|
||||
|
ஐ.நா வின் மனித
உரிமை பேரவை அமர்வில்
இன்று உலக மனித
உரிமை ஆய்வாழர்கள்
இலங்கைக்கு
பெரும் பாராட்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
பேரவையின்
14ம் அகில கால பேரமர்வுகளின்
போது இன்று
ஐரோப்பிய
நேரம் 14.30 மணிக்கு இலங்கை தனது தரப்பு
நியாயங்களை
யுத்தத்தின்
பின்னர் இனநல்லிணக்கம்,
முன்னாள்
புலிகளை புனரமைத்தல்,
யுத்தத்தால்
உள்நாட்டில்
இடம்பெயர்ந்தவர்கள்
மீளமர்த்தல்,
அரசியல் தீர்வொன்றுக்கான
முன்னெடுப்பு
உட்பட்ட பல காரணிகளை
தொகுத்து
முன்வைத்தது. அமர்வுகளில்
இலங்கை சார்பாக கலந்து கொண்ட இராஜதந்திரிகள்
குழுவிற்கு
தலைமை தாங்கிய மனித உரிமைகளுக்கான
ஜனாதிபதியின்
விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க சுமார் ஒரு மணி
நேரம் உரையாற்றினார். அமைச்சரின்
உரையை அடுத்து கலந்து கொண்ட நாடுகளின்
பிரதிநிதிகளுக்கு
இலங்கை தொடர்பான தமது நாடுகள்
கொண்டுள்ள
நிலைப்பாடுகளை
தெரிவிப்பதற்கு
இடமளிக்கப்பட்டது. அங்கு பேசிய பெரும்பாலான
நாடுகள் இலங்கை பயங்கரவாதத்தை
வெற்றிகொண்டு
மேற்கொண்டுவரும்
பணிகளையிட்டு
பெரும் பாராட்டுதல்களைத்
தெரிவித்தனர். அங்கு பேசிய அமைச்சர்
இலங்கை அரசாங்கம்,
இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழு
மற்றும் சிவில் சமூக குழுக்களின்
அறிக்கைகளை
ஆராய்ந்து
இதனடிப்படையில்
மதீப்பீடு
அமையும் எனவும் கடத்தல்கள்,
காணாமல் போதல்கள் தொடர்பில்
விசாரணை நடாத்த தேசியப் பொறிமுறைமையொன்று
உருவாக்கப்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில்
காணாமல் போதல்கள்
5600 சம்பவங்கள்
பதிவாகியுள்ளதாகத்
தெரிவித்துள்ள
அமைச்சர்
காணாமல் போனவர்கள்
பற்றிய உண்மையான தகவல்களை அறிந்து கொள்வதற்கு
வெளிநாடுகளில்
வாழும் இலங்கையர்கள்
பற்றிய தகவல்கள் அவசியமானவை
என அவர்
குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், ஏனைய சம்பவங்கள்
தொடர்பில்
விசாரணை நடத்தப்படும்
என தெரிவித்துள்ள
அவர் பொதுமக்கள்
மீது அரசாங்கத்
தரப்பு தாக்குதல்
நடத்துவதாக
சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுக்கள்
முற்றிலும்
உண்மைக்கு
புறம்பானவை
எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும மனித உரிமை
உறுதிப்படுத்தல்
மற்றும் மேம்படுத்தல்
தொடர்பில்
உள்நாட்டு
ரீதியான நடவடிக்கைகளுக்கு
சந்தர்ப்பம்
அளிக்கப்பட
வேண்டுமென
வேண்டுதல்
விடுத்துள்ள
அமைச்சர்
சமரசிங்க
இலங்கையின்
மனித உரிமை
நிலைமைகளை
தனிமைப்படுத்த
மதிப்பீடு
செய்யக் கூடாது எனவும், கள நிலவரங்கள்
காலச் சூழ்நிலைகளின்
அடிப்படையில்
மனித உரிமை
நிலைமைகளை
கவனத்திற்
கொண்டு தீர்மானங்கள்
எடுக்கப்பட
வேண்டுமெனவும்
கேட்டுக்கொண்டுள்ளார்: இலங்கையில் மனித உரிமையை
மேம்படுத்துவது
தொடர்பில்
அனைத்து தரப்பினருடனும்
இணைந்து ஒத்துழைப்புடன்
செயற்படத்
தயார் என கூறியுள்ள
அவர் இலங்கையின்
தற்போதைய
நிலைமைகள்
குறித்து
99 நாடுகளும்
காட்டி வரும் கரிசனை
பாராட்டுக்குரியது
என அவர்
தெரிவித்துள்ளார். 2008ம்
அமர்வுகளில்
உறுதியளிக்கப்பட்டது
போன்று மனித உரிமை
தொடர்பில்
தேசிய செயற்திட்டமொன்று
உருவாக்கப்பட்டுள்ளது
என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளர்களின் உரிமைகள், கைதிகளின்
உரிமைகள்,
இடம்பெயர்
மக்களின்
உரிமைகள்,
மகளிர் உரிமைகள், சிறுவர் உரிமைகள், சட்டவிரோத
குடியேற்றங்களை
தடுத்தல்,
மனித உரிமை
மீறல்கள்
தொடர்பில்
காவல்துறையினருக்கு
பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மனித உரிமைகளை
மேம்படுத்த
தேசிய செயற்திட்டம்
தயாரிக்கப்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார். யுத்தம் இடம்பெற்ற
உலகின் ஏனைய நாடுகளைப்
போன்றே இலங்கையிலும்
யுத்தத்தின்
பின்னர் பல்வேறு காரணிகள் தொடர்பில்
கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார். மனிதாபிமான
உதவிகளிலிருந்து,
அபிவிருத்தி
உதவிகளுக்கு
இடம் நகர்வதற்கு
போதியளவு
கால அவகாசம்
வழங்கப்பட
வேண்டுமென
அவர் தெரிவித்துள்ளார். நாட்டில்
மெய்யான நல்லிணக்கத்தை
ஏற்படுத்த
அரசாங்கம்
பல்வேறு வழிகளில் அர்ப்பணிப்புடன்
செயற்பட்டு
வருவதாகக்
குறிப்பிட்டுள்ளார். கருத்து சுதந்திரத்தை
உறுதி செய்ய நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாகவும்,
தன்னார்வ
தொண்டு நிறுவனங்கள்
மீது அடக்குமுறைகள்
பிரயோகிக்கப்படுவதாக
சுமத்துவதனை
ஏற்றுக்கொள்ள
முடியாது
எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |