|
||||
|
ராஜீவ்
காந்தி கொலையின் முடிச்சுக்களை
அவிழ்கின்றார்
கே.பி
பிரபாகரனும், பொட்டு
அம்மானும்
சேர்ந்தே
திட்டமிட்டிருக்க
வேண்டும்
ராஜீவ் காந்தி
கொலை தொடர்பாக
தம்மை இந்தியாவின்
சிபிஐ அமைப்பினர்
2010 ம் ஆண்டே
விசாரித்ததாகவும்
தணுவின் பெல்ட் வெடிகுண்டு,
சிவராசனின்
கைத்துப்பாக்கி
ஆகியவற்றுக்கும்
எனக்குமான
தொடர்பு என்ன என்று
கேள்வி கேட்டதாகவும்
தமிழீழ விடுதலைப்
புலிகளின்
சர்வதேச பொறுப்பாளராக
இருந்த குமரன் பத்மநாதன்
என்ற கே.
பி. கூறியுள்ளார்.
கொழும்பில் இருந்து
வெளியாகும்
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு
அவர் அளித்த
பேட்டியின்
ஒரு பகுதி:
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில்
எனக்கு எந்த ஒரு
தொடர்புமே
இல்லை. தமிழீழ விடுதலைப்
புலிகளைப்
பொறுத்தவரை
பல்வேறு பிரிவுகள்
இருந்தன.
அடுத்த பிரிவில்
வேறு எவரும்
தலையிட முடியாது.
தமிழகத்தில் இருந்து
செயற்பட்டவர்கள்
வேறு ஒருவரது
தலைமையின்
கீழ் செயல்பட்டனர்.
எனக்கு மட்டுமல்ல....
லண்டனில்
இருந்த கிட்டுவுக்கும்
கூட ராஜீவ்
கொலை பற்றி
எதுவும் தெரிந்திருக்கவில்லை.
உண்மையை சொன்னால், ராஜீவ் காந்தியுடனும்
இந்தியாவுடனும்
நல்ல உறவை
மேம்படுத்துமாறுதான்
பிரபாகரன்
கிட்டுவிடம்
கூறியிருந்தார். காசி ஆனந்தன், பொருளாதார
வல்லுனர்
அர்ஜுன சிற்றம்பலம்
போன்றோர்
மூலம் இந்தியாவுக்கு
சென்று ராஜீவை சந்திக்க கிட்டு ஏற்பாடுகளை
செய்திருந்தார்.
ராஜிவை கொலை செய்யும்
திட்டத்தை
பிரபாகரனும்
பொட்டம்மானும்
தான் திட்டமிட்டிருக்க
வேண்டும். பிரபாகரன் ரகசியமாக
திட்டங்களை
நிறைவேற்றக்
கூடியவர்.
அதை வேறு எவரிடமும்
பகிர்ந்து
கொள்ள மாட்டார்.
நானோ அல்லது
என்னுடைய
“கேபி” டிபார்ட்மெண்ட்டோ
இந்த நடவடிக்கையில்
ஈடுபடவில்லை.
என்னுடைய பணி என்பது இயக்கத்துக்கு
ஆயுதங்களைக்
கொடுப்பது
தான்.
ராஜிவ் கொலை நடந்த
போது இந்தியாவுக்கும்
தென் கிழக்கு
ஆசிய நாடுகளுக்கும்
இடையே பயணித்துக்
கொண்டிருந்தேன். ராஜிவ் கொலை நடப்பதற்கு
முன்பு நான் இந்தியாவில்
மும்பையில்
தான் இருந்தேன்.
கொலை நடப்பதற்கு
சில நாட்களுக்கு
முன்பு தான் மும்பையிலிருந்து
மலேசியாவுக்கு
சென்றேன்.
என்னுடைய பயணம் முன்பே திட்டமிடப்பட்டது.
ராஜிவ் கொலை சம்பவத்துக்கும்
இதற்கும்
தொடர்பு இல்லை.
இண்டர்போல்....
ராஜிவ் கொலையில் எனக்கு தொடர்பில்லை
என்பது இந்தியாவின்
சிபிஐக்கு
தெரியும். அதனால் தான் என் மீது
குற்றப் பத்திரிகை
தாக்கல் செய்யவில்லை.
ராஜிவ் கொலை வழக்கில் நான் தலைமறைவு
குற்றவாளி
இல்லை. என்னை இண்டர்போல்
பட்டியலில்
சேர்த்ததற்கு
காரணம், என்னிடம் சில தகவல்களை
உறுதிப்படுத்திக்
கொள்ள சிபிஐ விரும்பியது
தான். அப்போது நான் இந்தியாவில்
இல்லை. எங்கு இருக்கிறேன்
என்பதும்
அவர்களுக்கு
தெரியவில்லை.
