Contact us at: sooddram@gmail.com

 

2011: வரவு-செலவுத் திட்ட உரை

அறிமுகம்

1. கெளரவ சபாநாயகர் அவர்களே, நீங்கள் இந்த பாராளுமன்றத்திற்கு தலைமை வகித்துக் கொண்டிருப்பது போல காலஞ்சென்ற எனது தந்தை திரு. டி. ஏ. ராஜபக்ஷ அவர்கள் ஒருபோது பிரதி சபாநாயகராக உங்களது ஆசனத்தை அலங்கரித்திருந்த தோற்றம் எனது நினைவுக்கு வருகின்றது.

இலங்கையினை ஆசியாவில் உண்மையாகவே சுதந்திரமடைந்த, செல்வச் செழிப்பான நாடாக மாற்றுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்காக அவர் காலஞ்சென்ற திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க மற்றும் பலருடன் எதிர்க்கட்சிக்கு மாறியதை நான் நினைவுபடுத்திப் பார்க்கின்றேன்.

இம்மாற்றமானது எமது தேசிய மரபுரிமைகள், கலாசாரம், ஒழுக்க விழுமியங்கள் மற்றும் எமது சொந்த அடையாளத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. எனினும் இப்பணியானது நிறைவேறாமற் போனது.

2. 26 வருட கால யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதுடன், 2006 ஆம் ஆண்டிலிருந்து பாரிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் நாடு முழுவதிலும் செயற்படுத்தப்பட்ட வேளையில், புதிதாக மக்கள் ஆணையொன்றினைப் பெறுவதற்கான எனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர், நான் புதிய ஆணையொன்றினை மக்களிடம் கோரினேன்.

2010 சனாதிபதி தேர்தலில் ‘மஹிந்த சிந்தனை - எதிர்கால தூர நோக்கு’ என்ற விஞ்ஞாபனத்தினை முன் வைத்தேன். அதனை மக்களுக்கு அறிமுகப்படுத்திய போது, எனது முதலாவது பதவிக் காலத்தில் மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த சமாதானத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம் அவற்றினை வெற்றி கொண்டேன் என்பதை நினைவூட்டினேன்.

அவர்களது எதிர்கால வேணவாக்களையும் நிறைவேற்றுவதற்கான எனது ஆழ்ந்த அர்ப்பணிப்பினையும் உறுதிப்படுத்தினேன,. 1.84 மில்லியன் வாக்குகளால் நான் தேர்தலில் வெற்றிபெற்றேன்.

இது 2005 சனாதிபதித் தேர்தலில் நான் பெற்ற 180,786 பெரும்பான்மை வாக்குகளைவிட உறுதியானதொரு ஆணையாக இருந்தது. தொடர்ந்து வந்த பாராளுமன்றத் தேர்தல்களில் எனது தலைமைத்துவத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 144 ஆசனங்களை வெற்றிபெற்றது. இன்று அரசாங்கம் இந்த பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் அதிகாரம் பெற்றிருக்கின்றது.

3. கெளரவ சபாநாயகர் அவர்களே, எமது தாய் நாட்டினை ஒளிமயமான எதிர்காலத்தின்பால் நாம் இட்டுச் செல்வோம் என்ற நம்பிக்கையினை மக்கள் எம்மீது வைத்திருந்தனர். அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் மரியாதையான வாழ்க்கை. சுத்தமான சுற்றாடல் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கான சிறந்த வாழ்க்கை என்பனவாகும். அவர்களது வேணவாக்களை நிறைவேற்றி வைப்பதற்கான தலைமைத்துவத்தினை எவ்வித நிபந்தனையுமற்ற வகையில் வழங்குவதற்க நான் தொடர்ந்தும் உறுதியான அர்ப்பணத்துடன் இருக்கின்றேன்.

அத்தகைய உறுதிப்பாட்டுடன்தான் இன்று நான் 2011 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தினை சமர்ப்பிப்பதற்கு இவ்விடத்தில் எழுந்து நிற்கின்றேன். கடந்த 5 வருடங்களின் போது வறுமையினை 7.6 சதவீதமாக குறைப்பதற்கு முடியுமாக இருந்த அதேவேளை எமது நாட்டினை ஆசியாவில் வளர்ந்து வரும் பொருளாதாரமொன்றாக மாற்றுவதற்கு நடவடிக்கை எமுத்ததற்காகவும் நிதி திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
 

பின்னணி

4. கெளரவ சபாநாயகர் அவர்களே, நான் சனாதிபதியாக பதவியேற்ற போது நாட்டில் எவ்வித ஸ்திரத்தன்மையும் காணப்படவில்லை. பாராளுமன்றத்தில் பெரும்பான்மைநிலையாவது காணப்படவில்லை. சவால்கள் பல காணப்பட்டன. நாடு நீண்ட கால யுத்தமொன்றின் நடுவில் சிக்கிப் போயிருந்ததுடன் இரண்டாகப் பிரியும் தறுவாயில் இருந்தது. பிரிவினைவாதம், பயங்கரவாதம், சமூகவாதம் மற்றும் வெளிநாட்டு தலையீடுகள் என்பவற்றினால் நாடு சூழப்பட்டிருந்தது.

எல் ரி. ரி. ஈ. ஒரு வெற்றி கொள்ளப்படமுடியாத சக்தி என்ற கண்ணோட்டம் பிரசித்தி பெற்றிருந்தது. எல். ரி. ரி. ஈ. உடன் மோதுவது பாரியதொரு தவறாக கருதப்பட்டது. இந்த நாடு 2004இல் சுனாமியினால் முழுவதுமாக நாசமாக்கப்பட்டது. எமது இயற்கைச் சூழல் பல வருடங்களுக்கு அழித்தொழிக்கப்பட்டது. வன வளம் குறைவடைந்தது.

இவை அனைத்தினையும் விட, எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதம் காணப்பட்ட காலத்தினையும் விட கூடுதலான காலம் நிலவிய வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையினை நான் மரபு வழியுரிமையாகப் பெற்றுக் கொண்டேன். அரசிறைக்கான எந்தவித வழிவகையும் காணப்படவில்லை. பயங்கரவாதத்திலிருந்து இந்த அரசின் இறைமையினை பாதுகாப்பதற்குக் கூட தேவையான நிதி கிடைக்குமளவு இருக்கவில்லை.

புதிய சுதந்திரக் கொள்கைகள் ஆழ வேரூன்றப்பட்டிருந்தன. உள்நாட்டில் பெற்றுக் கொள்ளப்பட்ட தீர்வுகள், உள்நாட்டு திறன்கள் மற்றும் ஆற்றல்கள் என்பன தரம் குறைவானதாகக் கருதப்பட்டன. அரச உடமைகளின் விற்பனை, தேவையற்ற மூலதன செலவினம், வறியவர்களுக்கான உதவிகள், வருமானம் தரும் வரிகளுக்கான மன்னிப்புக்களை வழங்குதல் என்பன கிரமமான நீண்ட கால கொள்கை வழக்காறுகளாகக் காணப்பட்டன. இதன் விளைவாக, நாடு தெளிவான பாதையை நோக்கிச் செல்ல முடியாதிருந்தது.

5. கெளரவ சபாநாயகர் அவர்களே, கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களே இந்த மரபுரிமை தற்பொழுது வரலாறொன்றாகி விட்டது. யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் நாடு ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவதற்கு எவ்வித சந்தர்ப்பமும்இல்லை. சேதமடைந்த பிரதேசங்களை முடிந்தளவு விரைவாக நாம் கட்டியெழுப்ப வேண்டியுள்ளதுடன், 2016 ஆம் ஆண்டளவில் முழு நாடும் உறுதியான நடுத்தர வருமான பொருளாதாரத்தை கொண்டதாக வளர்ச்சியடைய வேண்டும்.

எம்மால் மீளப்பெற முடியாத கடந்த கால வேதனையின் விலையினை நாம் அனைவரும் அறிவோம். இந்தியாவின் அரசியல் மதிநுட்பமிக்க தலைவர் ஒருவர், அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த பல சனநாயக தலைவர்கள், புத்திஜீவிகள், சமயத் தலைவர்கள் மற்றும் பல சிறுவர்களின் பெற்றோர் அதே போன்று பல பெற்றோரிகளின் பிள்ளைகள் எனப் பலரையும் விலையாகக் கொடுத்து 26 வருடங்களின் பின் எனமு தேசம் எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதத்திலிருந்து மீண்டும் சுதந்திரத்தினைப் பெற்றுள்ளது.

எமது இராணுவத்திலுள்ள ஜிணிச்சல், மிக்க ஆண்களும் பெண்களம் மிலேச்சத்தனமான எல். ரி. ரி. ஈ. பயங்கரவாதத்திலிருந்து மக்களை விடுவிக்கும் மனிதாபிமான நடவடிக்கையில் பங்குகொண்டனர். எமது இராணுவ வீரர்கள் பலர் தமது வாழ்வை இழந்தனர். சிலர் படுகாயமுற்றதுடன் இன்னும் சிலர் அங்கவீனமுற்றனர். அவர்களது நீண்ட கால நலன்கள் கவனிப்பது எமது கடமையாகும்.

இதனால் கெளரவ சபாநாயகர் அவர்களே பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்புரி விடயங்களைக் கவனிப்பதற்காக 3 வருட காலப் பகுதிக்கு ருபா 3,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முதலில் நான் முன்மொழிகின்றேன். இராணுவப் படைவீரர்களது குடும்ப சூழ்நிலையினை மேம்படுத்துவதற்காக குடும்பத்தில் பிறக்கும் மூன்றாவது பிள்ளைக்காக குடும்பமொன்றுக்கு ரூபா 100,000 இனை கொடுப்பனவாக வழங்குவதற்கும் நான் முன்மொழிகின்றேன்.

அபிவிருத்தி அணுகுமுறை

6. கெளரவ சபாநாயகர் அவர்களே, கடந்த அரசாங்கங்கள் போலல்லாது பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் அதேவேளை நாம் பொருளாதாரத்தினை மறந்து விடவில்லை. 2006 இல் கிடைக்கப் பெற்ற வெற்றியுடன் நாம் உடனடியாக பாரிய உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை ஆரம்பித்தோம். மின்வலு உற்பத்தி மற்றும் துறைமுக சேவைகளின் போதியளவு ஆற்றலினை நாம் உருவாக்கியுள்ளோம்.

முழு தேசமும் மின்சாரம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தினை அடைந்து கொள்ள முடியுமாக உள்ளது. நாடு முழுவதிலும் பாதைகள் மற்றும் பாலங்களின் கட்டுமானத்திற்காக அரசாங்க முதலீடுகளை நாம் விரிவுபடுத்தியுள்ளோம். மொறகஹகந்தை, உமாஓயா, தெதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டங்கள் நிர்மாணத்துடன் 32 பிரதான நீர்ப்பாசன முறைமைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் புனரமைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எமது மக்கள் தரமான குடிநீரினை பெற்றுக் கொள்வதனை உறுதிப்படுத்துவதற்கு தேசிய மற்றும் சமுதாய மட்டத்தில் குடிநீர் கிடைப்பனவினை விரிவாக்கும் வகையில் அரசாங்கத்தின் செலவினம் திருப்பப்பட்டுள்ளது. பாடசாலை வசதிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அதேபோன்று வைத்தியசாலை வசதிகள் என்பனவற்றை நவீன மயப்படுத்துவதற்கு கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகள் என்பன எமது முன்னுரிமையாகக் காணப்பட்டன. எமது நாட்டில் தற்பொழுது பாரிய அபிவிருத்தி செயற்பாடுகள் இடம் பெற்று வருவதற்கு நாம் அனைவரும் சாட்சிகளாகும்.

7. கெளரவ சபாநாயகர் அவர்களே, கிராமங்களை வலுவூட்டுவது என்பது அபிவிருத்தியின் மையக் குறிக்கோளாகும். இம்முயற்சியில் ஒவ்வொரு கிராமத்திலுமுள்ள மக்கள் மின்சாரம், பாதை வலையமைப்பு, குடிநீர், தொலைத்தொடர்பாடல் வசதிகள், சந்தை இடங்கள் மற்றும் நகர வசதிகள் என்பவற்றினை அடைந்து கொள்வதை கிராமிய அபிவிருத்திக்கான முன்னெடுப்புகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளோம்.

இவை அனைத்திற்கும் மேலாக அவர்கள் உணவு மற்றும் சக்தி பாதுகாப்பினை கொண்டிருப்பதுடன் வாழ்வதற்கு தேவையான பசுஞ் சூழலொன்றினையும் கொண்டிருத்தல் வேண்டும். 2006- 2010 காலப் பகுதியின்போது கம நெகும நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ரூபா 27,888 மில்லியன் செலவில் 72,105 சிறிய கருத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இக்கருத்திட்டங்களின் மூலம் இன்று வரை 11.9 மில்லியன் மக்கள் நன்மையடைந்துள்ளனர்.

கிராமிய மைய முன்னெடுப்புகள் பெரிய கருத்திட்டங்களில் சமுதாயப் பங்களிப்பினை இயலச் செய்துள்ளது. அதனால் “கம நெகும” திட்டத்தினூடாக ஒவ்வொரு கிராமமும் அபிவிருத்தி செய்யப்படுமென்ற நம்பகத்தன்மை மிக்க எதிர்பார்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அடுத்த 3 வருடங்களின்போது இலங்கையில் எந்தவொரு தேர்தல் தொகுதியும் இந்தப் பாரிய அபிவிருத்தியிலிருந்து விடுபடமாட்டாது.

சட்ட ரீதியற்ற மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் பாவனையிலிருந்து எமது மக்களை விடுவிப்பதற்கான விசேட முன்னெடுப்பொன்றாக “மத்தட்ட தித்த” நிகழ்ச்சித் திட்டத்தினை நாம் செயற்படுத்தியுள்ளோம். புகை பிடித்தல் கடந்த 4 வருடங்களில் 18 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. கொழும்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்ட்ட ஆய்வொன்றிலிருந்து சட்ட ரீதியற்ற மதுபான பாவனையும் குறைவடைந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

8. கெளரவ சபாநாயகர் அவர்களே, 25 மாவட்டங்கள் மற்றும் மாகாண மட்ட பணிகள் என்பவற்றின் வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னரான மீளாய்வொன்றினை நான் மேற்கொண்டுள்ளேன். அவற்றினது முன்னேற்றம் பற்றிய சில ஆதாரங்களை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்கின்றேன். 2006 இல் 15.2 சதவீதமாகக் காணப்பட்ட இலங்கையின் வறுமையானது 2010 இல் 7.6 சதவீதமாக குறைவடைந்தது.

கிராமியப் பிரதேசங்களில் வறுமை 15.7 சதவீதத்திலிருந்து 7.6 சதவீதமாக குறைவடைந்த அதேவேளை தோட்டப் பிரதேசங்களில் அது 32 சதவீதத்திலிருந்து 9.2 சதவீதமாக குறைவடைந்தமை மிக முக்கிய அபிவிருத்தியாகும். அடுத்த 5 வருடங்களில் வறுமையினை 5 சதவீதத்திற்கு கீழ் குறைப்பதற்கு எமது உபாயங்களை நாம் மாற்றியமைப்போம்.

9. கெளரவ சபாநாயகர் அவர்களே, இந்த முன்னேற்றம் எவ்வாறு அடையப் பெற்றது என்பதை நான் உங்களுக்கு விபரிக்கின்றேன். கிராமியத் துறையில் மின்சார அடைவானது 2006 இல் 78.5 சதவீதத்திலிருந்து 2009 இல் 83.2 சதவீதமாக அதிகரித்த அதேநேரம் தோட்டத் துறையில் 62.3 சதவீதத்திலிருந்து 84 சதவீதமாக அதிகரித்தது. நாடு முழுவதிலும் பாதுகாப்பான குடிநீருக்கான அடைவு 84 சதவீதத்திலிருந்து 87 சதவீதமாக அதிகரித்ததுடன் தோட்டத் துறையில் 46 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக அதிகரித்தது.

2006 இல் நகர மற்றும் கிராமங்களிலுள்ள 98 சதவீதமான சிறுவர்கள் மாத்திரமே பாடசாலைக்குச் சென்றனர். 2009 இல் இது பெரும்பாலும் 100 சதவீதமாக அதிகரித்தது.

தோட்டத் துறையில் பாடசாலை வரவு 2006 இல் 92 சதவீதத்திலிருந்து 2009 இல் 97.4 சதவீதமாக அதிகரித்தது. கெளரவ சபாநாயகர் அவர்களே, மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொண்டதில் முன்னணி வகிக்கும் நாடொன்றாக இலங்கையினை நாம் ஆக்குவோம் என இப்பாராளுமன்றத்தில் நான் உறுதியளிக்கின்றேன்.

10. கெளரவ சபாநாயகர் அவர்களே, நாடு தழுவிய வேலையின்மை வீதமானது 2005 இல் 7.2 சதவீதத்திலிருந்து 2009 அளவில் 5.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இதற்கு மேலதிகமாக எமது விவசாயிகளினதும், ஊழியப் படையினதும் சம்பாத்தியங்கள் அதிகரித்துள்ளது. 2005 இல் விவசாயிகள் தாம் உற்பத்தி செய்த நெல்லின் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவிற்காவது உத்தரவாதத்தினை பெற்றிருக்கவில்லை.

இதனை நாம் கிலோ ஒன்றுக்கு 24-28 ரூபா என்ற வீச்சில் பேணிக் கொள்வதற்கு முடியுமாக இருந்தது. சோளம், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் சோயா அவரை போன்ற பல பிற தானியங்களுக்கான உயர் உற்பத்தியாளர் விலைகளும் காணப்பட்டன. நெல் விவசாயிகளுக்கு உரத்தினை 50 கிலோ கிராம் பொதியொன்று 350 ரூபாவிற்கு நாம் வழங்குகின்றோம்.

பசும் பால் லீற்றரொன்றுக்கு 18 ரூபாவினை பெற்று வந்த பாற்பண்ணையாளர்கள் தற்பொழுது லீற்றரொன்றுக்கு 44 ரூபாவினை பெறுகின்றனர். தேயிலை, இறப்பர் மற்றும் வாசனைத் திரவிய பயிர்ச் செய்கையாளர்கள் கவர்ச்சிகரமான விலையினைப் பெற்றுக் கொள்கின்றனர்.

விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பணியாற்றும் எமது மக்களின் தினசரி ஊதியத்தின் விகிதம் 2005 மற்றும் 2009 என்பவற்றுக்கிடையில் 100 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. எனவே கெளரவ சபாநாயகர் அவர்களே, எமது பொருளாதார நிகழ்ச்சித் திட்டமானது அவர்கள் நகர, கிராமிய அல்லது தோட்டப் பிரதேசங்களில் எதில் வாழ்ந்தாலும் அவற்றினைப் பொருட்படுத்தாது பரந்தளவிலான நன்மைகளை வழங்கியுள்ளது.

11. கெளரவ சபாநாயகர் அவர்களே, விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வட விடுவிக்கப்பட்ட திகதியிலிருந்து நாம் அடைந்து கொண்ட முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கம் 263,000 பேரை மீள் குடியேற்றுவதற்கு இயலுமாக இருந்தது. 15,000 பேர் மாத்திரமே இன்னும் மீள் குடியேற்றப்படுவதற்குள்ளனர். பெருமளவிலான விவசாய நிலங்கள், பொது இடங்கள், குடியேற்றப் பிரதேசங்கள் என்பவற்றில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.

மின்சாரம், நீர் வழங்கல் வசதிகள், பாதைகள் மற்றும் பாலங்கள் நிர்மாணம், பாடசாலைகளைப் புதுப்பித்தல், சுகாதார வசதிகள் மற்றும் பிற பொது இடங்களுக்கான எற்பாடு என்பன வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை வழமையான நிலைமைக்கு மாற்றியமைத்துள்ளது. இந்த முன்னெடுப்புகளினூடாக தாபிக்கப்பட்ட பொருளாதார தொடர்பு எமது பல்லின மற்றும் பல்வகை கலாசார சமூகத்தின் உள்ளங்களையும் எண்ணங்களையும் இணைப்பதனையும் இலக்காகக் கொண்டுள்ளது.

வடக்கில் 2 பில்லியன் ஐ.அ.டொலர் மீள் கட்டமைப்பு நிகழ்ச்சித் திட்டமொன்றினை அரசாங்கம் செயற்படுத்தியுள்ளது. இந்தப் பிரதான மீள் கட்டமைப்பு செயற்பாடுகள் 2012ம் ஆண்டளவில் நிறைவடையுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

12. கெளரவ சபாநாயகர் அவர்கேள, அத்தகைய சமாதானம் மற்றும் அபிவிருத்தி முன்னெடுப்புகளை மேற்கொண்ட எமது அரசாங்க ஊழியர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு உரிய நன்மதிப்பினை நாம் வழங்குதல் வேண்டும். அரசாங்கத் துறையானது மிக முக்கியமான பங்களிப்பொன்றினை வழங்குவதாக நான் நம்புகின்றேன். நாம் அனைவரும் அறிந்தது போன்று, அரசாங்கத்துறையானது ஓரங் கட்டப்பட்ட ஒரு காலமிருந்தது.

கடந்த 5வருடங்களின் போது எமது அரசாங்கம் இந்த நிலைமையினை மாற்றியமைத்துள்ளது. அரசாங்க ஊழியர்கள் 1.3 மில்லியனாக அதிகரித்துள்ளனர். அனைத்து வகுதிகளையும் சேர்ந்த ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களது துயரங்களில் பெரும்பாலானவை தீர்க்கப்பட்டும் உள்ளன. அவர்களுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன் வீடமைப்பு மற்றும் பிற கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டுள்ளன.

13. 2006 ல் அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பங்களிப்பு மருத்துவ திட்டமொன்றினை நான் அறிமுகப்படுத்தினேன். இக்காப்புறுதி நன்மைகளை ஓய்வூதியம் பெறுநர்களுக்கும் விரிவாக்குவதற்கு நான் முன்மொழிகின்றேன். எனவே, தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியம் தேசிய மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுநர்களுக்கென பிரத்தியேகமாக தெரிவு செய்யப்பட்ட வாட்டுக்களை தரமுயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன்.

இத்திட்டத்தின் கீழ் அத்தகைய வைத்தியசாலைகள் மருத்துவ மற்றும் சத்திரசிகிச்சைகளுக்கான செலவினங்களை அறவிட்டுக் கொள்ள முடியும். பிரதான வைத்தியசாலைகளில் அத்தகைய வசதிகளை தரமுயர்த்துவதற்கும் பராமரிப்பதற்குமாக தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்கு ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும். இம் முன்மொழிவின் மூலம் ஏறக்குறைய 450,000 ஓய்வூதியம் பெறுநர்களும் 1.3 மில்லியன் அரசாங்க ஊழியர்களும் குறிப்பிடத்தக்களவு நிவாரணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.

முன்னேற்றத்தை நோக்கிய பாதை

14. கெளரவ சபாநாயகர் அவர்களே, 1977 இலிருந்து 2004 வரைக்குமான 25 வருடங்களுக்கு மேற்பட்ட எமது பொருளாதாரம் தலைக்குரிய வருமானத்தினை 300 ஐ.அ. டொலரிலிருந்து 1,000 ஐ.அ. டொலர்களாக அதிகரிக்கச் செய்தது. எவ்வாறாயினும், பல்வேறுபட்ட பாதகங்களை எதிர்நோக்கிய போதும் 5 வருடங்களுக்குள் தலைக்குரிய வருமானத்தை நாம் இரட்டிப்பாக்கினோம்.

(5ஆம் பக்கத் தொடர்)

இந்த வருடத்தில் தலைக்குரிய வருமானம் 5 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட 1,000 ஐ.அ டொலர்களுடன் ஒப்பிடுகையில் ஏறக்குறைய 2,375 ஐ.அ.டொலர்களாக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முழு மொத்த “மஹிந்த சிந்தனை” கொள்கை வேலைச்சட்டகத்திற்குள் நடுத்தர வருமான நாடொன்றாக சேர்த்துக் கொள்வதற்கு சாதாரண மக்களுக்கு நன்மை வழங்கும் செயன்முறை ஒன்றினை இவ்வனைத்தும் உள்ளடங்கிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கும் சில ஆரோக்கியமற்ற பொருளாதார எண்ணக் கருக்களையும் உபாயங்களையும் நாம் திருத்துவதற்கு முடியுமாக இருந்தது.

ரெலிகொம், ஸ்ரீலங்கன், காப்புறுதி மற்றும் வாயு போன்ற பல்வேறுபட்ட சொத்துக்களை மக்களின் நலனுக்காக நாம் மீண்டும் பெற்றுக் கொள்ள முடியுமாக இருந்தது.

15. யுத்தம் முடிவடைந்தவுடன் பாரிய உட்கட்டமைப்பு ஏற்பாடுகள் இடம்பெறுவதுடன் அடுத்த 6 வருட காலத்திற்குள் துரிதப்படுத்தப்பட்ட அபிவிருத்திச் செயன்முறையொன்றில் ஈடுபடுவதற்கான சிறந்ததொரு நிலையில் தற்பொழுது நாம் இருக்கின்றோம். வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்கள் பயங்கரவாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டதுடன் அபிவிருத்திக்காக பாரியளவிலான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை எம்மால் பயன்படுத்துவதற்கு முடியுமாக உள்ளது.

எமது நாடு சுற்றுலாத்துறைக்கான பாதுகாப்பானதும் விரும்பப்படுகின்ற இடமாகவும் தற்பொழுது மாறியுள்ளது. சுகாதாரம் மற்றும் வாழ்க்கை சுட்டெண்களில் உலகத்தில் எமது நாடு முன்னணியில் உள்ளதுடன் அரசியல் வலுவூட்டுகை சுட்டிகளில் 6வது ஆகவும், உலகத்தில் பால்நிலைச் சமத்துவத்தில் முதல் 20 நாடுகளுக்கு மத்தியில் காணப்படுகின்றது, கல்வி மற்றும் சுகாதாரத்தில் எமது செயலாற்றுகை சராசரியினை விட உயர்வாகக் காணப்படுகிறது.

16. இவை அனைத்தும் 26 வருட கால துன்பம் இந்த பூமியில் திரும்பவும் மீட்டப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்தவதற்கு முழுமையாக பயன்படுத்த வேண்டிய மேலதிக பலமும் ஆற்றல்களுமாகும். தற்பொழுது நாம் மாகாணங்கள் மற்றும் எமது கிராமங்களை சமமாக துரிதகதியில் அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் காணப்படுகிறது. சர்வதேச பொருளாதாரம் ஏறக்குறைய 5 சதவீத வளர்ச்சி விகிதத்தில் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

மிகவும் பாராட்டத்தக்க வகையில் இந்தியா, சீனா மற்றும் ஆசியாவில் பிரதான நாடுகள் அனைத்தும் பிராந்திய மற்றும் சர்வதேச வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பது எமக்கும் நன்மையளிக்கின்றது. இதனால் தான் கெளரவ சபாநாயகர் அவர்களே, “மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு” இல் இலங்கையினை ஆற்றல் மிகுந்த சர்வதேச மையமொன்றாக நாம் எதிர்வு கூறியுள்ளோம்.

இலங்கையின் இட அமைவின் முக்கியத்துவத்தின் நன்மையை பெற்றுக் கொள்வதற்கு எமது அடுத்த முன்னோக்கிய பாய்ச்சல் எமது தாய்நாட்டை கிழக்கு மற்றும் மேலைத்தேய நாடுகளுக்கிடையில் பிரதான இணைப்பாக திகழும் வகையில் கடல், ஆகாய, வர்த்தக, சக்தி மற்றும் அறிவின் கேந்திர மையமொன்றாக அபிவிருத்தி செய்வதாகும்.

17. “மஹிந்த சிந்தனை - எதிர்கால தூர நோக்கு” 2016 ஆம் ஆண்டளவில் தலாவருமானத்தினை 4,000 ஐ. அ. டொலர்களாக மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. உயர் தலாவருமான பொருளாதாரமானது கடந்த 26 வருடங்களில் நாம் இழந்த பல வாய்ப்புக்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எமக்கு உதவும்.

இது நிகழ்கால மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான சிறந்த வாழ்க்கையினை ஏற்படுத்திக் கொடுக்கும். அடுத்த 6 வருடங்களில் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 19 - 21 சதவீதமாகக் காணப்படும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வளங்களிலிருந்தான தனியார் முதலீடுகளை 26 - 28 சதவீதமாக உயர்த்துவதற்கு இலக்கிட்டுள்ளோம்.

இது அரசாங்க முதலீடான ஏறக்குறைய 6 - 7 சதவீதத்துடன் எமது மொத்த முதலீட்டை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 25 - 27 சதவீதத்திலிருந்து 32 - 35 சதவீதமாக அதிகரிப்பதற்கு முடிவதோடு நடுத்தரக் காலப் பகுதியில் 8 சதவீதத்தினை விஞ்சியதாகவும் அதன் பின்னர் 10 சதவீதமாகவும் இலக்கிடப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கும்.

பெறுமதி சேர்க்கப்பட்ட பொருளாதாரத்திற்கான வரிக் கட்டமைப்பு

18. கெளரவ சபாநாயகர் அவர்களே, இந்த முழுமையான தூரநோக்கின் ஒத்துழைப்புடன் எமது முழு வரி விதிப்பனவு உபாயத்தினையும் மாற்றியமைப்பதற்கு நான் நினைத்துள்ளேன். வரி விதிப்பனவு தொடர்பான சனாதிபதி ஆணைக் குழுவின் காண்புகள் சில பெறுமதியான யோசனைகளை முன்வைத்துள்ளது.

எமது வரி முறைமை மிகவும் சிக்கலானது. வரி விகிதங்கள் மிகவும் உயர்வாக காணப்படுவதுடன் வரி விதிப்பனவு மிக குறுகிய அடிப்படையினைக் கொண்டிருக்கின்றது என்பதனை நாம் அனைவரும் ஏற்று கொள்வோம். நான் சில தீர்க்கமான மாற்றங்களைச் செய்வதற்கு முன்மொழிகிறேன். 2009 இல் ஏறக்குறைய 21 பில்லியன் ஐ. அ. டொலர்களாக அல்லது மொத்தம் உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 50 சதவீதமாக இருந்த பொருட்கள், சேவைகளின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீது எனது கவனத்தைச் செலுத்துகின்றேன்.

ஏற்றுமதி - இறக்குமதிப் பொருளாதாரமானது எமது வளர்ச்சிக்கு முக்கியமானதாகும். ஏற்றுமதிப் பொருட்களின் பல்வகைத்தன்மை மற்றும் அவற்றினதும் சந்தைகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடையப்பெற்றுள்ளது. எவ்வாறாயினும் தேயிலை, தைத்த ஆடைகள், தோற்பொருள், இறப்பர், இரத்தினக்கல் மற்றும் ஆபரண உற்பத்திகள், பல பெறுமதியான வாசனைத் திரவியங்கள் அதேபோன்று பல்வேறுபட்ட மூலப்பொருட்கள் என்பவற்றின் பெரும்பாலான ஏற்றுமதிகள் போதிய பெறுமதி சேர்ப்பினை கொண்டிருப்பதில்லை.

எமது தயாரிக்கப்பட்ட உற்பத்திகளை விற்பனை நாமத்துடன் சிறந்த சந்தைப்படுத்தல் முயற்சிகளினூடாக ஊக்குவிப்பதற்கு முடியும். பெறுமதி சேர்க்கப்பட்ட, விற்பனை நாமம் பொறிக்கப்பட்ட ஏற்றுமதி ஆற்றல் நடுத்தரக் காலத்தின் போது 5 பில்லியன் ஐ. அ. டொலர்களை விஞ்சியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

மருந்துப் பொருட்கள், கோதுமை மா, உணவுத் தானியங்கள் மற்றும் சக்தி மூலங்களின் இறக்குமதியில் நாம் இன்னும் தங்கியிருக்கின்றோம். இத்துறைகளில் இறக்குமதி மாற்aடுகளுக்கான சந்தர்ப்பம் 2 பில்லியன் ஐ. அ. டொலர்களை விஞ்சியுள்ளது.

19. இத் தசாப்தத்தில் எமது உற்பத்திப் போக்கு ஏற்றுமதிகளின் விரிவாக்கத்தையும் இறக்குமதிகளின் மாற்aடுகளையும் இலக்காகக் கொண்டிருத்தல் வேண்டும். எமது சர்வதேச வர்த்தக உபாயமானது வர்த்தகப் பற்றாக்குறையினை இல்லாதாக்குவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். எனவே, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிச் செயற்பாடுகளை நாம் மிகவும் உற்பத்தித் திறன் மற்றும் ஆற்றல் மிக்கதாக ஆக்குவது அவசியமாகும். இப்பின்னணியில், நான் பின்வருவனவற்றினை முன்மொழிகிறேன்.

முதலாவது, இலங்கையிலிருந்து பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கு மூலப்பொருள் மற்றும் பகுதியளவில் பதனிடப்பட்ட பொருட்களின் ஏற்றுமதிகள் அனைத்திற்கும் செஸ் வரியினை விதிப்பதற்கு முன்மொழிகின்றேன். முடிவுப் பொருட்களின் ஏற்றுமதிகள் மாத்திரம் அத்தகைய செஸ் வரியிலிருந்து விடுவிக்கப்படும்.

இரண்டாவது எமது தொழில் முயற்சிகளை உலகத்தரத்திலான தொழில்நுட்பத்தினை அடைந்துகொள்ள இயலுமாக்கும் வகையில் இயந்திரம், உபகரணம் மற்றும் மூலப் பொருட்களின் மீதான தீர்வைகளையும் வரிகளையும் குறைப்பதற்கு முன்மொழிகின்றேன். மூன்றாவது, உள்நாட்டு பெறுமதிசேர்ப்பு 65 சதவீதத்தினை விஞ்சியதுடன் இலங்கையில் ஆக்க உரிமையை கொண்டுள்ளதுடன் இலங்கை விற்பனை நாம கைத்தொழில்களுக்கு வருமான வரியினை 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக குறைப்பதற்கு முன்மொழிகின்றேன்.

நான்காவது, அனைத்து ஏற்றுமதிக் கம்பனிகளினதும் வருமான வரி பொதுவான ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக 15 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்படும். ஐந்தாவது உள்நாட்டு தயாரிப்புக் கைத்தொழில்களை அவற்றினது உற்பத்திகளை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிப்பதற்காக, 35 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக லாபங்களின் மீதான வருமான வரியினை குறைப்பதற்கு முன்மொழிகிறேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, இந்த வரி விதிப்பனவு குறைப்பானது, எமது ஏற்றுமதி - இறக்குமதி பொருளாதாரத்தினை இத் தசாப்தத்தில் அவற்றினது பங்களிப்பினை 50 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அதிகரிக்க முடியுமென நான் நம்புகின்றேன்.

20. கெளரவ சபாநாயகர் அவர்களே, சுற்றுலாத் துறையிலிருந்து வருமானம் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்குவதில் இலங்கை மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சுற்றுலாத்துறை பல பில்லியன் டொலர்களை வருமானமாகப் பெற்றுத் தரும் வியாபாரமொன்றாக இருத்தல் வேண்டும். இவ்வருடத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஏறக்குறைய 600,000 ஆக இருக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாத் துறையிலிருந்து வருமானம் மிகக் குறைந்த அதிகரிப்பினை மாத்திரமே காட்டியுள்ளது.

இதற்கான பிரதான காரணம் இக்கைத்தொழில் முழுவதும் குறைந்த விலையிடப்பட்டதாகும். எனவே, அனைத்து ஹோட்டல்களையும் சிறந்த கட்டணத்தை அறவிடுவதற்கு நிர்ப்பந்திக்கும் வகையில் 2011 ஜனவரியிலிருந்து இரவொன்றிற்கு 125 ஐ. அ. டொலர்களை விட குறைவான அறை கட்டண விகிதத்தினை அறவிடும் அனைத்தும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மீதும் கட்டிலொன்றுக்கு 20 ஐ. அ. டொலர்களை அறவீடொன்றாக விதிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

21. 2016 ஆம் ஆண்டளவில் அதிகம் செலவிடக்கூடிய 2.5 மில்லியன் சுற்றுலா பயணிகளுக்கு வசதியளிப்பதற்கு நாம் தயாராக வேண்டியுள்ளோம். சுற்றுலாப் பயணிகள் எமது செல்வச் செழிப்புகளையும் பல்வகைத் தன்மைகளையும் காணுதல் வேண்டும். அடுத்த சில வருடங்களில் இக்கைத்தொழிலின் ஆற்றல் ஏறக்குறைய 15,000 அறைகள் என்ற இன்றைய நிலையிலிருந்து 3 மடங்காக்கப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.

எமது நாடு வளர்ந்து வரும் நடுத்தர வருமான நாடு என்ற வகையில், உள்நாட்டு சுற்றுலாத் துறையும் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுப்போக்கில் நாம் உள்நாட்டு நிர்மாணக் கம்பனிகள் மற்றும் கட்டடக் கலைஞர்கள், பிற உயர் தொழில்புரிநர்கள் அனைவரையும் இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. உள்நாட்டு சுற்றுலாத் துறையின் ஒத்துழைப்புக்காக அனைத்து வாடிவீடுகள் மற்றும் அரசாங்க சுற்றுலா விடுதிகள் அனைத்தையும் புதுப்பிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு பெருமளவு நன்மையளிக்கும் வகையில் சுற்றுலாக் கைத்தொழிலானது எமது உள்நாட்டு விவசாயம் மற்றும் கைத்தொழில்களை அவற்றினது விரிவாக்கல் உபாயங்களில் பயன்படுத்துதல் வேண்டும். எனவே, சுற்றுலா மற்றும் அதனோடு தொடர்புடைய வியாபாரங்களிலிருந்து சம்பாதிக்கும் வருமானத்தின் மீதான வரியினை 15 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைப்பதற்கு முன்மொழிகின்றேன்.

அத்துடன் பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீதான தீர்வைகளையும் வரிகளையும் 25 சதவீதத்தினால் குறைப்பதற்கு முன்மொழிகின்றேன். புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கலுக்கு வசதியளிப்பதற்காக இங்கு காணப்படாத பல்வேறுபட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணம் மீதான தீர்வைகள் மற்றும் வரிகள் குறைக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு நுகர்வோரின் உள்நாட்டு சந்தையினை பிரபல்யப்படுத்துவதற்கு தரமிக்க நுகர்வுப் பொருட்கள் மீதான அதிகரித்த வரிகளை நான் ஏலவே குறைத்துள்ளேன். உபாய முதலீட்டுச் சட்டம் மற்றும் வருமான வரிச் சட்டங்கள் என்பவற்றின் கீழ் பெரிய முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.

22. கெளரவ சபாநாயகர் அவர்களே, எமது அபிவிருத்தி முயற்சிகளுக்கு முக்கிய பங்களிப்பொன்றினை வழங்கும் வகையில் எமது வங்கித் தொழில் மற்றும் நிதி நிறுவனங்களை நாம் உருவாக்குதல் வேண்டும். குறைந்த வட்டி விகிதங்களை பேணுவதற்கு எமது முயற்சிகளில் நாம் தொடர்ந்து ஈடுபட வேண்டும். வங்கித் தொழில் மற்றும் நிதி நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு எமது மக்களை ஊக்குவித்தல் வேண்டும்.

எனவே, பற்றுவரியினை இல்லாதாக்குவதற்கு நான் முன்மொழிவதுடன் அதன் மூலம் வங்கிகளிலிருந்தான மீளப்பெறுகைகள் எவ்வித வரிக்கும் பொறுப்பாக்கப்படமாட்டாது. நிதியியற் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரியினை 20 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைப்பதற்கு முன்மொழிகின்றேன். இது கடல் கடந்த மற்றும் உள்நாட்டு வங்கிகள் அதேபோன்று நிதிக் கம்பனிகள் குத்தகை, காப்புறுதி மற்றும் பிற விசேட வங்கித் தொழில் மற்றும் நிதியியற் சேவைகள் அனைத்துக்கும் ஒரு சீராகப் பிரயோகிக்கப்படும்.

23. இப் பிரேரணைகளின் மூலம் பெறப்படும் அனைத்து வரி சேமிப்புக்களையும் மாற்றுவதற்கு மத்திய வங்கியின் முதலீட்டு நிதிக் கணக்கில் அனைத்து வங்கித் தொழில் மற்றும் நிதியியல் நிறுவனங்கள் தனியாக பதிவு செய்ய வேண்டப்படுவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

வரி சேமிப்புக்கள் எமது பொருளாதாரத்தில் மிகவும் உற்பத்தித் திறன் மிக்க வகையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்பதால் இந் நிதியத்தின் கீழ் கடன் வழங்கலுக்கு குறைந்த வட்டி விகிதங்களையும் நீண்டகால முதிர்ச்சியினையும் பின்பற்றுவதற்கு வங்கிகளை வேண்டும் வகையில் மத்திய வங்கியும் உள்நாட்டு இறைவரிச் திணைக்களமும் குறித்த ஒழுங்கு விதிகளை வெளியிடும்.

கெளரவ சபாநாயகர் அவர்களே, வளர்ந்து வரும் பொருளாதார அந்தஸ்துடன் பிராந்தியத்தில் நிதியியல் முக்கியத்துவம் மிக்க மையமாக இலங்கையினை மாற்றும் பின்னணியில் வங்கிகள் மற்றும் நிதியியல் சேவைகள் தம்மை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான மாற்றங்களை பரிசீலிப்பதற்காக வங்கித் தொழில் மற்றும் நிதியியல் சேவைகள் மீதான ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

24. கெளரவ சபாநாயகர் அவர்களே, சந்தை மூலதனமாக்கலை ரூபா 2 றில்லியனிலிருந்து ரூபா 3 றில்லியனாக அதிகரிக்கும் வகையில் புதிய கம்பனிகள் மற்றும் படுகடன் சாதனங்களை பட்டியலிடலை நாம் ஊக்குவிக்க வேண்டியுள்ளது. எனவே, பெறுமதியில் 1 சதவீதத்திற்குட்பட்ட வகையில் கழிப்பனவு செலவினமாக அத்தகைய செயற்பாடுகளுடன் தொடர்பான செலவினங்களை ஏற்றுக் கொள்வதற்கு முன்மொழிகின்றேன்.

எமது நாட்டில் மூலதனப் பெறுகை வரியொன்று காணப்படவில்லை என்பதனால், பங்கு கொடுக்கல் வாங்கல் அறவீட்டினை 0.2 சதவீதத்திலிருந்து 0.3 சதவீதமாக அதிகரிப்பதற்கு முன்மொழிகிறேன். நிறுவன படுகடன் பிணையங்கள் மீதான நிறுத்தி வைத்தல் வரி அரசாங்க பிணையங்களுடன் சரி சமமாகக் கொள்ளப்படும்.

காப்புறுதி மீதான கொடுக்கல் வாங்கல் செலவினத்தினைக் குறைப்பதற்கு மீள் காப்புறுதி தரகுப் பணங்கள் அதேபோன்று பெறுமதிசேர் வரிக் கோரிக்கைகளை விலக்களிப்பதற்கு நான்முன்மொழிகின்றேன். சேமிப்பினை விரிவாக்குவதற்கு கூறு நம்பிக்கைப் பொறுப்புக்களை ஊக்குவிக்கும் வகையில், அவற்றினை பொருளாதார சேவைக்கட்டணத்திலிருந்து விலக்களிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

கூறு நம்பிக்கைப் பொறுப்புக்களில் வெளிநாட்டு நிதி மற்றும் வெளிநாட்டவர்களின் முதலீட்டின் மீது செலாவணிக் கட்டுப்பாட்டு வரையறைகள் விலக்களிக்கப்படும். பட்டியலிடப்பட்ட தொகுதிக் கடன்களில் முதலீடு மற்றும் வருமான வரியிலிருந்தான பங்குரிமையிலிருந்து அலகுப் பொறுப்புக்களினால் பெறப்பட்ட வருமானத்தினையும் விலக்களிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

25. இலங்கை தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார செயன்முறை வெளியார் சேவைகளை வெளியாரிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு கவர்ச்சிகரமான சர்வதேச அமைவிடமாக வளர்ந்து வருகிறது.

இது ஐந்தாவது பெரிய ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. தற்பொழுது வெளியார் சேவைகளை கவரக்கூடிய, வளர்ந்து வரும் 50 சிறந்த சர்வதேச நகரங்களுக்கு மத்தியில் 7 ஆவது அந்தஸ்தில் உள்ளது. அதிகம் அதிகமான இலத்திரனியல் ஆளுகை பிரயோகங்கள் மக்களுக்கும் வியாபாரத்திற்கும் தற்பொழுது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2016 அளவில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப அறிவு விகிதத்தினை 75 சத வீதத்தினால் அதிகரிப்பதற்கான பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. நனசல, விதாதா நிலையங்கள் பாடசாலை கணனிக் கூடங்களை உள்ளடக்கிய பரந்தளவிலான தொலை வலையமைப்பு நிலையங்கள் தாபிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள் மற்றும் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி நிலையங்கள் தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பக் கல்வியினை விரிவாக்குவதற்கு ஊக்கமளிக்கின்றன. பல்கலைக்கழக நகரங்களுடன் ஒவ்வொரு மாகாணத்தையும் தொடர்புபடுத்தும் வகையில் அறிவு நகரமொன்றினை தாபிப்பதற்கு முன்மொழிகின்றேன்.

தகவல் தொழில்நுட்பம் வியாபார செயன்முறை வெளியார் சேவை வியாபாரங்களுக்கு ஏற்கனவே காணப்படும் வரி ஊக்குவிப்புக்களை அதிகரிப்பதற்கும் நான் முன்மொழிகின்றேன். கணனி மென்பொருள் மீதான பெறுமதிசேர் வரி மற்றும் தேசக் கட்டுமான வரி என்பவற்றினை நீக்குவதற்கு நான் மேலும் முன்மொழிகின்றேன். எமது நோக்கம் இக் கைத்தொழிலினை 2016 ஆம் ஆண்டளவில் 2 பில்லியன் ரூ. அ. டொலர் ஏற்றுமதிச் செயற்பாடுடையதாக மாற்றுவதாகும்.

(மிகுதி நாளை)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com