|
||||
|
பின்லேடனை கொன்ற
அனுபவம் குறித்து நேவி சீல் வீரர் பேட்டி அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்றவராக அறிவித்திருக்கும்; அமெரிக்க முன்னாள் நேவி சீல் வீரர் ரொபட் ஓனைல், அந்த சம்பவம் குறித்து பொக்ஸ் நியுஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அல் கொய்தா தலைவரை தாமே இறுதியாக பார்த்தவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பாகமாக ஒளிபரப்பப்பட்ட இந்த பேட்டியில் முதல் பாகம் கடந்த செவ்வாய் இரவு வெளியானது. "அவரை கடைசியாக பார்த்தவராக இடம்பிடிப்பதற்கு அங்கு போதுமான வெளிச்சம் இருந்தது" என்று ஓனைல் குறிப்பிட்டுள்ளார். பின்லேடனை சுடுவதற்கு முன்னர் நான் அவரது கண்களை நேராக பார்த்ததாக ஓனைல் விபரிக்கிறார். "எனக்கு இரண்டு அடிக்கு முன்னால் அவர் நின்றுகொண்டிருந்தார். அவரது கையை மனைவி பற்றிக்கொண்டிருந்தார். அந்த முகத்தை நான் ஆயிரக்கணக்கான தடவைகள் பார்த்திருக்கிறேன். நாம் அவரை பிடித்துவிட்டோம். இந்த யுத்தத்தை எம்மால் முடிக்க முடியும் என்று நான் அப்போது நினைத்துக் கொண்டேன்" என்கிறார் ஓனைல். பீஸ்ஸா விநியோகிப்பவராக இருந்து நேவி சீல் படையில் இணைந்த அனுபவங்கள் குறித்து இந்த பேட்டியில் ஓனைல் விபரித்துள்ளார். ஒசாமாவை பிடிக்கும் ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவை அடுத்து அதற்காக செல்லும் முன்னர் தாம் கொல்லப்படுவது அல்லது பிணைக்கைதியாக பிடிபடும் அபாய சூழலில் தனது தந்தையுடன் கடைசியாக தொலைபேசியில் உரையாடியது மற்றும் மனைவி குழந்தைகளுக்கு கடிதம் எழுதிய அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார். உலக வர்த்தக மையம், பென்டகன் மற்றும் n'ங்க்வில்லே, பென்சில்வேனியாவில் தமது அன்புக்குரியவர்களை இழந்த அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பை மூன்று துப்பாக்கி குண்டுகள் முடிவுக்கு கொண்டுவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். "இது எனது வாழ்நாளின் சிறந்த செயலா அல்லது மோசமான செயலா என்பதை கண்டறிய இன்றும் நான் முயற்சித்து வருகிறேன்" என்றும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் பின்லேடனை பிடிக்கும் வெற்றிகரமான நட வடிக்கையில் முக்கிய பங்கை வகித்ததையிட்டு ஓனைல் பெருமை வெளியிட்டுள்ளார். ஒசாமாவை பிடிக்கும் இராணுவ நடவடிக் கைக்காக 2011 பயிற்சிக்கு அழைக்கப்பட்டபோது தாமும் ஏனைய சில வீரர்களும் விபரம் அறியாமல் பயிற்சியில் ஈடுபட்டதையும் அவர் குறிப் பிட்டுள்ளார். அப்போது அரபு வசந்தம் ஏற்பட்டிருந்ததால் லிபிய சர்வாதிகாரி முஅம்மர் கடாபியை பிடிக்கவே பயிற்சியில் ஈடுபடுவதாக ஓனைலும் ஏனைய வீரர்களும் நம்பியிருந் துள்ளனர். இதன்போது ஒசாமா தங்கியிருந்த அபோதா பாத் வளாகத்தை போன்ற மாதிரி கட்டடம் ஒன்றிலேயே வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இதன் போது வீரர்கள் பிரிக்கப் பட்டு பயிற்சியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். ஒருசில வீரர்கள் வளா கத்தின் மதில் சுவரக்கு உள்ளேயும், மற்றும் ஒரு குழு அருகில் இருப் போரிடம் இருந்து பாது காக்க வெளியிலும் மேலும் ஒரு குழு கூரை பகுதியிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான இராணுவ நடவடிக்கைகளில் ஓனைல் பொதுவாக வெளிப்பகுதியின் பாதுகாப்புக்கு தலைமை வகிப்பவராகவே செயற்பட்டிருக்கிறார். எனினும் இந்த வளாகத்தின் மேல் மாடியிலேயே ஒசாமா தங்கியிருப்பதை சி.ஐ.ஏ. முகவர் கண்டறிந்ததை அடுத்து அந்த அபாயகரமான பணியை செய்ய ஓனைல் முன்வந்துள்ளார். இது ஒரு அபாயகரமான இராணுவ நடவடிக்கை என்று தெரிந்ததும் அதில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் தமது குடும்பத்தினருக்கு இறுதியாக கடிதம் எழுதியுள்ளார்கள்;. "நாம் இதற்காக அதிகம் பயிற்சியில் ஈடுபட்டபோதே இது ஒரு வழிய இராணுவ நடவடிக்கையாக இருக்கும் என்று உணந்து கொண்டோம்" என்று ஓனைல் குறிப்பிட்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |