Contact us at: sooddram@gmail.com

 

முதலாளித்துவ தீய சக்திகள் உலாவும் இடம்-பங்குச்சந்தை குறித்து அமெரிக்க மக்கள் விமர்சனம்

ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து வலுக்கட்டாயமாக போராட்டக்கா ரர்களை வெளியேற்றிய சம்பவம், அமெரிக்க மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் மூன்றாவது மாதம் துவங்கியதை அமெரிக்கா முழுவதும் போராட்டக்காரர்கள் அனுசரித்துள்ளனர். ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அதற்கு அருகில்தான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த போராட்டக்குழுவினர் திரண்டனர். வால் ஸ்டிரீட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்ற மக்கள், வால் ஸ்டிரீட்டை இழுத்து மூடு மற்றும் நாங்கள்தான் 99 விழுக்காட்டினர் என்ற முழக்கங்களை எழுப்பினர். முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்வதைச் சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்கக் காவல்துறை, ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக் குவித்திருந்தது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரும்புத் தடுப்புகள் போன்றவற்றைக் கொண்டு சாலைகளை மறித்து, ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்தவும் காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது.

பங்குச்சந்தை முன்பாக ஆயிரக்கணக்கில் திரண்ட போராட்டக்குழுவினர் அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்டினர். அப்போது பேசிய கேட்டி என்ற போராட்டக்காரர், அமெரிக்க முதலாளித்துவத்தின் தீய சக்திகள் உலாவும் இடம் இதுதான். அதனால்தான் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்த இங்கு வந்திருக்கிறோம் என்றார். பொது அமைதிக்கு இடையூறு செய்தனர் என்று கூறி 60 பேரை காவல்துறையினர் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். அமைதியான முறையில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும், அவற்றை எதிர்கொள்ள கலவரத்தடுப்பு காவல்துறையினரையே நிர்வாகம் களத்தில் இறக்கிவிட்டுள்ளது.

சான்பிரான்சிஸ்கோசான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பேங்க் ஆப் அமெரிக்காவின் அலுவலகத்தை, கைப்பற்றுவோம் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். அலுவலகத்திற்கு உள்ளும், வளாகத்திலும் கூடாரங்களை அமைத்து, முழக்கங்களை எழுப்பினார்கள். இங்கும் காவல்துறையின் கலவரத்தடுப்புப் பிரிவு உள்ளே நுழைந்து, நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களைக் கைது செய்தது. நாட்டின் செல்வத்தில் பெரும்பங்கை ஒரு விழுக்காட்டினர் தங்கள் வசம் வைத்துள்ளனர். இது சகித்துக் கொள்ள முடியாததாகும் என்று போராட்டக்காரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கைது செய்ய காவல்துறையினர் வந்தபோது, நீங்கள் யாரைப் பாதுகாக்கிறீர்கள், யாருக்காக சேவை செய்கிறீர்கள்? என்ற கேள்விகளை மக்கள் எழுப்பினர்.

சிகாகோவியாழனன்று சிகாகோ நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டக்களத்தில் இறங்கியிருந்தனர். வேலைகளே தேவை, ஆட்குறைப்பல்ல என்ற முழக்கத்தோடு அமெரிக்காவின் பல நகரங்களில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவும் ஒன்றாகும். சிகாகோ நகரின் தாம்சன் மையத்தில் குழுமிய போராட்டக்காரர்கள் ஜாக்சன் மற்றும் லாசல்லே வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.

நிதிவெட்டைத் தடுப்பது, பொருளாதாரத்தை மீண்டும் கட்டுவது மற்றும் ஜனநாயகத்தை மீண்டும் உருவாக்குவது ஆகிய அம்சங்களை முன்னிறுத்தியே கைப்பற்றுவோம் சிகாகோ போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் துவங்கி இரண்டு மாதங்கள் நிறைவு பெற்றுள்ளதன் அடையாளமாகவே இந்தப் போராட்டம் நடந்தது. நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களோடு நாங்களும் முழுமையாக இணைந்து நிற்கிறோம். முகாம்களுக்குள் நுழைந்து சோதனை செய்யலாம். ஆனால் போராட்டத்தை அழிக்க முடியாது என்று உலகிற்கு சொல்ல விரும்புகிறோம் என்கிறார் சிகாகோ போராட்டக்குழு உறுப்பினரான மேகன் குரோவ்ஸ்.

பங்குச்சந்தை மற்றும் பெரும் வங்கிகளின் பேராசை ஆகியவற்றிற்கு எதிராகத் துவங்கிய போராட்டங்கள் கல்வி, சுகாதாரம் போன்றவை அரசுப்பொறுப்பில் இருக்க வேண்டும் என்ற முழக்கங்களுக்கு இட்டுச் சென்றது. தற்போது அமெரிக்க அரசியலில் பணத்தின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்று மக்கள் முழக்கமிடுகிறார்கள். அதைச் செய்வதன் மூலம்தான் இரண்டே இரண்டு கட்சிகள் என்ற தடையைத் தகர்க்க முடியும் என்பது போராட்டக்காரர்களின் கருத்தாக உள்ளது.

பிரிட்டனில் ஆதரவு

அமெரிக்காவில் தொய்வு ஏற்படாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் கைப்பற்றுவோம் போராட்டங்களுக்கு பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவில் இரண்டாவது ஆர்ப்பாட்ட முகாம் அமைக்கப்பட்டுள்ளது. ஜார்ஜ் சதுக்கத்தில் முகாமடித்திருந்த போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் அனைத்து வகையான அடக்குமுறைகளையும் தாண்டி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன. போராட்டக்குழுவைச் சேர்ந்த மார்க் போர்சியானி, ஒரு முகாமிலிருந்து வெளியேற்றினால் அடுத்த முகாமை அமைப்போம். உலகின் ஒரு பகுதியில் மக்களை ஒடுக்கினாலும், மறு பகுதியில் கிளர்ந்து எழுவார்கள் என்று குறிப்பிட்டார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com