார். "மட்டக்களப்பு
நகரில் அமைக்கப்பட்டு
வரும் பஸ் தரிப்பிட
கடைத்தொகுதி
தொடர்பான
கூட்டமொன்று
நேற்று காலை நடைபெறுவதாகவும்
அதில் தன்னையும்
கலந்து கொள்ளுமாறும்
எனக்கு அழைப்பு விடுக்கபட்டிருந்தது.
ஆனால் காலையில்
வேறு முக்கிய
நிகழ்வு இருந்ததால்
மாலையில்
அக்கூட்டத்தை
நடாத்துமாறு
கூறினேன்.
அதன்படி நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்திற்கு,
எனக்கு விடுக்கப்பட்ட
அழபைப்பின்
பேரில் நான் சென்றேன்.
அக்கூட்டத்தில்
எனது ஆதரவான
மாநகர சபை உறுப்பினாகளுக்கும்
இன்னும் சில மாநகர
சபை உறுப்பினர்களுக்குமிடையில்
சிறியளவிலான
கைகலப்பும்
கலவரமும் ஏற்பட்டது. அப்போது மாநகர சபை உறுப்பினர்
பிரபாகரன்
என்னைத் தாக்க முற்பட்டார்.
அதன் போது எனது மெய்ப்பாதுகாவலர்கள்
என்னை அழைத்துக்கொண்டு
வெளியே வந்து விட்டனர்.
அத்துடன் நான் வெளியேறி விட்டேன்"
என முதலமைச்சர்
சிவநேசதுரை
சந்திரகாந்தன்
தனது வாக்குமூலத்தில்
தெரிவித்துள்ளதாக
பொலிஸ் அதிகாரியொருவர்
தெரிவித்தார். -
தமிழ்மிரர்
- |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |