Contact us at: sooddram@gmail.com

 

அமெரிக்க வர்த்தக முதலீட்டு குழு நேற்று யாழ். வருகை

அமெரிக்க அரச மற்றும் தனியார் வர்த்தகப் பிரதிநிதிகளைக் கொண்ட முதலீட்டுத் தூதுக் குழுவினர் யாழ். குடா நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக ஆராய்வதற்கு நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். முப்பது பேர் அடங்கிய இந்த அமெரிக்க வர்த்தக முதலீட்டுத் தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் நேற்றுக் காலை விமானம் மூலம் பலாலியை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் வைத்து யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரினால் வரவேற்கப்பட்ட அமெரிக்க முதலீட்டாளர்கள், யாழ். பொது நூல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அச்சமயம் அங்கு வருகைதந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி உட்பட அமெரிக்க முதலீட்டு தூதுக் குழுவினரை யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா சம்பிரதாயபூர்வமாக வரவேற்றார்.

இதனைத் தொடர்ந்து; வட மாகாணத்திலுள்ள முதலீட்டு வாய்ப் புக்கள் குறித்தும் வட பகுதியில் முத லீடு செய்வது குறித்தும் ஆராயும் மாநாடு ஆரம்பமாகியது. யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக அமைப்பின் பிரதிநிதியும் தூதுக் குழுவின் தலைவருமான மைக்கல் டிலானே வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.

இதனைத் தொடர்ந்து இலங்கை முதலீட்டுச் சபையின் நிறைவேற்று அதிகாரி துமிந்த ஆரியசிங்க வட பகுதியில் முதலீட்டு ஊக்குவிப்பு நடவடிக்கைகள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தில் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள் எனும் தொனிப் பொருளில் பேசினார். சமாதானமின்றி அபிவிருத்தி கிடையாது என்பதை வலியுறுத்திய சிவஞானசோதி, புதிய முதலீடுகளை வரவேற்கும் அதேவேளை ஏற்கனவே காணப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் மட்பாண்டத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் போன்ற தொழில்வான்மைகளை மீண்டும் இயங்கவைக்க அரசாங்கம் முயற்சி எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் வட பகுதி சுற்றுலா அபிவிருத்தி மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி மேற்கொள்ளக் கூடிய உற்பத்திகள் தொடர்பாகவும் அவர் விரிவாக விளக்கமளித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் வர்த்தக பொறுப்பாளர் நிமல் கருணாதிலக்க, இலங்கை வர்த்தகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜி. ரி. சேனாதீர, கைத்தொழில் அபிவிருத்தி சபை பொது முகாமையாளர் ஜஸ்மின் மன்னப்பெரும, யாழ். வர்த்தக சம்மேளனத் தலைவர் பூரணச் சந்திரன், யாழ். வர்த்தக சங்கத் தலைவர் ஜனக்குமார், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற முதலீட்டு மாநாட்டைத் தொடர்ந்து அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு அமெரிக்க வர்த்தகத் தூதுக்குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டு முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து நேரில் கண்டறிந்தனர்.

அத்துடன் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வர்த்தக துறையினரையும் தூதுக்குழுவினர் சந்தித்துப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை வருகைத் தந்துள்ள இந்த வர்த்தக முதலீட்டுத் தூதுக் குழுவினர் சுமார் ஐந்து நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர்.

இருநாட்டு அரசாங்கங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அமெரிக்க இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு திட்ட ஒப்பந்தத்திற்கு அமைய தனியார் வர்த்தகத்துறையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் வகையிலேயே முதலீட்டுக் குழுவினர் இங்கு வருகை தந்துகொள்ளர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com