அதனால் இண்டர்போல்
மூலம் நோட்டீஸ் விடுத்தனர்.
இந்தியாவின்
விசாரணை
ராஜிவ் கொலை தொடர்பாக
அண்மையில்
ஊடகங்களில்
வெளியானது
போல் இப்போது
என்னிடம்
விசாரணை நடத்தப்படவில்லை. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலேயே
விசாரிக்கப்பட்டு
விட்டேன்.
சிபிஐ மற்றும்
ரோ அமைப்பு
அதிகாரிகள்
என்னிடம்
விசாரித்தனர்.
ராஜீவ் கொலைக்காக
நிதி உதவி
செய்தீர்களா
என்று கேள்வி கேட்டனர்.
இப்படியான செயல்களை
பொதுவாக விடுதலைப்
புலிகளின்
உளவுப் பிரிவு ‘ரகசிய’ நிதி
மூலமே செய்யும் என்று விளக்கம்
அளித்தேன்.
மேலும் தணு பயன்படுத்திய
பெல்ட் வெடிகுண்டு,
சிவராசனின்
கைத் துப்பாக்கி
பற்றி என்னிடம் விசாரித்தனர்.
தணுவின் பெல்ட்
பாம்
அதாவது ராஜிவை கொல்ல தணு
பயன்படுத்திய
பெல்ட் வெடிகுண்டை
நான் தந்தேனா? என்று
விசாரித்தனர்.
நான் இல்லை என்று சொன்னேன்.
மேலும் பெல்ட்
வெடிகுண்டில்
பயன்படுத்தப்பட்ட
ஆர்.டி.எக்ஸ்.
போன்றவை இந்தியாவிலேயே
கிடைக்கக்
கூடியது தான். அதை வெளிநாட்டில்
இருந்து வாங்கித்தர
வேண்டியது
இல்லை என்றேன். அந்த பெல்ட்
வெடிகுண்டை
தமிbழ விடுதலைப்
புலிகளே தயாரித்திருக்கின்றனர்
என்றேன்.
அதை சிபிஐயும்
ஏற்றுக் கொண்டது.
இந்தியாவால் “ஒற்றைக்கண்
சிவராசன்”
என்றழைக்கப்படுகிற
சிவராசன்
9 எம். எம். பிஸ்டல் வைத்திருந்தார்.
அதை நான் தான் சிவராசனுக்கு
கொடுத்தேனா
என்பது தான் சிபிஐயின்
சந்தேகம்.
அதை நான் கொடுக்கவில்லை
என்றேன்.
அதையும் சிபிஜ ஏற்றுக் கொண்டது.
இதேபோல் இந்தியாவின்
றோ அல்லது
வெளியுறவுத்துறை
அமைச்சகத்தை
சேர்ந்தவர்களாக
இருக்கலாம்
என்னுடன்
சிலர் ஆலோசனை நடத்தினர். விடுதலைப் புலிகள்
இயக்க போராளிகளின்
எதிர்காலம்,
புலம் பெயர் தமிழர்கள்,
புலம் பெயர் தமிழர்
அமைப்புகள்,
ஆயுத போராட்டத்தின்
எதிரொளி ஆகியவற்றை
பற்றி விசாரித்தனர்
என்று கே. பி. கூறியுள்ளார்.
உண்மையை சொன்னால், ராஜீவ் காந்தியுடனும்
இந்தியாவுடனும்
நல்ல உறவை
மேம்படுத்துமாறுதான்
பிரபாகரன்
கிட்டுவிடம்
கூறியிருந்தார். காசி ஆனந்தன், பொருளாதார
வல்லுனர்
அர்ஜுன சிற்றம்பலம்
போன்றோர்
மூலம் இந்தியாவுக்கு
சென்று ராஜீவை சந்திக்க கிட்டு ஏற்பாடுகளை
செய்திருந்தார்.
ராஜிவை கொலை செய்யும்
திட்டத்தை
பிரபாகரனும்
பொட்டம்மானும்
தான் திட்டமிட்டிருக்க
வேண்டும். பிரபாகரன் ரகசியமாக
திட்டங்களை
நிறைவேற்றக்
கூடியவர்.
அதை வேறு எவரிடமும்
பகிர்ந்து
கொள்ள மாட்டார்.
நானோ அல்லது
என்னுடைய
“கேபி” டிபார்ட்மெண்
ட்டோ இந்த
நடவடிக்கையில்
ஈடுபடவில்லை.
என்னுடைய பணி என்பது இயக்கத்துக்கு
ஆயுதங்களைக்
கொடுப்பது
தான்.
ராஜிவ் கொலை நடந்த
போது இந்தியாவுக்கும்
தென் கிழக்கு
ஆசிய நாடுகளுக்கும்
இடையே பயணித்துக்
கொண்டிருந்தேன். ராஜிவ் கொலை நடப்பதற்கு
முன்பு நான் இந்தியாவில்
மும்பையில்
தான் இருந்தேன்.
கொலை நடப்பதற்கு
சில நாட்களுக்கு
முன்பு தான் மும்பையிலிருந்து
மலேசியாவுக்கு
சென்றேன்.
என்னுடைய பயணம் முன்பே திட்டமிடப்பட்டது.
ராஜிவ் கொலை சம்பவத்துக்கும்
இதற்கும்
தொடர்பு இல்லை.
இண்டர்போல்....
ராஜிவ் கொலையில் எனக்கு தொடர்பில்லை
என்பது இந்தியாவின்
சிபிஐக்கு
தெரியும். அதனால் தான் என் மீது
குற்றப் பத்திரிகை
தாக்கல் செய்யவில்லை.
ராஜிவ் கொலை வழக்கில் நான் தலைமறைவு
குற்றவாளி
இல்லை. என்னை இண்டர்போல்
பட்டியலில்
சேர்த்ததற்கு
காரணம், என்னிடம் சில தகவல்களை
உறுதிப்படுத்திக்
கொள்ள சிபிஐ விரும்பியது
தான். அப்போது நான் இந்தியாவில்
இல்லை. எங்கு இருக்கிறேன்
என்பதும்
அவர்களுக்கு
தெரியவில்லை.
அதனால் இண்டர்போல்
மூலம் நோட்டீஸ் விடுத்தனர்.
இந்தியாவின்
விசாரணை
ராஜிவ் கொலை தொடர்பாக
அண்மையில்
ஊடகங்களில்
வெளியானது
போல் இப்போது
என்னிடம்
விசாரணை நடத்தப்படவில்லை. 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளிலேயே
விசாரிக்கப்பட்டு
விட்டேன்.
சிபிஐ மற்றும்
ரோ அமைப்பு
அதிகாரிகள்
என்னிடம்
விசாரித்தனர்.
ராஜீவ் கொலைக்காக
நிதி உதவி
செய்தீர்களா
என்று கேள்வி கேட்டனர்.
இப்படியான செயல்களை
பொதுவாக விடுதலைப்
புலிகளின்
உளவுப் பிரிவு ‘ரகசிய’ நிதி
மூலமே செய்யும் என்று விளக்கம்
அளித்தேன்.
மேலும் தணு பயன்படுத்திய
பெல்ட் வெடிகுண்டு,
சிவராசனின்
கைத் துப்பாக்கி
பற்றி என்னிடம் விசாரித்தனர்.
தணுவின் பெல்ட்
பாம்
அதாவது ராஜிவை கொல்ல தணு
பயன்படுத்திய
பெல்ட் வெடிகுண்டை
நான் தந்தேனா? என்று
விசாரித்தனர்.
நான் இல்லை என்று சொன்னேன்.
மேலும் பெல்ட்
வெடிகுண்டில்
பயன்படுத்
தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்.
போன்றவை இந்தியாவிலேயே
கிடைக்கக்
கூடியது தான். அதை வெளிநாட்டில்
இருந்து வாங்கித்தர
வேண்டியது
இல்லை என்றேன். அந்த பெல்ட்
வெடிகுண்டை
தமிழீழ விடுதலைப்
புலிகளே தயாரித்தி
ருக்கின்றனர்
என்றேன்.
அதை சிபிஐயும்
ஏற்றுக் கொண்டது.
இந்தியாவால் “ஒற்றைக்கண்
சிவராசன்”
என்றழைக்கப்படு
கிற சிவராசன்
9 எம். எம். பிஸ்டல் வைத்திருந்தார்.
அதை நான் தான் சிவராசனுக்கு
கொடுத்தேனா
என்பது தான் சிபிஐயின்
சந்தேகம்.
அதை நான் கொடுக்கவில்லை
என்றேன்.
அதையும் சிபிஜ ஏற்றுக் கொண்டது. இதேபோல் இந்தியாவின்
றோ அல்லது
வெளியுறவுத்
துறை அமைச்சகத்தை
சேர்ந்தவர்களாக
இருக்கலாம்
என்னுடன்
சிலர் ஆலோசனை நடத்தினர்.
விடுதலைப் புலிகள்
இயக்க போராளிகளின்
எதிர்காலம்,
புலம் பெயர் தமிழர்கள்,
புலம் பெயர் தமிழர்
அமைப்பு கள், ஆயுத
போராட்டத்தின்
எதிரொளி ஆகியவற்றை
பற்றி விசாரித்தனர்
என்றார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |