|
||||
|
காமன்வெல்த் போட்டிகள்
தொடங்கியது...
வண்ணமயமான
விழாவால்
வசீகரித்த
டெல்லி!
டெல்லியில் ஆயிரக்கணக்கான
கலைஞர்களின்
வண்ணமயமான
கலை நிகழ்ச்சிகளுடன்
கோலாகலமாகத்
தொடங்கியது,
19-வது காமன்வெல்த்
விளையாட்டு
போட்டிகள். காமன்வெல்த் விளையாட்டு
போட்டியின்
தொடக்க விழா டெல்லியில்
உள்ள ஜவஹர்லால்
நேரு மைதானத்தில்
ஞாயிற்றுக்கிழமை
இரவு 7 மணிக்குத்
தொடங்கியது.
இப்போட்டிகளைத் தொடங்கி
வைப்பதற்காக
குடியரசுத்
தலைவர் பிரதிபா பாட்டீலும்,
இங்கிலாந்து
இளவரசர் சார்லஸும்
மேடைக்கு
வந்தனர்.
சார்லஸுடன் அவருடைய
மனைவி கமீலாவும்
வந்திருந்தார்.
விழா மேடையில்,
பிரதமர் மன்மோகன் சிங்கும் காமன்வெல்த்
அமைப்பின்
நிர்வாகிகளும்
அமர்ந்திருந்தனர். தேசிய கீதம் இசைக்கப்பட்ட
பிறகு, வாணவேடிக்கைகள்
வர்ணஜாலம்
காட்டின. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட
பிரமாண்டமான
பலூனும் பறக்கவிடப்பட்டது.
அப்போது, மைதானத்தில்
திரண்டு இருந்த 60 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர்
கைதட்டி மகிழ்ச்சி
ஆரவாரம் செய்தனர்.காமன்வெல்த்
போட்டிகள்
தொடக்க விழாவையொட்டி,
பல்வேறு மாநிலங்களைச்
சேர்ந்த 7 ஆயிரம் கலைஞர்கள்
மற்றும் மாணாக்கர்கள்
பங்கேற்ற
பிரமாண்டமான
கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியின் துவக்கமாக,
புதுச்சேரி
- ஆரோவில்லைச்
சேர்ந்த 7 வயது சிறுவன்
கேசவ் கடம் வாசித்தான். அவனுடன் சேர்ந்து
800-க்கும் மேற்பட்ட
இசைக்கலைஞர்கள்
டிரம்ஸ் வாசித்தனர்.
கேரள மாநிலத்தைச்
சேர்ந்த இசைக்கலைஞர்கள்
செண்டை மேளம் வாசித்தனர்.
இதேபோல் கர்நாடகம்,
பஞ்சாப், ஒரிசா, மராட்டியம்,
மணிப்பூர்
போன்ற பல்வேறு மாநிலங்களைச்
சேர்ந்த டிரம்ஸ் இசைக் கலைஞர்களும்
தங்கள் மாநில இசைக்கருவிகளை
வாசித்தனர்.
இதில், பொம்மலாட்டமும்
இடம்பெற்றது.
பல்வேறு நாடுகளில்
இருந்து வந்திருக்கும்
விளையாட்டு
வீரர்கள்,
வீராங்கனைகள்
மற்றும் விளையாட்டு
நிர்வாகிகளை
வரவேற்கும்
வகையில் பிரபல பின்னணி
பாடகர் ஹரிஹரன் வரவேற்பு பாடலை பாடினார்.
அவருடன் சேர்ந்து,
மூவர்ண உடை அணிந்த
ஆயிரத்துக்கும்
மேற்பட்ட
மாணாக்கர்கள்
பாடினர்.
அப்போது, பல்வேறு
மாநிலங்களைச்
சேர்ந்த கலைஞர்கள்
மற்றும் மாணாக்கர்கள்
இந்தியாவின்
கலாசாரத்தை
பிரதிபலிக்கும்
நடனங்களை
ஆடினார்கள்.
அணிவகுப்பு...
பின்னர், போட்டியில்
பங்கு கொள்ளும் 71
நாடுகளின்
வீரர், வீராங்கனைகளின்
கண்கவர் அணிவகுப்பு
நடைபெற்றன. முதலில் ஆஸ்திரேலிய
வீரர்கள்
தங்கள் நாட்டு தேசிய கொடியுடன்
அணிவகுத்து
வந்தனர்.
அதன்பிறகு மற்ற நாடுகளின்
வீரர், வீராங்கனைகள்
தங்கள் நாட்டு தேசிய கொடியுடன்
அணிவகுத்து
வந்தனர்.
இறுதியாக
போட்டியை
நடத்தும்
நாடான இந்தியாவின்
வீரர்கள்
மற்றும் வீராங்கனைகள்,
ஒலிம்பிக்
போட்டியில்
தங்கப்பதக்கம்
வென்ற பிரபல துப்பாக்கி
சுடும் வீரர் அபினவ்
பிந்த்ரா
தலைமையில்
அணிவகுத்து
வந்தனர்.
தேசிய கொடியை
அபினவ் பிந்த்ரா ஏந்தி முன்னால்
வர, அவரை
தொடர்ந்து
இந்திய வீரர், வீராங்கனைகள்
தேசிய கொடியை அசைத்தபடி
உற்சாகமாக
வந்தனர். அப்போது மேடையில் இருந்த குடியரசுத்
தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், அவரது
மனைவி குர்சரண் கவுர், இங்கிலாந்து
இளவரசர் சார்லஸ், அவரது மனைவி
கமீலா ஆகியோர் எழுந்து நின்று கைதட்டியும்,
கைகளை அசைத்தும்
தங்கள் மகிழ்ச்சியை
தெரிவித்தார்கள்.
கூட்டாக தொடங்கி வைத்தனர்..
வீரர்களின் அணிவகுப்பு
நிகழ்ச்சி
முடிந்ததும்
காமன்வெல்த்
போட்டி ஒருங்கிணைப்பு
குழுவின்
தலைவர் சுரேஷ் கல்மாடி, காமன்வெல்த்
விளையாட்டு
பெடரேஷன்
தலைவர் மைக் பென்னல்,
பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்
பேசினர்.
பின்னர், இந்திய குத்துச்சண்டை
வீரர் விஜேந்தர்
சிங், குத்துச்சண்டை
வீராங்கனை
மேரி கோம்,
துப்பாக்கி
சுடும் வீரர் சம்ரேஷ்
ஜங், மல்யுத்த
வீரர் சுசில் குமார் ஆகியோர் காமன்வெல்த்
ஜோதியை மைதானத்தில்
தொடர் ஓட்டமாக கொண்டு வந்தனர். கடைசியாக கொண்டு
வந்த சுசில்
குமார் மேடையில் இருந்த இங்கிலாந்து
இளவரசர் சார்லஸிடம்
ஜோதியை கொடுத்தார்.
அதன்பிறகு, இங்கிலாந்து
ராணியின்
செய்தியை
வாசித்த சார்லஸ், ராணி கேட்டுக்
கொண்டதன்
பேரில் காமன்வெல்த்
போட்டியை
தொடங்கி வைக்க வந்திருப்பதாக
அவர் கூறினார்.
அவரை தொடர்ந்து
குடியரசுத்
தலைவர் பிரதிபா பாட்டீலும்
பேசினார்.
காமன்வெல்த் போட்டியை
அவர்கள் இருவரும் கூட்டாக தொடங்கி வைத்தனர். குடியரசுத் தலைவர்
பிரதிபா பட்டீல் பேசுகையில்,
"காமன்வெல்த்
விளையாட்டு
போட்டி தொடங்குகிறது,"
என்று அறிவித்தார்.
பின்னர், ராணுவ வீரர்கள் இசைக் கருவிகளை
வாசித்தபடி
வந்தனர். 6 பேர் காமன்வெல்த்
கொடியை மைதானத்தில்
அமைக்கப்பட்டு
இருந்த மேடைக்கு கொண்டு வந்தனர். அங்குள்ள கொடிக்கம்பத்தில்
காமன்வெல்த்
கொடி ஏற்றப்பட்டது.
அதன்பிறகு தமிழ்நாடு,
ஆந்திரா, கேரளா, ஒரிசா,
மணிப்பூர்
உள்ளிட்ட
மாநில கலைஞர்களின்
பரதநாட்டியம்,
குச்சுப்புடி,
மோகினியாட்டம்,
மணிப்புரி
உள்ளிட்ட
பல்வேறு நடன நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்
பாடல் நிகழ்ச்சியும்
இடம் பெற்றது.
தொடக்க விழாவில் காங்கிரஸ்
தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள்,
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்,
காங்கிரஸ்
பொதுச்செயலாளர்
ராகுல் காந்தி எம்.பி., முன்னாள்
குடியரசு
தலைவர் அப்துல் கலாம் மற்றும்
அரசியல் தலைவர்கள்,
உயர் அதிகாரிகள்
கலந்து கொண்டனர்.
இந்தத் தொடக்க
விழாவையொட்டி,
டெல்லியில்
வரலாறு காணாத பாதுகாப்பு
ஏற்பாடுகள்
செய்யப்பட்டு
இருந்தன. தொடக்க விழா நடைபெற்ற ஜவஹர்லால்
நேரு மைதானத்தைச்
சுற்றிலும்
ஏராளமான பாதுகாப்பு
படையினர்
குவிக்கப்பட்டு
இருந்தனர்.
நகரம் முழுவதும்
முக்கிய இடங்களில்
பாதுகாப்புக்கு
போலீசார்
நிறுத்தப்பட்டு
கண்காணிப்பு
தீவிரப்படுத்தப்பட்டு
இருந்தது.
இம்மாதம் 14 ஆம் தேதி
வரை 12 நாட்கள்
நடைபெறும்
இந்த போட்டியில்
இந்தியா, இங்கிலாந்து,
ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து,
கனடா உள்பட
71 நாடுகளைச்
சேர்ந்த 6 ஆயிரத்து
400 வீரர், வீராங்கனைகள்
கலந்து கொள்கிறார்கள். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |