Contact us at: sooddram@gmail.com

 

உலகம் முழுவதும் அமெரிக்கா அட்டூழியம்: தூதரக ரகசிய ஆவணங்கள் அம்பலம்  ஒபாமா நிர்வாகம் அதிர்ச்சி

இராக் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட் டதைத் தொடர்ந்து, ‘விக்கிலீக்ஸ்இணையதள நிறுவனம் தற்போது உலகம் முழுவதிலும் அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க தூதர கங்களும் நடத்தி வரும் நாசகர பேச்சுவார்த்தைகள், பேரங்கள், அராஜகங்களை அம்பலப்படுத் தும் விதமாக லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட் டுள்ளது. இதனால் தனது நண்பர்கள், கூட்டாளிகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் கதிகலங்கிப் போயுள்ளது. இதையடுத்து விக்கி லீக்ஸ் நிறுவனத்தை மூடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண் டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த இணைய தள நிறுவனம் விக்கிலீக்ஸ். இந் நிறுவனம், உலக மக்கள் அனை வரும் உண்மைத்தகவல்களை அறிந்து கொள்ள உரிமை உடையவர்கள் என்ற கருத்தோட்டத்தை முன் வைத்து, ரகசிய தகவல்களை யெல் லாம் கைப்பற்றி இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா அரங்கேற்றிய அட்டூ ழியங்கள் குறித்த விவரங்கள் ஏரா ளமாக இந்நிறுவனத்திடம் சிக்கி யுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு, இராக் போர் என்ற பெயரில் அமெ ரிக்கா நடத்திய கொடிய தாக்கு தல்கள், அப்பட்டமான மனித உரிமை மீறல்கள். இதில் அமெ ரிக்க ராணுவம், சிஐஏ உள்ளிட்ட நாசகர உளவு ஸ்தாபனங்கள் நடத் திய சதி ஆலோசனைகள் என அனைத்தையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

இது அமெரிக்க நிர்வாகத்தை ஆத்திரத்திற்கு உள்ளாக்கிய நிலை யில், தற்போது 2 லட்சத்து 51 ஆயி ரத்து 287 ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இவை அனைத்தும் அமெரிக்காவி லும், உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்ககளிலும் நடத் தப்பட்ட சதித்திட்டங்கள், சிறிய நாடுகளுக்கு எதிரான தாக்குதல் திட்டங்கள் என பல்வேறு அதிர்ச் சிகரமான தகவல்களை உள்ளடக் கியவை ஆகும். 1966ம் ஆண்டு முதல் 2010 பிப்ரவரி வரை அமெ ரிக்காவிலும், பல்வேறு நாடுகளில் உள்ள 274 அமெரிக்க தூதரகங் களிலும் உருவாக்கப்பட்ட ரகசிய ஆவணங்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த ஆவணங்கள் மூலம் உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவு நடவடிக்கைகள் எந்தளவிற்கு இழி வானவையாக இருக்கின்றன என் பது அம்பலமாகியுள்ளது. இது போன்ற, மிகப்பெரும் அளவிலான ரகசிய ஆவணங்கள் உலக மக்க ளுக்கு பகிரங்கமாக வெளியிடப் பட்டது, வரலாற்றில் இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத் தக்கது.

தற்போது வெளியிட்டுள்ள ஆவணங்களில் அம்பலமாகியுள்ள குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் வருமாறு:

பாலஸ்தீனம்

பாலஸ்தீனத்தை தொடர்ந்து தாக்குவோம் என்றும், பாலஸ்தீனத் தின் காசா பகுதியை தீவிரமாக தாக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஒரு அமெரிக்க நாடாளுமன்ற குழு விடம் இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் எகுத் பராக் கூறியுள்ளார். இது தொடர்பாக எகிப்திடம் ஏற்கெனவே பேசிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியா

சவூதி அரேபிய மன்னர் ஈரானை தாக்குமாறு தொடர்ந்து அமெரிக்காவிடம் வலியுறுத்தி வந்துள்ளார்.
சவூதி மன்னர் அப்துல்லா, 2008 ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளோடு நடத்திய சந்திப்பின்போது இதை வலியுறுத்தியுள்ளார். இதை பரிசீலிப்பதாக, அமெரிக்கா கூறியது.

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீது கர்சாய், மனநிலை பிறழ்ந் தவர் என்றும், அவர் போதை மருந்து கடத்தல் மற்றும் ஊழலில் திளைப்பதாகவும் இது நீடிக் கட்டும் என்றும் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தூதரக அதிகாரிகள் பேசியுள்ளனர். இந் நாட்டின் துணை ஜனாதிபதியும் ஒரு ஊழல் பேர்வழி என்றும் பேசியுள்ளனர். அவர் போதை மருந்து கடத்தல் தடுப்பு தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் 52 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.

இந்தியா

இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகங்களிலிருந்து பதிவுசெய்யப் பட்ட 3,038 ரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவற் றில் நேபாளம், இலங்கை, பாகிஸ் தான் ஆகிய நாடுகளுடனான இந் தியாவின் உறவுகள் குறித்த விவரங் கள் அடங்கும். இந்தியா- பாகிஸ் தான் இடையேயான பிரச்சனை களை தீர்க்க அமெரிக்கா முழுமை யாக தலையிட்டு வருவது குறித்தும் இந்த ஆவணங்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது. (இந் தியா - பாகிஸ்தான் இடையே தாங் கள் ஒருபோதும் தலையிட விரும் பவில்லை என்று அமெரிக்க தூதர் கள் அடிக்கடி கூறி வருவது கவனிக் கத்தக்கது).

இந்த ஆண்டு துவக்கத்தில் ஆப் கானிஸ்தானில் தாலிபான்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வும், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாகவும் துருக்கி ஒரு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய் தது. இஸ்தான்புல் நகரில் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட் டத்தில், ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளில் ஒன்றான இந்தியாவை அழைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் ஒப்புத லோடு துருக்கி முடிவு செய்தது. இதுதொடர்பாக அமெரிக்க வெளி யுறவுத்துறையின் அரசியல் விவ கார துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் மற்றும் துருக்கியின் வெளி யுறவுத்துறை அரசியல் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு விவகாரத் துறை துணை அமைச்சர் ரவுப் என்ஜின் சொய்சால் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப் போது, பாகிஸ்தானை கைக்குள் வைத்திருக்க வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்த சந்திப்பிற்கு இந்தியா வரக் கூடாது என்று பேசப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முக் கியத்துவத்தை குறைப்பதற்காகவும் இப்படி திட்டமிடப்பட்டது என் பதும் இந்த ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது.

இவை தவிர வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளில் அணுசக்தி நடவடிக்கைகள் குறித்தும், இவற்றை அழிக்க அமெரிக்கா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருவது குறித்தும், இதற்கு இஸ்ரேல் உள் ளிட்ட தனது கைக்கூலி நாடுகளு டன் அமெரிக்க நிர்வாகம் வாஷிங் டனிலிருந்தும், பல்வேறு நாடு களின் தூதரகங்கள் மூலமாக தொடர்ந்து பேசி வருவது குறித் தும் ஏராளமான ரகசிய ஆவணங் கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com