|
||||
|
கொழும்பு - யாழ் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புக்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி - விந்தையின் நுழைவாயில் திறப்பு விழாவில் ஜனாதிபதி
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும்
இடையில் அதிவேக நெடுஞ்சாலை
அமைப்பதற்கான
ஆரம்பகட்ட
வேலைகள் பூர்த்தியடைந்திருப்பதாக
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கரந்தெனியவில்
தெரிவித்தார்.
இந்த நெடுஞ்சாலை
அமைக்கப்பட்டதும்
மூன்று, நான்கு மணித்தியாலங்களில்
கொழும்பில்
இருந்து யாழ்ப்பாணத்திற்கு
பயணம் செய்யக்கூடிய
வாய்ப்பு
கிடைக்குமென்றும்
ஜனாதிபதி
அவர்கள் கூறினார். இந்த நெடுஞ்சாலை
வடக்கும்,
கொழும்பும்
ஒன்றிணைவதற்கும்
அவற்றுக்கிடையிலான
பயணத்தூரம்
சுருங்குவதற்கும்
வழிவகுக்கும்.
அப்போது பிரிவினை
என்ற சிந்தனையே
எழாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நவீன பாதைகள்
அமைக்கப்பட்டு
பிரதேசங்களுக்கான
எல்லைகள்
சுருக்கப்படும்
போது நாட்டில்
பிரிவினை
வாதமும் பிரதேச வாதமும் இல்லாதொழியுமென
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குச்
செல்லும்
பாதை நவீனமயப்படுத்தப்பட்டு
மூன்று மணித்தியாலமாகப்
பயணம் சுருங்கும்
போது எல்லைகள்
என்பதற்கே
இடமில்லை.
இடைவெளிகள் குறைந்து மனங்கள் இணையும் போது பிரிவினைக்குத்
தீர்வு இயல்பாகவே
கிட்டிவிடும்
எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க
விந்தையின்
நுழைவாயிலாக
இருக்கும்
கொழும்பு
- காலி அதிவேக
நெடுஞ்சாலை
நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால்
உத்தியோகபூர்வமாகத்
திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து காலி கரந்தெனியவில்
நடைபெற்ற
மக்கள் பேரணிக் கூட்டத்தில்
கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு
உரையாற்றும்
போதே ஜனாதிபதி
இவ்வாறு தெரிவித்தார்.
பிரதமர் டி.
எம். ஜயரட்ன,
ஜனாதிபதியின்
செயலாளர்
லலித் வீரதுங்க மற்றும் அமைச்சர்கள்,
ராஜதந்திரிகள்,
முக்கியஸ்தர்கள்
பலரும் கலந்து கொண்ட இந்
நிகழ்வில்
ஜனாதிபதி
மேலும் உரையாற்றுகையில்,
நவீன உலகிற்கு
இலங்கையை
அறிமுகப்படுத்தும்
சிறந்த வாயிலாக தென்னிலங்கைக்கான
அதிவேக நெடுஞ்சாலை
அமையுமென
ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
பிரதமர் ஒருவருக்குக்
கூட ‘ஏ9’ பாதையில்
புலிகளின்
அனுமதியின்றி
பிரவேசிக்க
முடியாதிருந்த
யுகத்தை மாற்றி இன்று எவரும்
சுதந்திரமாக
பயணிக்கக்
கூடிய அதிவேக நெடுஞ் சாலையை அமைக்க வழிவகுத்துள்ளோம்
என குறிப்பிட்ட
ஜனாதிபதி,
சுபீட்சமான
எதிர்காலத்தில்
வெற்றிகரமாகப்
பயணிப் பதற்கு புதிய தலைமுறையினர்
தம்மைத் தயார்படுத்திக்
கொள்வது அவசியம் எனத் தெரிவித்தார்.
நவீன நாடு, வளர்ச்சி யடைந்த மக்கள் என பேசுகின்றோம்.
நமது நாடு அத்தகைய வளர்ச்சிப்
போக் கில்
பயணிக்கிறது
என்பதற்கு
இந்த அதிவேக
நெடுஞ்சாலை
சிறந்த உதாரணம்.
நாம் நல்ல நோக்கோடு
செயற்படுகின்
றோம். அதனால் அதன் பிரதிபலனை
முழு நாடும்
அனுபவிக்கும்.
இதன் ஆரம்பப்
படியே இதுவாகும்.
நாட்டின் பிரதமராக ஒரு வீதியில்
பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்தபோது
நான் அந்த
நிலையை மாற்றுவதற்கு
உறுதி பூண்டேன். நாட்டு மக்கள்
கனவு காணும்
காலம் கடந்துவிட்டது.
இது கனவுகள்
நனவாகும்
காலம்.
எமது இளைய தலை
முறையினர்
ஏனைய நாடுகளைப்
பார்த்து
இனி ஏங்க
வேண்டிய அவசியமில்லை. இலங்கையும் நவீன நாடாக மாறிக்
கொண்டிருக்கிறது.
நாட்டில் அபிவிருத்தி
நடைபெறுகிறது. சகல கிராமங்களும்
முன்னேற்றம்
கண்டு வருகின்றன.
நகரத்தைப் போன்றே
தொழில்நுட்ப
அறிவில் கிராமத்தையும்
முன்னேற்றும்
செயற் திட்டம் நடைபெறு கிறது. நாட்டில் வறுமை முற்றாக ஒழிக்கப்படவில்லை.
எனினும் விரைவில் வறுமை ஒழிக்கப்பட்டுவிடும். சுதந்திரத்தின் பின்னரான
நாட்டின்
வரலாற்றில்
முத லாவது
விமான நிலையம் மத்தளையில்
நிர்மாணிக்கப்படுகிறது.
இது தெற்கை
தேசிய உற்பத்தியின்
கேந்திரமாகவும்,
உல்லாசத்துறையின்
கேந்திர நிலையமாகவும்
மாற்றுவது
உறுதி. நாட்டின் முன்னெடுக்
கப்படும்
சிறப்பான
செயற்றிட்டங்களால்
உற்பத்தித்துறையைப்
போன்றே உல் லாசத்துறையும்
முன்னேற்றம்
கண்டு வருகிறது.
இந்த வருடத்தில்
7,50,000 உல்
லாசப் பிரயாணிகள்
நாட்டிற்கு
வருகை தந்துள் ளமை இதற்கு
சிறந்த உதாரணம்.
நவீன இலங்கையை நாம் கட்டி
யெழுப்புவோம்
என்ற வாக்குறுதி
தற் போது
நிறைவேறுகிறது. எமது வம்ச வரலாற்று
ஏட்டின் புதிய அத்தியாயம்
இந்த நெடுஞ்சாலை
மூலம் புரட்டப் பட்டுள்ளது.
இன்று போல் ஒரு 27 ம்
திகதி நாட்டு மக்கள் மறக்க முடியாதது.
மாவீரர்கள் தினத்துக்காக
இன்றைய தினம் ஒதுக்கப்பட்டு
அதற்குப்
பயந்து வாழ்ந்த யுகம் அது.
எமது பிள்ளைகளை
ஒரு வாரத்திற்கு
பாடசாலைக்கு
அனுப்ப முடியாது நாம் கவலைப்பட்டோம். அன்று
வானொலிகள்
மூலம் கூட இதற்கான
அறிவிப்பு
வழங்கப்பட்டது.
இன்று அந்த யுகம் மாற்றமடைந்துள்ளது.
அண்மைக் காலமாக
நாம் மேற்கொண்ட
சிறந்த வெற்றிகரமான
செயற்பாடுகளுக்குக்
கிடைத்த வெற்றியாக
இதனைக் குறிப்பிட
முடியும்.
நாட்டில் காணியின்
விலை உயர்ந்து
செல்கிறது
என்றால் அது தாய்
நாட்டின்
பெறுமதி உயர்கிறது
என்பதே பொருள்.
கொழும்பு - மாத்தறை
அதிவேக நெடுஞ்சாலையோடு
கட்டுநாயக்கா
- கொழும்பு,
கண்டி - கொழும்பு, திரு கோணமலை
- கொழும்பு,
யாழ்ப்பாணம்
- கொழும்பு
என சகல
நெடுஞ்சாலைகளும்
நவீனமயப்படுத்தப்படும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு
செல்ல 8 மணித்தியாலம்
செலவாவதால்
தான் பிரிவினை
கோருகின்றனர். நவீன பாதை மூலம்
3 மணித்தியாலங்களில்
யாழ்ப்பாணம்
செல்ல முடியுமானால்
பிரிவினை
தேவையில்லை.
அப்போது எல்லைகளும்
இருக்காது.
நாட்டு மக்க ளின் மனங்களும்
இணைக்கப்பட்டு
பிரச்சினைகளுக்குத்
தீர்வாகிவிடும்.
பிரிவினை வாதம், பிரதேச வாதத்திற்கு
சிறந்த தீர்வு இதுவே எனவும்
ஜனாதிபதி
தெரிவித்தார்.
நாட்டில் பல வீதிகள்
பெருந்தொகை
நிதி செலவில்
புனரமைக்கப்பட்டு
வருகின்றன.
2012 ஆம் ஆண்டுக்காக
78 பில்லியன்
ரூபாவை நாம் ஒதுக்கியுள்ளோம்
எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |