|
||||
|
‘வடக்கில்
மக்களிடம்
அதிகாரங்களை
ஒப்படைப்பதே
எமது எதிர்பார்ப்பு’
-
ஜனாதிபதி
வடக்கு மக்கள் மாகாண சபைக்கும்
உள்ளூராட்சி
சபைகளுக்கும்
தமது பிரதிநிதிகளை
தேர்ந்தெடுக்க
சந்தர்ப்பம்
வழங்குவதோடு
அதனூடாக அதிகாரங்களை
மக்கள் கைகளிலேயே
ஒப்படைப்பதே
தமது எதிர்பார்ப்பாகுமென
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில்
முன்னொருபோது
மில்லாதவாறு
செயற்றிட்டங்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்ட
ஜனாதிபதி,
அங்கு இடம்பெறும்
ஒவ் வொரு
அபிவிருத்தியும்
பயங்கரவாதத்திற்
கான வழிகளை
மூடும் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவின்
இரண்டாவது
பதவியேற்பு
நிகழ்வு நேற்று காலி முகத்திடலிலுள்ள
ஜனாதிபதி
செயலகக் கட்டிட முன்றலில்
நடைபெற்றது. பிரதமர் டி.எம்.
ஜயரட்ன, சிரேஷ்ட அமைச் சர்கள்,
மதத் தலைவர்கள்,
ராஜதந்திரிகள்
பாராளுமன்ற
உறுப்பினர்கள்
மற்றும் முக்கியஸ்தர்கள்
பலரும் கலந்துகொண்ட
இந்நிகழ்வில்
நாட்டு மக்களுக்கு
உரையாற் றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தமதுரையில்
மேலும் தெரிவித்த
தாவது; ஐந்து வருடங்களுக்கு
முன்னர் நீங்கள் என்னிடம் ஒப்படைத்த
நாட்டை விட சிறந்த
நாடொன்றிலேயே
தற்போது நீங்கள் வாழ்கின்aர்கள்
என்பது உண்மை.
வழங்கப்பட்ட பொறுப்பினை
நிறை வேற்றி
முன்பிருந்ததை
விட சிறப்பான
நாட்டைக்
கட்டியெழுப்பிய
பின் மக்கள்
முன் உரையாற்றும்
தலைவன் நான் என்பதில்
மகிழ்ச்சியடைகின்றேன்.
கடந்த 2005 நவம்பர்
19ம் திகதி நான் பதவியேற்று
நாட்டைப்
பொறுப்பேற்றபோது
இந்த நாடு
இரண்டாகப்
பிளவுபட்டிருந்தது.
இரவு பகல் எனப் பாராமல்
பெரும் எதிர்ப்புகளுக்கு
மத்தியிலும்
பொறுப்புடனும்
அர்ப்பணிப்புடனும்
நான் செயற்பட்டமை
சகலரும் அறிந்ததே.
அதனைத் தொடர்ந்து
கடந்த வருடம் மே 19ம் திகதி
பயங்கரவாதத்தை
வென்று உலகின் பாராட்டைப்
பெற்றுக்கொண்ட
துடன் நாட்டை ஒன்றிணைத்தோம்.
இன்று நவம்பர்
19ம் திகதி எமது தாய்
நாட்டை உலகின் முன்னிலையில்
இலங் கையை
உன்னத நாடாக உயர்த்துவதற்கான
எதிர்பார்ப்புடனேயே
பொறுப்பேற்கிறேன். 2005ம் ஆண்டு
மஹிந்த சிந்தனை கொள் கைத்
திட்டத்தை
முன்வைத்து
அதன் மூலம்
நாட்டை மீட்டு ஐக்கியப்படுத்தினோம்.
இன்று முதல் மஹிந்த சிந்தனையின்
எதிர் காலத் திட்டம்
ஆரம்பமாவதுடன்
அதன் மூலம்
உலகின் உன்னத நாடாக
இலங்கையைக்
கட்டியெழுப்புவதே
எமது இலக்கு.
2005 ல் இருந்தது போன்று பன்மடங்கு
பலம் தன்னம்பிக்கையுடனேயே
இம்முறை நாம் நாட்டைப்
பொறுப்பேற்றுள்ளோம்.
நம்மில் பெரும்பாலானோர்
தெற்கில்
இரண்டு கிளர்ச்சியையும்
வடக்கில்
30 வருட பிரிவினைவாதத்தையும்
கண்டுணர்ந்
தவர்கள். பிரிவினைவாதத்தைப் போன்றே
கிளர்ச்சியின்
மூலமும் நமது தாய்நாடு
உலகப் படத்தில் அடிமட்டத்திற்கு
வீழ்ச்சி
யுற்றமையை
நாம் கண்டுள்ளோம்.
இதனால் இன்னும் 20 அல்லது 30 வருடங்களில்
நாடு மீண்டும்
இரத்த ஆற்றில் மிதப்பதைத்
தடுக்கவும்
உலகின் முன்னி லையில் நாம் தனித்துவமாக
எழுந்து நிற்கவும்
வழிவகை செய்வதே எமது முதன்மையான
நடவடிக்கையாகவேண்டும்.
அதற்காக எமது தாய் நாட்டில்
இனங் களுக்கிடையிலான
சமத்துவம்
சமாதானம்
நிலைப்பதற்கு
வழி செய்வது
அவசியம். அதனால்தான் நாட்டின்
மக்கள் தொகையில் நூற்றுக்கு
80 வீதம் வாழும் கிராமப் பிரதேசங்களை
முன்னேற்றுவதற்கு
மஹிந்த சிந்தனை மூலம் தீர்மானித்தோம்.
இதனால் கொழும்பிற்கு
வெளியே நகரங்கள் கிராமங்களில்
கவிழ்ந்திருந்த
இருள் நீங்கி ஒளியேற்பட்டுள்ளது. ஐந்து துறைமுகங்கள்
ஏற்படுத்தப்பட்டதும்
இத்தகைய பகுதிகள் உயர் பொருளாதார
வலயங்களாக
மாற்றம்பெறுவது
உறுதி.
பாரிய அபிவிருத்தியை
முன்னெடுக்கும்
போது இன்னும்
பல நகரங்கள்
கட்டி யெழுப்பப்படும். இதன் மூலம் வர்த்தகம்
வேலை வாய்ப்புத்துறைகளில்
பாரிய முன்னேற்றம்
ஏற்படும்.
பயங்கரவாதத் திடமிருந்து
மீட்கப்பட்ட
நாடு 2012 இறுதிக்குள்
இருளிலிருந்து
மீட்கப்பட்ட
நாடாக ஒளிபெறும்.
அது மட்டுமன்றி
எமது மின்சாரத்
திட்டங்களின்
மூலம் நாட்டின் சகல குடும்பங்களும்
ஒளிபெறுவதும்
உறுதி
எம்முன் உள்ள எதிர்காலமானது
நாட்டிற்காக
நாம் அனைவரும்
உழைக்க வேண்டிய காலமாகும். பயனுள்ளதாகவும் வருமான
மீட்டுவதாகவும்
நாட்டை உயர்த்துவதே
எமது எதிர்பார்ப்பு.
எமக்கு எமது இளைய தலைமுறை
யினரின் மீது அதீத
நம்பிக்கையுள்ளது. எமது இளைஞர்கள்
முப்படைகளிலும்
இணைந்து உலகம் பாராட்டும்
வெற்றியை
ஈட்டித் தந்தமையை நாம் நினைவில்
கொள்ள வேண்டும்.
எமது எதிர்கால
சந்ததியினர்
முன்மொழி
யிலும் கற்றுத் தேர்ந்து தொழில்நுட்ப
ரீதியில்
75 வீதமாக முன்னேற்றமடைவதையே
நாம் எதிர்பார்ப்பாகக்
கொண்டுள்ளோம். நாம் இந்த நாட்டை அறிவின் கேந்திரமாக்
கும்போதுஅவர்கள்
அத்தகைய நிலையை எட்ட முடியும்
என்பதே எமது நம்பிக்கை.
எமது நாட்டின்
பிரச்சினைகளை
இனங்காணவும்
அதனைத் தீர்க்கவும்
போதிய தெளிவு எம்மிடமுண்டு. இலங்கை வளர்ச்சியடைந்து
வரும் நாடுகளின்
ஒரு மாதிரி
அல்ல. எந்தவொரு
கருத்தை தெரிவிப்பதற்கும்
தீர்மானங்களை
எடுப்பதற்கும்
உரித்துடையவர்கள்.
எமது நாட்டுக்குச்
சாதகமான தீர்வையே நாம் தேடுவோம். பயங்கரவாதிகளினது எதிர்பார்ப்பும்
மக்களுடைய
எதிர்பார்ப்பும்
ஒன்றல்ல என்பதை நாம் அறிவோம்.
வரலாற்றில் முன்னெப்போதும்
இல்லாத செயற் திட்டங்களை
நாம் வடக்கு
கிழக்கில்
மேற்கொண்டுள்ளோம்.
வடக்கு, கிழக்கில்
இடம்பெறும்
சகல அபிவிருத்திகளும்
பயங்கரவாதத்திற்கான
வழிகளை இல்லாதொழிப்பது
உறுதி. வறுமையை ஒழிப்பதும்
உட்கட்டமைப்பு
வசதிகளை வழங்குவதும்
அரசியல் தீர்வின் பாரிய பகுதியாகும்
என்பதே எனது நம்பிக்கை.
வடக்கு மக்கள்
ஜனாதிபதித்
தேர்தலில்
சுதந்திரமாக
வாக்களித்துள்ளார்கள். பொதுத் தேர்தலில்
தமது பிரதிநிதிகளைத்
தேர்ந்தெடுத்துள்ளனர்.
எதிர்காலத்தின் உள்ளூராட்சி
சபைகளுக்குப்
பிரதிநிதிகளைத்
தேர்ந்தெடுக்கும்
வாய்ப்பு
அவர்களுக்கு
வழங்கப்படும்.
இதன் மூலம் மக்கள் கைகளிலேயே
அதிகாரங்களை
வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.
எமது வெளிநாட்டுக்
கொள்கையானது
பிளவுபடாத
கொள்கையாகும். கடந்த யுகத்தில்
தேசிய பாதுகாப்புக்காக
நாம் பல
நாடுகளுடன்
இணக்கப்பாட்டுடன்
செயற்பட்டோம்.
தற்போது உருவாகியுள்ள
அபிவிருத்தி
யுகத்தில்
அதற்காக 1திlழி
ஒத்துழைப்பு
வழங்கும்
நாடுகளுடன்
நட்புக்கரம்
நீட்டுவோம்.
சமாதானமின்றி அபிவிருத்தியில்லை. அபிவிருத்தியின்றி சமாதானமில்லை.
அதனால் தேசிய பாதுகாப்புக்காக
நட்புறவு
கொண்ட நாடுகளுடன்
உறவுகளை பலப்படுத்திக்கொண்டு
புதிய தொடர்புகளை
ஏற்படுத்தவும்
நாம் நடவடிக்கை
எடுப்போம்.
கஷ்டமான விடயங்கள்
என கைவிடுவது
எமது கலாசாரமல்ல.
நாட்டை மீட்பது மட்டுமன்றி
தற்காலத்தில்
இந்த சமூகம்
மீள முடியாது
என சிலர்
நினைக்கின்ற
பிரச்சினைகளுக்கும்
தீர்வு காண்பதற்கு
நாம் பின்னிற்கப்போவதில்லை.
கடந்த பொதுத்
தேர்தல் மற்றும் ஜனாதிபதித்
தேர்தலிலும்
தொகுதி வாரியாக வேறு எந்த
நாடும் எட்ட முடியாத
வெற்றியை
நாம் பெற்றுள்ளோம். பாதாள உலகமற்ற
சட்டவிரோத
செயல்களற்ற,
கப்பம், ஆயுதப் பரிமாற்றமற்ற
நாட்டை கட்டியெழுப்புவதே
எமது எதிர்பார்ப்பு.
எதிர்கால வெற்றிகளின்
முக்கிய பங்காளிகளாக
இந்நாட்டுப்
பிரஜைகள்
அனைவரும்
திகழவேண்டும்
என்பதே எமது அவா. அதற்காக இன, மத,
குல, அரசியல்,
கட்சி பேதமின்றி
எம்முடன்
இணையுமாறு
நான் அழைப்பு
விடுக்கின்றேன்.
இந்நாட்டை உயர்ந்த
இடத்திற்கு
நான் கொண்டு
வந்துள்ளேன். நீங்கள் என்னை உயர்த்துவதற்கு
வேறு இடமில்லை.
எனது தாய்நாடு
அன்றி உயர்ந்தது
என்று எனக்கு எதுவுமில்லை.
நான் ஓய்வு பெற்ற நாளில் மெதமுலன வீட்டிலேயே இருப்பேன். அந்நாட்களில் இந்த நாட்டின் பிரஜையொருவர் என்னை வந்து பார்த்து ‘நீங்கள் நாட்டுக்கு செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்Zர்கள்’ என பெருமையுடன் கூறினால் அதுவே எனக்கு பெரும் திருப்தி எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |