|
||||
|
TNA க்குள் குழப்பம்
நிதி
விவகாரங்களை
பங்காளி கட்சிகளுடன்
பகிர மறுக்கும்
தமிழரசுக்
கட்சி சம்பந்தன் - சுரேஸ் முறுகல் தொடர்வு: தீர்வு இல்லையேல்
புதிய கட்சி உருவாகும்
நிலை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்
அங்கத்துவம்
வகிக்கும்
ஏனைய பங்காளிக்
கட்சிகளை
இலங்கையில்
மாத்திரமன்றி
சர்வதேச ரீதியாகவும்
அந்நியப்படுத்திவிட்டு
இலங்கை தமிழரசுக்
கட்சியை முன்னிலைப்படுத்த
அக்கட்சியின்
சிரேஷ்ட உறுப்பினர்கள்
முயற்சித்து
வருவதாகத்
தகவல் கசிந்துள்ளது.
இதன் ஓர்
அங்கமாக, கூட்டமைப்பின்
பங்காளிக்
கட்சிகளுடன்
கலந்தா லோசனை நடத்தாமல்
கட்சிக் கிளை அலுவலகங்களை
வெளிநாடு
களில் திறப்பதற்குத்
தமிழரசுக்
கட்சியினர்
நடவடிக்கைகளை
மேற் கொண்டுள்ளனர்.
இந்நடவடிக்கை கூட்டமைப்பிற்குள்
புதிய குழப்பத்தைத்
தோற்றுவித்துள்
ளதாக நம்பகரமான
கூட்டமைப்பு
வட்டாரங்கள்
மூலம் தெரிய வருகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை
இலங் கையிலேயே
பதிவு செய்யாத நிலையில், வெளிநாடுகளில்
கிளைகளைத்
திறப்பதன்
உள்நோக்கம்
யாதெனப் பங்காளிக்
கட்சிகள்
கேள்வி எழுப்புவதால்,
தமிழரசுக்
கட்சியின்
தலைமைத்துவத்திற்குப்
புதிய நெருக்கடி
தோன்றியுள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள்
அகதிகளுக்கான
மறுவாழ்வுக்காக
அனுப்பிவைக்கும்
நிதியைத்
தமிழரசுக்
கட்சியே அதன் வங்கிக்
கணக்கிலிட்டுச்
செலவு செய்து வருவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன்
எம்.பி.குற்றஞ்சாட்டியிருக்கும்
நிலையில்,
அவுஸ்திரேலியாவில்
புதிய கிளையொன்றைத்
திறக்கும்
முயற்சியில்
தமிழரசுக்
கட்சி ஈடுபட்டுள்ளதாகவும்
அந்தக் கிளையைத் திறந்துவைப்பதற்கு
பாராளுமன்ற
உறுப்பினர்களான
சுமந்திரனும்
ஸ்ரீதரனும்
அவுஸ்திரேலியா
செல்லவுள்ளதாகத்
தகவல்கள்
தெரிவிக்கின்றன.
மீளக் குடியமர்ந்த
மக்களுக்கு
வாழ்வாதார
உதவிகளைப்
பெற்றுக்கொடுப்பதற்காகத்
தன்னார்வ
தொண்டு நிறுவனமொன்றை
ஸ்தாபிக்க
முன்பு கூட்டமைப்பு
நடவடிக்கை
எடுத்திருந்ததாகவும்,
ஆனால் பாதுகாப்பு
அமைச்சின்
அனுமதி கிடைக்காததால்
அந்தப் பணி கிடப்பில்
போடப்பட்டிருப்பதாகவும்
சுரேஷ் எம்.பி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், உள்ளூரில்
நிதி திரட்டும்
பணியிலும்
தமிழரசுக்
கட்சியினர்
ஏற்பாடுகளைச்
செய்திருந்தனர்.
வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும்
நிதியை முறையாகச்
செலவு செய்வதற்கான
நிதிக் குழுவோ, வங்கிக் கணக்கோ இல்லாத நிலையில் தமிழரசுக்
கட்சி நிதியினைச்
சேகரித்து
தம் விருப்பப்படி
செலவு செய்து வருவதாலேயே,
கூட்டமைப்பை
பதிவு செய்வதில்
அங்கத்துவக்
கட்சிகள்
விடாப்பிடியாக
இருப்பதாகவும்
தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பைக் கட்டுக்கோப்புடன்
ஒழுங்கமைக்க
வேண்டுமெனப்
பங்காளிக்
கட்சிகள்
பிடிவாதம்
பிடிப்பதும்
அதனை திரு.
சம்பந்தன், மாவை சேனாதிராஜா
முதலான தமிழரசுக்
கட்சியினர்
ஒத்திப்போடுவதன்
பின்னணியில்
நிதி விவகாரம்
வெளியில்
வராத விடயமாக
உள்ளதென்று
தற்போது தெரியவந்துள்ளது.
கூட்டமைப்பை பதிவு செய்யாமல்
இழுத்தடித்துச்
சென்று காலப்போக்கில்
அதன் பங்காளிக்
கட்சிகளை
ஓரங்கட்டிவிடும்
உள்நோக்கத்துடன்
தமிழரசுக்
கட்சியினர்
திட்டமிட்டுச்
செயற்படுவதாகவும்
குற்றச்சாட்டு
எழுந்துள்ளது.
இது இவ்வாறிருக்க,
கூட்டமைப்பைப்
பதிவு செய்வதில்
தமிழரசுக்
கட்சி பின்வாங்கும்
பட்சத்தில்
அந்தக் கட்சியைப்
புறந்தள்ளிவிட்டு
எஞ்சிய நான்கு கட்சிகளும்
தமிழ்த் தேசிய மக்கள்
முன்னணியையும்
இணைத்துக்கொண்டு
கூட்டமைப்பாகப்
பயணிக்கும்
சாத்தியம்
உள்ளதாகவும்
தகவல்கள்
தெரிவிக்கின்றன.
தமிழர் விடுதலைக்
கூட்டணியின்
உதய சூரியன்
சின்னத்தின்
கீழ் தமிழ்த்
தேசிய கூட்டமைப்பைப்
பதிவு செய்து வலுவான ஓர் அமைப்பாக
அதனைக் கட்டியெழுப்புவது
பற்றி தமிழரசுக்
கட்சியைத்
தவிர்ந்த
ஏனைய கட்சிகள்
ஆலோசித்து
வருவதாக அரசியல் வட்டாரங்கள்
தெரிவித்தன.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |