Contact us at: sooddram@gmail.com

 

சிரிய பயணிகள் விமானத்தை யுத்த விமானம் மூலம் தரையிறக்கி துருக்கி சோதனை

சிரியாவின் பயணிகள் விமானத்தை துருக்கி யுத்த விமானத்தைக் கொண்டு வலுக்கட்டாயமாக தரையிறக்கி சோதனையிட்டுள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த விமானத்தில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக வெளியான தகவலை அடுத்தே துருக்கி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து சிரிய தலைநகர் டமஸ்கஸை நோக்கி நேற்று முன்தினம் பயணித்த ஏ. 320 ஏர்பஸ் பயணிகள் விமானம் துருக்கியின் இரு யுத்த விமானங்களால் இடைமறித்து துருக்கி தலைநகர் அங்காராவிலுள்ள எஸன்பொகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதுபின் துருக்கி நிர்வாகத்தினால் 8 மணிநேரத்திற்கு மேல் சோதனைக்குட்படுத்தப்பட்ட விமானம் மீண்டும் சிரியாவை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டது. 180 பயணிகளை கொண்டு செல்லும் இந்த விமானத்தில் 30 பயணிகளே இருந்துள்ளனர்.

எனினும் இந்த விமானத்தில் இருந்து சட்டவிரோதமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக துருக்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் இராணுவத் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. விமானத்தில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்தே விமானம் இடைமறிக்கப் பட்டதாக குறிப்பிட்டுள்ள துருக்கி வெளியுறவு அமைச்சர் அஹ்மட் டவுடொக்லு, துருக்கியினூடாகச் செல்லும் சந்தேகத்திற்கு இடமான சிரிய விமானங்கள் தொடர்ந்தும் சோதனைக்கு உட்படுத்தப்படும் என எச்சரித்தார்.

துருக்கி வான்பரப்பினூடே சிரியா ஆயுத தளவாடங்கள் கொண்டு செல்வதற்கு துருக்கி கடந்த செப்டம்பரில் தடை விதித்தது. இதனடிப்படையிலேயே சிரிய விமானத்தை துருக்கி வலுக்கட்டா யமாக தரையிறக்கியுள்ளது. ஆனால் துருக்கியின் செயல் சர்வதேச சிவில் விமான ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என்றும் அதுவான் உரிமையை மீறி இருப்ப தாகவும் சிரிய போக்குவரத்து அமைச்சர் மஹ்மூத் சயீட் லெபனானின் அல் மனார் தொலைக்காட்சிக்கு குறிப்பிட் டுள்ளார்.

இதனிடையே மேற்படி இடைமறிக்கப் பட்ட விமானம் வழமை போன்று விமான நிலையத்தில் இருந்து பறந்ததாகவும் எந்த சம்பவமும் இடம்பெறவில்லை என்று அந்த விமானம் பயணத்தை ஆரம்பித்த மொஸ்கோவின் வ்னுகோவா விமான நிலையத்தின் பேச்சாளர் யெலெனா கிரிலோவா குறிப்பிட்டுள்ளார். சிரிய பயணிகள் விமானம் வாரத்திற்கு ஒருமுறை மொஸ்கோவுக்கும் டமஸ்கஸக்கும் இடையில் பயணத்தை தொடர்ந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் தமது நாட்டிலிருந்து புறப்பட்ட விமானத்தை இடைமறித்தது குறித்து ரய்ஷா, துருக்கியிடம் விளக்கம் கோரியுள்ளது. இதில் அந்த விமானத்தில் இருந்த 17 ரஷ்ய பிரஜைகளுடன் தொடர்புகொள்ள தமது இராஜதந்திரிகளுக்கு துருக்கி நிர்வாகத் அனுமதி அளிக்கவில்லை என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விமானத்தில் இருப்போரின் உயிர் மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி ரஷ்ய நிர்வாகம் இவ்வாறு நடவடிக்கை எடுத்ததற்கான காரணம் குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளதுஎனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் துருக்கி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஒத்திவைப்புக்கான எந்தக் காரணமும் விளக்கப்படாமல் இந்த அறிவிப்பை ஜனாதிபதியின் பேச்சாளர் வெளியிட்டார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி துருக்கி பயணமாக இருந்ததாக ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதனிடையே துருக்கி நிர்வாகம் தன்னை மோசமாக நடத்தியதாக விமானத்தில் இருந்த சிரிய விமான சேவை ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர். சிரிய விமான சேவை தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பணியாளர்கள் துருக்கியில் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் என்பது குறித்து மேலதிக தகவல்கள் அளிக்கவில்லை.

சிரிய அரசு அந்நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சர்வதேச நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டிவரும் நிலையில் ரஷ்யா, சிரியாவுடன் தொடர்ந்தும் நெருங்கிய உறவை பேணிவருகிறது. சிரியாவுக்கு எதிரான பாதுகாப்புச் சபை தீர்மானங்களை ரஷ்யா பலமுறை தனது வீட்டோ அதிகாரத்தைக் கொண்டு ரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறத்தில் துருக்கிக்கும் சிரியா வுக்கும் இடையில் இரு நாட்டு எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பதற்றம் நீடித்து வருகின்றது. துருக்கி எல்லை யோர கிராமத்தில் சிரிய எறிகணைத் தாக்கு தலால் ஒரே குடும்பத்தில் 5 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சிரியா மீது துருக்கி பீரங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிரிய வான்பரப்பு பாதுகாப்பற்றது என துருக்கி அரசு அந்நாட்டு விமானங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே துருக்கி விமானங்கள் சிரிய வான் பரப்பை தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் துருக்கியில் இருந்து மின்சாரத்தை பெறுவதையும் சிரியா நிறுத்திக் கொண்டுள்ளதாக துருக்கி வலுசக்தி அமைச்சர் டனர் யில்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com