Contact us at: sooddram@gmail.com

 

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிவரும் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஹக்கீம் ஆராய்வு

இருபது ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி வரும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், யாழ் மாவட்ட செயலாளர் (அரசாங்க அதிபர்) திருமதி. இமெல்டா சுகுமாருடன் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். சுமுகநிலை ஏற்பட்டுள்ளதையடுத்து முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்த முஸ்லிம்கள் கட்டம் கட்டமாக அங்கு திரும்பி மீள்குடியேறி வருவதாகவும், அவர்கள் அநேக பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும், அவற்றை நிவர்த்தி செய்ய அரசாங்க மட்டத்தில் தேவையான வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் ஹக்கீம் மாவட்ட செயலாளரிடம் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்த முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து புத்தளம், நீர்கொழும்பு, குருநாகல், கொழும்பு முதலான வேறு மாவட்டங்களில் சென்று குடியேறி வாழ்ந்த பின்னர் குடும்பத் தலைவர்கள் முதலிலும் அடுத்து ஏனைய குடும்ப உறுப்பினர்களுமாக சொந்த இடங்களுக்குத் திரும்பி மீள் குடியேறி வரும் நிலையில் காணி, வசிப்பிடம், உடைமைகள், பொருளாதாரம், வாக்குரிமை போன்றவற்றில் நிறைய சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் ஆளாகியிருப்பதை அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

வாக்காளர் இடாப்புக்களில் இருந்து பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தம்மை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், கிராம சேவையாளர்களை சந்திக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். புதிய சுற்று நிருபம் பற்றி கூறப்பட்ட போது நாம் கொழும்பில் தேர்தல் ஆணையாளருடன் வாக்காளர் பதிவு பற்றி நேரில் சந்தித்து கலந்துரையாடி பிரச்சினைக்குரிய தீர்வைக் காணவுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

பொம்மைவெளி, பரச்சேரிவெளி போன்ற இடங்களில் முன்னர் வசித்த முஸ்லீம்களுக்கு சொந்தமாயிருந்த காணிகளில் வேறு பலர் வசித்து வருவதாக அல்லது அவற்றுக்கு சொந்தம் கொண்டாடுவதாக மாவட்டச் செயலாளரிடம் கூறப்பட்ட போது, தமக்கு முன்னர் பதவியிலிருந்த அரசாங்க அதிபர்களின் காலத்தில் அவ்வாறு நடைபெற்றிருந்தால் தாம் அதில் கவனம் செலுத்தி உரியவர்கள் அவற்றை பெறத்தக்க வகையில் நடவடிக்கை எடுப்பதாக திருமதி. சுகுமார் தெரிவித்தார். சோனகத்தெரு (மூர் வீதி) மக்களின் பிரச்சினைகள் பற்றியும் முக்கியமாக ஆராயப்பட்டது. வசிப்பதற்கு காணி இல்லாதவர்களுக்கு " பிம் சவிய'' செயல்திட்டத்தின் கீழ் இடங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கான சாத்தியப்பாடு பற்றியும் ஆராயப்பட்டது.

இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் நாநூற்று முப்பத்தேழு முஸ்லிம் குடும்பங்கள் வீடுகள் பெறத் தகுதி பெற்றிருந்தும், நூற்று அறுபத்தேழு குடும்பங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களே அங்கீகரிக்கப்பட்டிருப்பதை அமைச்சர் மாவட்டச் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் மீள்குடியேறும் மக்களுக்கு முதல் கட்டமாக இருபத்தையிரம் ரூபாக்கள் வழங்கப்படும்போது யாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் ரூபாக்களே வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. அது பற்றி கவனம் செலுத்துவதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். முதல் ஆறு மாதங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கி முடிவடைந்த நிலையில் வசதியற்று வாழ்வோருக்கு சமுர்த்தி உதவியை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென அமைச்சர் ஹக்கீம் கூறினார். அத்துடன் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீள்குடியேறும் முஸ்லிம்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தாததையிட்டு அமைச்சர் கவலை தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சரின் யாழ். மாவட்ட இணைப்பாளர் ரொஷான், சோனகத்தெரு முஹம்மதிய்யா பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.சீ.ஏ. முபீன், மானிப்பாய் பெரிய முஹியத்தீன் பள்ளிவாசல் தலைவர் எம்.எஸ். லாபீர், யாழ், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத் தலைவர் ஏ.எம்.ஜமால், செயலாளர் ஜயூப் அஸ்மீல், முன்னாள் யாழ். பிரதி மேயர் எம்.ஜி. பஷீர், சட்டத்தரணி எம்.எஸ்.எம். ரமீஸ் ஆகியோர் உட்பட ஏனைய முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

வியாழக்கிழமை
யாழ்ப்பாணம் குருநகர் சிறுவர் நீதிமன்றம், பருத்தித்துறையில் புனரமைக்கப்பட்ட நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பதற்காக பிரதம நீதியரசருடன் யாழ். விஜயத்தை மேற்கொண்ட நீதியமைச்சர் ஹக்கீம் பருத்தித்துறையில் அமைந்துள்ள ஆங்கிலேயர் காலத்தில் தென் இந்தியா தேவிப்பட்டணம் முஸ்லிம் வர்த்தகர்கள் அங்கு வசித்தபோது நிர்மாணித்திருந்த பழைமையான பள்ளிவாசலையும் சென்று பார்வையிட்டார். முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் யுத்தகாலத்திலும் கூட தமிழ் மக்கள் அந்தப் பள்ளிவாசலைப் பாதுகாத்து வந்ததாக பருத்தித்துறை நகரசபை பிரதித் தலைவர் பத்மநாதன் அமைச்சரிடம் தெரிவித்தார். அந்தப் பள்ளிவாசலை புனரமைக்க உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com