Contact us at: sooddram@gmail.com

 

நட்டத்தில் இயங்கும் தொழில் முயற்சிகளையும் நிறுவனங்களையும் சுவீகரித்து புத்துயிரளிக்கும் சட்டமூலம்' அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல

குறைந்த செயற்பாடுள்ள, நட்டத்தில் இயங்குகின்ற தொழில் முயற்சிகளையும், நிறுவனங்களையும், சொத்துக்களையும் சுவீகரித்து அவற்றுக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பான சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். பாராளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் கூடியது. சபையின் ஆரம்ப நிகழ்வாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

செயற்பாடு குறைவாகவுள்ள, நட்டத்தில் இயங்குகின்ற தொழிற்முயற்சிகளுக்கும் மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிர் அளிப்பது தொடர்பாக சட்டமூலம் நேற்று பிரதமர் டி. எம். ஜயரட்னவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சட்டமூலத்தின்படி இனங்காணப்பட்ட செயற்பாடு குறைவாக உள்ள அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்கள் தேசிய நலன் கருதி அரசுடமையாக்கப்படும். மேலும் இவை தொடர் பில் தகுதிவாய்ந்த அதிகாரி ஒருவரை நியமித்தல், நஷ்ட ஈடு செலுத்துதல் மூலமும் முகாமைத்துவம் புத்துயிர் அளிக்கப்படுவதன் ஊடாகவும் இவற்றை மேம்படுத்த உள்ளதாக பிரதமர் சபையில் தெரிவித்தார்.

செயற்பாடு குறைவாக உள்ள தொழில் முயற்சிகளுக்கும், குறைவாகப் பயன்படுத்தப்படும் சொத்துக்களுக்கும் புத்துயிர் அளித்தல் தொடர்பான சட்ட மூலத்தை தேசிய நலன்கருதி உடனடியாக ஆராய்ந்து அறிவிக்குமாறு கோரி ஜனாதிபதியினால் உச்ச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது என பிரதி சபாநாயகர் அறிவித்துள்ளார். எதிர்க்கட்சி எதிர்ப்பு

குறித்த சட்டமூலம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மூன்று வழக்குகள் பதியப் பட்டுள்ளதால் அவற்றுக்கான தீர்ப்பு வழங்கப்படும்வரை இதுதொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு ஐ.தே.க. கோரியபோதும் ஆளும் தரப்பினர் இத ற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். குறித்த சட்ட மூலம் தொடர்பான விவாதம் இன்று (9) நடைபெறவுள்ளதால் அதன்போது தமது ஆட்சேபனையை முன்வைக்குமாறு தெரிவித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, இதுதொடர்பில் சபாநாயகர் தனது முடிவை இன்று அறிவிப்பார் என்று அறிவித்தார்.

குறித்த சட்டமூலம் பற்றி யாருக்கும் தெரியாது எனவும், இதுதொடர்பில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தீர்ப்பு வரும்வரை விவாதத்தை ஒத்திவைக்குமாறும் எதிர்த்தரப்பு பிரதி பிரதம கொரடா தயாசிறி ஜயசேகர சபையில் கோரினார்.

சபை முதல்வர்

இது தொடர்பில் அரசாங்கம் சார்பாகக் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் நிமல் சிறிபால டி. சில்வா, உச்ச நீதிமன் றத்தின் தீர்ப்பு தெளிவாக சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அரசியல் அமைப்புக்கு இயைபானது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே குறித்த சட்டமூலம் தொடர்பில் எத்தைகய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் இந்த சட்டமூலத்தை இங்கு ஆராய முடியும்.

பாராளுமன்ற செயற்பாடுகளை உச்ச நீதிமன்றத்தினால் நிறுத்த முடியாது. இது தொடர்பில் முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க முன்மாதிரியான தீர்ப்பு வழங்கியுள்ளார். மீயுயர் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது. பாராளுமன்ற சட்டமூலமொன்றை விவாதிக்க உச்ச நீதிமன்றத்துக்கோ வேறு நீதிமன்றத்துக்கோ தடை உத்தரவிடமுடியாது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களை பின்பற்றாது பாராளுமன்ற மீயுயர் அதிகாரம் இதற்கு முன்னர் பாதுகாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்காக பாராளுமன்ற செயற்பாடுகளை எந்தவகையிலும் நிறுத்த முடியாது என்றார்.

இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர் இன்று இந்த சட்டமூலம் தொடர்பில் விவாதம் நடைபெறவில்லை. இதனால் இந்த விடயம் தொடர்பாக இன்று கேள்வியெழுப்ப முடியாது. ஆனால் சபாநாயகர் இன்று (9) இதுதொடர்பான தனது தீர்ப்பை அறிவிப்பார் என்றார்.

குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் இனங்காணப்பட்ட செயற்திறனற்ற 36 நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படவுள்ளன. இதில் பெல்வத்த, செவனகல சீனித் தொழிற்சாலைகளும் அடங்கும்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com