|
||||
|
பிரிட்டனின் கருத்தை
அரசு நிராகரித்தது
எந்தவொரு நாடும்
இலங்கைக்கு
உத்தரவிட
முடியாது
2013ம்
ஆண்டில் இலங்கையில்
பொதுநலவாய
நாடுகள் அமைப்பு நாடுகளின்
மாநாட்டை
இலங்கையில்
நடத்துவதற்கு
முன்னர் மனித உரிமை
செயற்பாடுகளில்
முன்னேற்றத்தை
காண்பிக்க
வேண்டும்
என்ற பிரிட்டனின்
கருத்தை அரசாங்கம்
முழுமையாக
நிராகரித்தது.
வெளிநாடுகளை திருப்திப்படுத்தும்
வகையில் எமக்கு செயற்பட முடியாது.
எந்த நாடும்
எமக்கு உத்தரவிட முடியாது.
நாட்டு மக்களின்
தேவைக்கேற்பவே
சட்டங்கள்
முன்னெடுக்கப்படும்
என வெளிவிவகார
அமைச்சர்
ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய
அமைப்பு நாடுகளின்
மாநாடு குறித்து விளக்கமளிக்கும்
மாநாடு நேற்று வெளிவிவகார
அமைச்சில்
நடைபெற்றது. இந்த மாநாட்டில்
பிரதி வெளிவிவகார
அமைச்சர்
நியோமல் பெரேரா, வெளிவிவகார
அமைச்சின்
செயலாளர்
கே. அமுனுகம, ஜனாதிபதியின்
ஊடகப் பிரிவு பணிப்பாளர்
நாயகம் பந்துல ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவின் கருத்து குறித்து ஊடகவியலாளர்
ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்
பதிலளித்த
அமைச்சர்
பேராசிரியர்
ஜி.எல். பீரிஸ் மேலும்
கூறியதாவது,
வேறு நாடுகளை
திருப்தி
படுத்துவதற்காக
எமக்கு கொள்கை தயாரிக்க முடியாது.
இலங்கை காலனித்துவ
நாடல்ல. இது சுயாதீனமான
இறைமை யுள்ள நாடு.
எமக்கு எந்த நாடும் உத்தர விட
முடியாது.
காலக்கெடு விதிக்கவும்
முடியாது.
மக்களுக்கு எது நல்லதோ
அதனையே நாம் மேற்கொள்வோம். வெளிநாட்டு அழுத்தங்களை
ஏற்க மாட்டோம்.
பிரித்தானியாவின் கருத்தை
நாம் நிராகரிக்கிறோம்
என்றார்.
பொதுநலவாய தலைவர்கள்
மாநாட்டில்
இலங்கைக்கு
எதிராக முன்னெடுக்கப்பட
இருந்த முயற்சிகள்
தோற்கடிக்கப்பட்டது
குறித்தும்
அமைச்சர்
இங்கு விளக்கினார்.
இந்த மாநாட்டில்
இலங்கைக்கு
பாரிய வெற்றிகள்
கிடைத்தன. இலங்கைக்கு எதிராக
சர்வதேச சமூகத்தின்
பாரிய எதிர்ப்பு
இருப்பதாக
காண்பிக்க
சர்வதேச ஊடகங்கள் முயற்சி செய்தன. ஆனால் இதற்கு
மாற்றமானதே
நிகழ்ந்தது.
இந்த மாநாட்டில்
இலங்கைக்கும்
மூன்று பிரதான ராஜதந்திர
வெற்றிகள்
கிடைத்தன.
2013ல்
பொதுநலவாய
மாநாட்டை
இலங்கையில்
நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. கனடா கூட இலங்கையில்
மாநாட்டை
நடத்த எதிர்ப்புத்
தெரிவிக்கவில்லை.
வெளிநாட்டு அமைச்சர்களின்
மாநாட்டில்
இலங்கையின்
உள்விவகாரம்
குறித்து
பேச கனடா
வெளியுறவு
அமைச்சர்
முயன்றார்.
இதனை நான் முழுமையாக
எதிர்த்தேன்.
இது பொதுநலவாய
அமைப்பின்
சட்டதிட்டங்களுக்கு
முரணானது
எனவும் எந்த நாட்டுடனும்
எமது நாட்டு
பிரச்சினை
குறித்து
பேச தயார்
எனவும் தெரிவித்தேன்.
இதனையடுத்து 15 நாடுகள்
தலையிட்டு
எனது உரைக்கு
முழு ஒத்துழைப்பு
வழங்கின. இது தவிர
ஜனாதிபதி
பேர்த் வருவதற்கு
தயாரான போது புலிகளுக்கு
சார்பான ஒருவரினால்
ஜனாதிபதிக்கு
எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இரு தடவைகள்
மக்களினால்
தெரிவான ஜனாதிபதியை
அவுஸ்திரேலியா
நீதி மன்றத்தில்
விசாரிக்க
முடியாது
என்பதை நாம் விளக்கினோம்.
இதனையடுத்து வழக்கு
தொடர்வதை
பெடரல் சட்டமா அதிபர் நிராகரித்தார்.
மனித உரிமை தொடர்பில்
ஆராய ஆணையாளர்
ஒருவரை நியமிக்க எடுக்கப்பட்ட
முயற்சியும்
90 வீதத்திற்கும்
அதிகமான நாடுகளின்
ஒத்துழைப்புடன்
தோற்கடிக்கப்பட்டது. இது பொதுநலவாய
அமைப்பை அரசியல் மயமாக்கும்
நடவடிக்கை
என்ற நிலைப்பாட்டை
அநேக நாடுகள்
ஏற்றன. மீண்டும் ஆணையாளர்
ஒருவரை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும்
அது வெற்றியளிக்காது.
பொதுநலவாய அமைப்பில்
சுயாதீனமான
நாடுகளே உள்ளன. வேறு நாடுகள்
தமது உள்விவகாரத்தில்
தலையிடுவதை
எந்த நாடும்
அனுமதிக்காது
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |