|
||||
|
ஜனாதிபதியின் பதவியேற்பு இன்று
கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின் இரண்டாவது
பதவிப் பிரமாண
தேசிய நிகழ்வு
கொழும்பு காலி
முகத்திடலில்
இன்று (19) மிகக் கோலாகலமாக
நடைபெறுகிறது.
ஜனாதிபதி செயலக
வளாகத்தில் நடைபெறும்
இந்தத் தேசிய நிகழ்வில்
மகா சங்கத்தினர்,
மதத் தலைவர்கள்,
உள்நாட்டு, வெளிநாட்டுப்
பிரமுகர்கள் எனப்
பெருந்திரளானோர்
கலந்துகொள்கின்றனர்.
இன்று காலை
10 மணிக்குள்ள சுபவேளையில்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ இலங்கையின்
நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதியாக
இரண்டாவது தடவையாகவும்
பதவி ஏற்பதை முன்னிட்டு
அரசியல் தலைவர்களும்
உலகத் தலைவர்கள்
பலரும் வாழ்த்துகளை
அனுப்பி வைத்துள்ளனர்.
ஜனாதிபதிக்கு
நேரடியாக வாழ்த்துக்களைத்
தெரிவிப்பதற்காக
40 இராஜதந்திரப்
பிரதிநிதிகள்
அடங்கலாக 150 பிரமுகர்கள்
இலங்கை வந்துள்ளனர்.
பதவியேற்பு
வைபவத்தை முன்னிட்டு
காலி முகத்திடல்
முதல் நாடெங்கும்
விழாக்கோலம் பூண்டுள்ளது.
காலி முகத்திடலில்
இன்று முப்படையினரினதும்
பொலிஸாரினதும்
அணி வகுப்பு மரியாதையும்
மற்றும் போர்த்தளபாட
பேரணியும் நடைபெறுகின்றன.
இந்த விழாவையொட்டி
கொழும்பு கோட்டைக்கான
பொதுப் போக்குவரத்து
இன்று காலை ஆறு
மணி முதல் பிற்பகல்
இரண்டு மணி வரை
தடைசெய்யப்படுகிறது.
இதற்குப் பதிலாக
மாற்றுப் பாதைகளைப்
பயன்படுத்துமாறு
பொலிஸார் அறிவித்துள்ளனர்.
விசேட பாதுகாப்பு
ஏற்பாடுகளும்
போக்குவரத்து
ஒழுங்குகளும்
மேற்கொள்ளப்பட்டுள்ளதையடுத்து
கொழும்பின் கேந்திர
முக்கியத்துவம்
வாய்ந்த பகுதிகளில்
அமைந்துள்ள அரச
மற்றும் தனியார்துறை
நிறுவனங்கள் மற்றும்
அலுவலகங்களுக்கு
இன்று விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு 1 - 4 வரையிலான
பகுதிகளிலுள்ள
சகல பாடசாலைகளும்
இன்று மூடப்படுகின்றன.
ஜனாதிபதியின்
இந்தப் பதவிப்
பிரமாண நிகழ்வில்
பங்கேற்பதற்காக
சீன ஜனாதிபதியின்
விசேட தூதுவர்
ஷாங் குவேய் மற்றும்
அந்நாட்டின் வெளிவிவகார
அமைச்சர் ஹியூ
ஷாங்குவே உள்ளிட்ட
பத்துப்பேர் கொண்ட
பிரதிநிதிகள்
குழு நேற்று முன்தினம்
(17) இலங்கை வந்துள்ளதாக
வெளிவிவகார அமைச்சின்
பேச்சாளர் தெரிவித்தார்.
ஏனைய பிரதிநிதிகள்
நேற்று வந்தனர்.
பூட்டான் பிரதமர்
லியோன்சென் ஜிக்மி
தின்லே மற்றும்
அவரது பாரியார்
உள்ளிட்ட 18 பேர்
கொண்ட குழுவும்
பாகிஸ்தான் செனட்
சபையின் தலைவர்
ஃபாரூக் ஹமீத்
மற்றும் அவரது
பாரியார் ஆகியோரும்
வருகை தந்துள்ளனர்.
பாகிஸ்தானைப்
பிரதிநிதித்துவப்படுத்தி
அந்நாட்டு இராஜாங்க
அமைச்சர் சலீம்
மான்ட்விவல்லா,
மாலைதீவு ஜனாதிபதியின்
விசேட தூதுவர்
இப்றாஹிம் ஹுசேன்,
மாலைதீவு ஜனநாயக
கட்சியின் தலைவர்
மாரியா அஹமட்,
அந்நாட்டு சிறுபான்மைக்
கட்சிகளின் தலைவர்களில்
ஒருவரான மூசா மானிகு
ஆகியோரும் பதவிப்
பிரமாண நிகழ்வில்
பங்கேற்கின்றனர்.
ஜனாதிபதியின்
பதவிப் பிரமாண
நிகழ்வை முன்னிட்டு
நாடு முழுவதும்
மத வைபவங்களும்
நடைபெறுகின்றன.
அதேநேரம் சகல பிரதேச
செயலாளர் பிரிவுகளிலும்
பல்வேறு அபிவிருத்தி
செயற்திட்டங்கள்
ஆரம்பிக்கப்படுகின்றன.
நாட்டின் தேசிய
ஐக்கியத்தையும்
அபிவிருத்தியையும்
முன்னிலைப்படுத்தும்
கண்காட்சி ஒன்றினைத்
தகவல், ஊடகத்துறை
அமைச்சு கொழும்பு
சுதந்திர சதுக்கத்தில்
ஏற்பாடு செய்துள்ளது.
நேற்று முன்தினம்
(17) பிரதமரால் ஆரம்பித்து
வைக்கப்பட்ட கண்காட்சியை
நாளை (20) வரை பிற்பகல்
2 மணி முதல் இரவு
10 மணி வரையும் பொதுமக்கள்
கண்டுகளிக்க முடியும்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற
தேர்தலில் வெற்றியீட்டி
பதவியேற்ற ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ
பதவிக் காலம் நிறைவடைவதற்கு
ஓராண்டுக்கு முன்னதாகத்
தேர்தலை நடத்துமாறு
தேர்தல்கள் ஆணையாளரைக்
கேட்டுக் கொண்டார்.
இதற்கிணங்க
புதிய தேர்தலுக்கான
அறிவிப்பு 2009 நவம்பர்
23ம் திகதி அறிவிக்கப்பட்டது.
டிசம்பர் 17 இல்
வேட்பு மனுக்கள்
ஏற்றுக் கொள்ளப்பட்டன.
2010 ஜனவரி 26 ஆம் திகதி
தேர்தல் நடைபெற்றது.
இதில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியின்
சார்பில் போட்டியிட்ட
ஜனாதிபதி 60,15,934 வாக்குகளைப்
பெற்று அறுதிப்
பெரும்பான்மையுடன்
அமோக வெற்றியீட்டினார்.
அளிக்கப்பட்ட
வாக்குகளில்
57.88% ஐப் பெற்ற அவர்
எதிரணி வேட்பாளரைவிடவும்
சுமார் 19 இலட்சம்
மேலதிக வாக்குகளைப்
பெற்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |