Contact us at: sooddram@gmail.com

 

வெனிசுலா

வெறும் பொருள் உற்பத்தி அல்ல... புதிய சமூக உருவாக்கமே..!!!

வரும் எட்டாண்டுகளில் 28 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்போவதாக வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகள் நடப்பாண்டிலேயே துவங்கும் என்று கூறிய அவர், வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இளைஞர்களுக்கு நவீன முறையில் பயிற்சிகள் தரப்படும். புதுமையான எண்ணங்களோடு அவர்கள் பணிகளில் ஈடுபடும் வகையில் தயார் செய்யப்படுவார்கள். விவசாயம், உற்பத்தித்துறை, கட்டுமானம், சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் இந்த வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த முயற்சியின் முதல் கட்டமாக, 1,075 கி.மீ. நீளமுள்ள புதிய ரயில்பாதையை உருவாக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதில் தொழில்நுட்ப வல்லுநர்களோடு, பெரிய இளைஞர் பட்டாளத்தையும் இறக்கிவிடப் போகிறார்கள். கட்டுமானத்துறை வல்லுநர்களாக அந்த இளைஞர்களை உருவாக்குவதே அரசின் திட்டமாகும். மேலும், இந்தத் திட்டத்தால் 3 ஆயிரத்து 500 கவுரவமாக வேலைகள் உருவாகப் போகிறது. இத்தனைக்கும் இப்பணியின் முதல் கட்டத்திலேயே இவ்வளவு வேலைகள் உருவாக்கப்படுகின்றன. வெறும் உடலுழைப்பு மட்டுமல்லாமல், அறிவுசார்ந்த பணியாகவும் இவற்றில் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சாவேஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

தொடரும் தேசிய மயம் குறைவான தொழிலாளர்களை வைத்துக் கொண்டு சுரண்டும் பெரும் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் நாட்டுடைமையாக்கும் வேலையை வெனிசுலா அரசு மேற்கொள்கிறது. தொலைத்தொடர்பு, கனிமம், பெட்ரோலியம் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகள் இப்படித்தான் தேசியமயமாக்கப்பட்டுள்ளன. அதேவகையில்தான் பிரிட்டனின் வெஸ்டே குழுமத்தைச் சேர்ந்த துணை நிறுவனமும், விவசாயப் பணிகளைச் செய்து கொண்டிருந்த நிறுவனமுமான அக்ரோ புளோராவை தேச உடைமையாக்கும் உத்தர வில் சாவேஸ் கையெழுத்திட்டுள்ளார். நாட்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைச் சட்டத்தின் கீழ் இந்த நடவ டிக்கை எடுக்கப்படுவதாக வைவ் தொலைக்காட்சி மூலம் மக்க ளுக்கு ஆற்றிய உரையில் தெரி வித்தார்.

இந்த நிறுவனத்திற்குச் சொந்தமாக 2 லட்சத்து 90 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் இருந்தன. அரசின் நேரடி நிர்வாகத்திற்கு இந்த நிலங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய சாவேஸ், இது மக்களின் சொத்தாகும். ஒரு சிலரின் சொத்தாக மாற்றும் அவர்களது முயற்சி நீர்வழிகளையும் ஆறுகளையும் மாசுபடுத்தவே உதவும் என்று குறிப்பிட்டார். இந்த தேசமய நடவடிக்கையால் இறைச்சி விற்பனை அதிகரிக்கும். மாடு வைத்திருக்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நேரடியாகப் பயனடைவார்கள். அதைச் செய்ய தேசமய நடவடிக்கைதான் ஒரேவழி. அரசுத்தரப்பில் பேசியபோது நிறுவனத்தினர் ஒப்புக் கொள்ளவில்லை. அவர்கள் டாலர்கள் கேட்கிறார்கள். அதனால் வலுக்கட்டாயமாகத்தான் இந்த நிறுவனத்தை மக்களுக்கு சொந்தமாக்கியுள்ளோம் என்றார்.

சமூக உற்பத்தி வர்த்தகம்வேலைவாய்ப்புகளை உருவாக்கும் அடுத்த உத்தியாக சமூக உற்பத்தி வர்த்தகம் என்ற திட்டத்தையும் சாவேஸ் அறிவித்துள்ளார். அராகுவா மற்றும் கராபோபோ மாகாணங்களுக்கு இடையில் உள்ள டகாரிகுவாஸ் என்ற இடத்தில் இந்தத் திட்டத்தை வெனிசுலா அரசு அறிமுகப்படுத்துகிறது. இதற்காக 13 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்துகிறார்கள். இந்த இடத்தில் பத்து சமூக உற்பத்தி நிறுவனங்களை ஒருங்கிணைத்து அமைக்கிறார்கள். இது பற்றிப் பேசியுள்ள சாவேஸ், முதலாளித்துவவாதிகளின் கைகளில் இந்த நிலங்கள் திறமையாகப் பயன்படுத்தப்படவில்லை. மேலும் அவர்கள் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்தி வந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, உணவில் தன்னிறைவு என்ற இலக்கையும் சேர்த்து அடையும் நோக்கத்தோடு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சாவேஸ் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது வெனிசுலா மக்களின் அடிப்படை உணவுத் தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பி இருந்தனர். சாவேசின் முன்முயற்சிகள், தேசமய நடவடிக்கைகள் அந்த இறக்குமதியில் பெரும் அளவைக் குறைக்க உதவின. பதுக்கலை ஒழிக்கவே உணவுத்துறையில் செயல்படும் பெரும் நிறுவனங்களை அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களாக மாற்றி வருகிறோம் என்கிறார்கள் வெனிசுலா அரசு அதிகாரிகள்.

சே மிகவும் சரியாகவே சொன்னார். இது வெறும் வீடுகளைக் கட்டுவதல்ல, அல்லது தானியத்தையோ, ஆடைகளையோ உற்பத்தி செய்வதல்ல. அனைத்தையும் தாண்டி, புதிய ஆணை, புதிய பெண்ணை, புதிய சமூகத்தை உருவாக்குவதாகும் என்கிறார் சாவேஸ்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com