Contact us at: sooddram@gmail.com

 

பாரிஸில் புலிகளுக்கிடையில் மோதல்! தமிழர் ஒருங்கிணைப்புக்கு தலைவருக்கு வாள்வெட்டு

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இனந்தெரியாத நபர்கள் நடத்திய  ாள்வீச்சுத் தாக்குதலில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்  (TCC) தலைவரான பரிதிறீகன் என்றழைக்கப்படும் நடராஜா மதீந்திரன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு  தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) செயலகத்தை விட்டு வெளியில் வந்த பொழுது, வெளியில் காத்திருந்த இனந்தெரியாத நபர்களால் சரமாரியான ஆயுதங்களால் இவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டுள்ளதாக  ுதற் கட்ட செய்திகள் தெரிவித்தன. தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்து வரும் நிலையில் இதற்கு போட்டியாக மாவீரர் ஏற்பாட்டுக்குழு என்ற அமைப்பும் மாவீரர் தின ஏற்பாடுகளை செய்து வருகின்றது. இந்த மாவீரர் ஏற்பாட்டுக்கு குழுவின் அமைப்பாளர்களாக விடுதலைப் புலிகள் அமைப்பில் முழுமையான பயிற்சியுடன் யுத்தத்தில் ஈடுபட்ட போராளிகள் மே 19 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பிரான்சுக்கு தப்பி வந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் அங்கம் வகிப்பதாக இந்த அமைப்பின் சார்பாக புலம்பெயர் வானொலி ஒன்றில் மாவீரர் தின ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடிய தமிழ்அரசன் என்பவர் தெரிவித்திருந்தார்.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நடவடிக்கைகள், நிதிக்கையாடல்கள் தொடர்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவீரர் ஏற்பாட்டுக்குழுவினர் கருத்துமோதல்களையும் ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் மாவீரர் ஏற்பாட்டுக் குழுவினர் யுத்தத்தின் பின்னர் அரசாங்கப் புலனாய்வுப் பிரிவின் அனுமதியுடன் விடுதலைப் போராட்டத்தை குழப்புவதற்காக திட்டமிட்ட வகையில் பிரான்சுக்கு அனுப்பப்பட்டவர்களே என்றும்  ுற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.

இந்த மாவீரர் தின ஏற்பாடு தொடர்பான விடுதலைப் புலிகளின் இரண்டுபட்ட குழுவினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது

இது இவ்வாறிருக்க இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஒரு சில புலம்பெயர் இணையத்தளங்கள் வெளியிட்ட செய்தியில் இலங்கை அரசாங்கத்தின் கைக்கூலிகளே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்திருந்த நிலையில்  ாரிஸ் 11  இல் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பரிதி தன்னைத் தாக்கியவர்கள் தொடர்பாக பிரெஞ்சு காவற்துறையினருக்கு இன்று மாலை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் தனது வாக்குமூலத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகத்திலிருந்து தாங்கள் மூன்று பேர் வெளியேறி காரில் ஏறச்செல்ல சென்ற போது அங்கு 6 பேர் நின்றதாகவும், அவர்களில் சிலர் தங்களுடன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களும் இருந்ததாகவும் அவர்களைத் தன்னால் அடையாளம் காட்டமுடியும் எனவும்  ெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ்; காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடர்பான இறுதித்தீர்ப்பு நவம்பர் நடுப்பகுதியில் வரவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது

இதேவேளை பாரிஸில் இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவது இது தான் முதற்தடவையல்ல. 1994 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட சபாலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டதுடன்  ஆரம்பிக்கப்பட்ட கொலைக்கலாச்சாரம் அதனைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் கந்தையா நாதன், விடுதலைப் புலிகளின்  உத்தியோகபூர்வ பத்திரிகையான ஈழமுரசு இதழின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை உட்பட பல்வேறு வன்முறைகளுக்கு விடுதலைப் புலிகளின் ஆதரவு பெற்ற குழுக்களே முக்கிய காரணிகளாக இனங்காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் தங்களது நலன்களுக்காக மாற்றுக்கருத்தாளர்களையும் மாற்று அமைப்பைச் சேர்ந்தவர்களையும் கொன்று குவித்த கலாச்சாரம் இன்று அவர்களையே திருப்பித் தாக்குவதை புலம்பெயர் தேசங்களில் காணக்கூடியதாக உள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

பாரிஸில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆயுதக்குழுக்களுடனான மோதல்கள் வன்முறைகள் பிரெஞ்சு மக்கள் மத்தியில்  தமிழ்ச் சமூகம் தொடர்பான அதிருப்தி நிலையை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(நன்றி: தேனி)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com