|
||||
|
அதிகாரப் பகிர்வை
அர்த்தமுள்ளதாக்க
மாகாணசபை
முறைமையை
மாற்ற வேண்டியது
அவசியம் -
ஜனாதிபதி
அதிகாரப் பகிர்வினை
அர்த்தமுள்ளதாக
மாற்றுவதற்காக
தற்பொழுது
காணப்படும்
மாகாண சபை முறைமையை
மாற்ற வேண்டியது
அவசியமானது
என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தேசிய தராதரங்களை
பயன்படுத்தி
மாகாண முரண்பாடுகளை
இல்லா தொழிப்பதே
தேசிய நல்லிணக்கத்தினை
ஊக்குவிப்பதற்கான
பிரதான ஆயுதம் என்று கூறிய
அவர் நாட்டு
மக்கள் எதிர்நோக்கும்
பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கு
ஆக்கபூர்வமாக
ஒத்துழைக்குமாறு
எதிர்க்கட்சித்
தலைவர், தமிழ் தேசிய
கூட்டணி தலைவர் மற்றும் ஜே. வி. பி. தலைவர் ஆகியோருக்கு
அழைப்பு விடுத்தார்.
2013
ஆம் ஆண்டுக்கான
வரவு செலவுத்
திட்ட உரையில் கருத்துத்
தெரிவித்த
ஜனாதிபதி
மேலும் கூறியதாவது:-
இந்தப் பாராளுமன்றத்தில்
உள்ள எதிர்க்கட்சி
மற்றும் அரசாங்க தரப்பு உறுப்பினர்கள்
அனைவரும்
தேசிய நலனுக்காக
நாம் ஒன்றுபட்டு
செயற்பட முடியும் என்பதனை வெளிக் காட்டியிருக்கின்றனர்.
குடும்ப விழுமியங்களினால்
பேணி வளர்க்கப்பட்ட
பாரம்பரிய,
கிராமிய, மர புரிமையின்
செல்வாக்கிற்
குட்பட்ட
நீண்டகால
அரசியல் அனுபவங்களினால்
பெறப்பட்ட
முதிர்ச்சி
மற்றும் பொது நலவாய
பாராளுமன்ற
மாநாட்டினை
நடாத்துவதற்கு
இந்தப் பாராளுமன்றத்திற்கு
உங்களால்
வழங்கப்பட்ட
தலைமத்துவமானது,
நாம் சிறுவர்களாக
இருந்தபோது
மறைந்த எனது தந்தை
டீ. ஏ. ராஜபக்ஷ
அவர்கள் வழங்கிய அமைதியான தலைமைத்துவத்தினை
ஞாபகப் படுத்துகின்றது.
எமது தேசத்தின்
சுமையாகக்
காணப்படுகின்ற
பிரச்சினைகளை
நாம் தீர்த்துவைப்பதற்கு
இது போன்ற
உணர்வுடன்
ஒன்றுபட்டு
செயலாற்ற
வேண்டும்.
எமது மக்களுக்கு
அதிகாரப்
பகிர்வினை
அர்த்தமுள்ளதாக
மாற்றுவதற்கு
தற்பொழுது
காணப்படும்
மாகாண சபை முறைமை
மாற்றப்படவேண்டியது
அவசியமாகும். அதிகார பகிர்வு
என்பது எம்மை கூறுபோடுகின்ற
அரசியல் மறுசீரமைப்பாக
இருக்க முடியாது.
அது எம் அனைவரையும்
ஒன்றுபடுத்த
வேண்டும். அத்தகைய மறுசீரமைப்புகள்
அதிக செலவினம்
கொண்டதாகவோ
மக்கள் மீது சுமையினை
ஏற்படுத்தக்
கூடிய சிக்கலான நிருவாகக்
கட்டமைப்பினையோ
கொண்டிருக்க
முடியாது.
இலங்கையின்
எல்லா பகுதிகளிலிருந்தும்
என்னை சந்தித்த தமிழ், முஸ்லிம்
அல்லது சிங்களவர்
அனைவரும்
கல்வி, சுகாதாரம்,
வேலைவாய்ப்பு,
சிறந்த வாழ்க்கைத்தரம்
மற்றும் நாட்டில் சம அந்தஸ்துடன்
வாழ்தல் என்பவற்றையே
வேண்டினர்.
தேசிய தராதரங்களை
பயன்படுத்தி
மாகாண முரண்பாடுகளை
இல்லா தொழிப்பதே
தேசிய நல்லிணக்கத்தினை
ஊக்குவிப்பதற்கான
பிரதான ஆயுதமாகும்.
இந்த அரசாங்கம்
எமது மக்களின்
அபிலாஷைகள்
அனைத்தையும்
நிறைவேற்றி
வைப்பதற்கு
தொடர்ந்தும்
அர்ப்பணிப்புடன்
உள்ளது.
எனவே எதிர்க்கட்சி
தலைவர், தமிழ் தேசிய
கூட்டணியின்
தலைவர், மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின்
தலைவர் போன்றவர்களை
எமது மக்கள்
எதிர்நோக்கும்
பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்காக
ஆக்கபூர்வமாக
எம்முடன்
ஒத்துழைக்க
வருமாறு நான் அழைப்பு
விடுக்கின்றேன்.
இம்முயற்சியானது எமது உள்நாட்டுப்
பிரச்சினைகளில்
வெளிநாடுகளின்
தலையீடுகளை
ஏற்படுத்தாது,
இது மிகவும்
சுயமரியாதையுடன்
கூடியதாகும்.
எதிர்க்கட்சி
தலைவர், தமிழ் தேசிய
கூட்டணியின்
தலைவர் மற்றும் நான் உட்பட
இப்பணியினை
முன்னெடுத்துச்
செல்வதற்கு
எமது வாழ்க்கையிலும்
அரசியலிலும்
போதியளவான
அனுபவத்தினைப்
பெற்றிருக்கின்றோம்.
கெளரவ சபாநாயகர்
அவர்களே, வறுமை தணிப்பு
மற்றும் எமது குறைவருமானம்
பெறும் மக்களின் வாழ்க்கைத்தர
மேம்பாடு
என்பவற்றின்
பால் எமது
பயணம் பாராளுமன்றத்தில்
கடினமானதாக
இருந்ததுடன்,
திவி நெகும
அபிவிருத்தி
திணைக்களத்தினை
தாபிக்கின்ற
சட்ட மூலத்தினை
அங்கீகரிப்பதில்
நீண்ட செயன்முறையினை
எதிர்நோக்க
வேண்டியேற்பட்டது.
இது எமது தேசம்
ஆபத்துக்களிலிருந்து
விடுபட்டுவிட்டதுவென
ஓய்வாக இருப்பதற்கு
எம்மை அனுமதிக்கின்ற
மைல்கல்லாக
முடியாது
என்பதனைக்
காட்டுகின்றது. அரசியல், பொருளாதார
மற்றும் இயற்கை சுனாமிகள்
என பல
இருக்க முடியும்.
அவை அனைத்தும்
எதிர்வுகூற
முடியாதவையாகும்.
இந்த வகையில்
வறுமையினை
இல்லாதொழித்து
வறிய மக்களின்
வாழ்க்கைச்
சூழலை தரமுயர்த்துவது
எமது விடுபடாத
இலக்காகும்.
2015 ஆம் ஆண்டளவில்
வறுமையற்ற
இலங்கையினை
உருவாக்குவதற்கு
நாம் அனைவரும்
அர்ப்பணிப்புடன்
செயற்படுவோமாக. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |