Contact us at: sooddram@gmail.com

 

திவிநெகும': தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்ப்பு தமிழருக்கு செய்யும் துரோகம் - அமைச்சர் பசில் ராஜபக்ஷ

வட மாகாணத்தில் திவிநெகும நிறுத்தப்படுமாயின் அது வடபகுதி தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கின்ற மாபெரும் துரோகமாக அமையும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கு மக்களுக்கு அதிகம் சேவை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தம் அதற்குத் தடையாக அமையுமாயின் அத்தடையை நீக்கும்படி வடபகுதி மக்களே கோருவர் எனவும் அவர் குறிப்பிட்டார். 13 வது திருத்தத்திற்கு கீழ் மட்டத்தில் ஓரளவு எதிர்ப்பு உள்ளது அந்த எதிர்ப்பு உத்வேகத்துடன் வேகமாக வெளிக்கிளம்புவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். திவிநெகும சட்ட மூலத்திற்கு 13வது திருத்தம் தடையாக அமையுமாயின் அது தொடர்பில் பொதுமக்களின் கருத்தும் பெறப்படும் என்றும் அவர் கூறினார்.

திவிநெகும சட்டமூலம் தொடர்பாக எழுந்துள்ள நிலைமைக ளைத் தெளிவு படுத்துவதற்காக அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமிழ்த் தினசரி பத்திரி கைகளின் ஊடகவிய லாளர்களை நேற்று அவரது அமைச்சில் சந்தித்தார். இச்சமயமே அவர் மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், இன்று திவிநெகும சட்ட மூலத்தை எதிர்க்கின்ற பிரதான கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்குகின்றது. இவர்களது இந்நடவடிக்கை காரணமாக வடக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பாதிப்புகளை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

2001ம் ஆண்டிலும் 2004ம் ஆண்டிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் பிரதிநிதிகளாகவே பாராளுமன்றம் வந்தனர். அதனை அவர்கள் அன்று வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிட்டிருந்தனர். அதனை அவர்கள் இன்று வரையும் வாபஸ் பெறவில்லை. ஆகவே, புலிகள் தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வகை சொல்ல வேண்டும்.

புலிகள் வடபகுதி மக்களுக்கென இருந்த உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அழித்தனர். அல்லது சேதப்படுத்தினர். அம்மக்களின் உயிர்களையும், உடமை களையும் அழித்தனர். அன்று மறைந்த பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப் பாணத்திற்கு என பல்கலைக்கழகம் வழங் கிய போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அன்றைய தலைவர்கள் அதனை எதிர்த்தனர். சத்தியாக் கிரகம் நடத்தினர். அதனால் அப்பல்கலைக்கழகத்திற்குரிய விவசாய பீடம் கூட இல்லாமல் போனது.

சமுர்த்தி வேலைத்திட்டம் நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அது வட மாகாணத்தின் ஓரிரு பகுதிகளைத் தவிர ஏனைய பிரதேசங்களில் பல வரு டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கு புலிகளே காரணகர்த்தாக்கள். இதனால் சமுர்த்தி திட்டத்தின் நன்மைகள் வடமாகாணத்தின் பெரும்பாலான தமிழ் மக்களைச் சென்றடையவில்லை. இப்போது தான் எமது ஜனாதிபதி வடமாகாணத்தில் வாழுகின்ற சகல மக்களுக்கும் சமுர்த்தி நிவாரணத்திட்டத்தைப் பெற்றுக்கொடுத்து இருக்கின்றார்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களுக்கு இப்போதுதான் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படுகின்றார்கள்.

இதேநேரம் வட மாகாண மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றாக காணி உரிமை பத்திர விவகாரம் விளங்கிக்கொண்டி ருக்கின்றது. அப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்குபிம்சவியவேலைத்திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுத்தோம்.

அதற்கு எதிராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நீதிமன்றம் சென்று அவ்வேலைத்திட்டத்தை இடைநிறுத்தி யுள்ளனர். இப்போது திவிநெகும ஊடாக வட மாகாணத்திலுள்ள தமிழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின் றார்கள். அதற்காக 13வது திருத்தத்திலுள்ள சில குறைபாடுகளை பயன்படுத்த முயற்சி செய்கின்றார்கள்.

நாடு சுதந்திரமடைந்தது முதல் கிடைக் காத அபிவிருத்தியை நாம் வடக்குக்கு இப்போது பெற்றுக்கொடுத்திருக்கின்றோம். உட்கட்டமைப்பு வசதிகள் யாவும் பாரியளவு அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின் றன. என்றாலும், திவிநெகும ஊடாக ஒவ்வொரு தனிமனிதனையும் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்குத் திட்டமிட்டி ருக்கின்றோம்.

இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக நாம் தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி பெற்று விடுவோம். அது தமது வாக்கு வங்கிக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்ற பீதியின் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இச்சட்டத்தை எதிர்க்கின்றது. எமக்கு எதிராக தமிழ் மக்களின் உள்ளங்களில் குரோதங்களை வளர்த்து அதனை தொடர்ந்தும் தக்க வைக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விரும்பு கின்றனர்.

ஆனால் வட பகுதி மக்களுக்கு அதிகம் சேவை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 13வது திருத்தம் அம்மக்களுக்கு சேவை செய்வதற்கு தடையாக அமையு மாயின் அது குறித்து மக்களின் அரசாங்கம் என்ற வகையில் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

வட பகுதி மக்களுக்கு சேவை செய்வதற் காக அம்மக்களின் வாக்குகளைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் புலம் பெயர் தமழர் களின் (டயஸ்போரா) விருப்பத்திற்கு ஏற்ப செயற்படாமல் இருப்பார்களாயின் பிரச்சினை களே இராது. அப்போது 13வது திருத்தத் தின் ஊடாக அதிக சேவைகளை மக்க ளுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும்.

13வது திருத்தத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், புலிகளின் தலைவரும் அன்று முதலில் கடுமையாக எதிர்த்தனர். அவர்கள் தான் அத்திருத்தத்திலுள்ள குறை களைப் பயன்படுத்தி திவிநெகும சட்ட மூலத்தைத் தடுக்க முயற்சி செய்கின்றனர். 13வது திருத்தத்தில் குறைகள் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.

வடபகுதி மக்களுக்கு சேவை செய்ய முடி யாத நிலை ஏற்படுமாயின் அத்திருத்தத்தில் குறைகள் இருப்பதையே அது எடுத்து காட்டுகின்றது. என்றாலும் ஜனாதிபதிக்கு இது ஒரு இடையூறு அல்ல. நாம் அங்கு வாழுகின்ற மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்றுவோம்.

மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கு எவரும் எதிர்ப்பில்லை. மக்களுக்கு சேவை செய்ய முடிந்தால் அதுவே சிறப்பானது. இதைவிடுத்து மக்களின் ஆணையை பறிக்கவே பார்க்கின்றார்கள்.

தலைவர்களுக் குத்தான் அதிகாரம் தேவையாக உள்ளது. மக்களது தேவையோ வேறாக இருக்கின்றது. 13வது திருத்தத்தின் ஊடாக மாத்திரமல்ல 19 வது திருத்தத்தை கொண்டு வந்தாவது மக்களுக்கு அதிகாரம் வழங்க நாம் தயா ராக உள்ளோம். மாவட்ட முறை இருந்த போது பெருந் தோட்ட மக்கள் நுவரெலியா மாவட்டத்தில் சக்திமிக்கவர்களாக இருந் தார்கள். மாகாண சபை முறையால் அம் மக்கள் சக்தியை இழந்துள்ளார்கள்.

மக்களுக்கு நெருக்கமான அவர்களுக்கு விருப்பமான ஆட்சி முறை வழங்கப்பட வேண்டும். அதுவே இந்தியாவின் விருப்ப மும் ஆகும். இதற்கு இந்தியாவின் பஞ்சா யத்து முறையே சிறப்பானது என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com