Contact us at: sooddram@gmail.com

 

தகைமை, திறமை அடிப்படையிலேயே வடமாகாண அமைச்சுப் பதவி - த.தே.கூ

'போருக்குப் பின்னரான சூழலை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வடமாகாண சபைக்கான அமைச்சுத் தேர்வு இடம்பெற்றுள்ளது' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வடமாகாண சபைக்கான அமைச்சரவை தெரிவு தொடர்பில் விளக்கமளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எமது உறுப்பினர்களிடம் இருந்து அவர்களின் தகைமைகள், அனுபவங்கள், விருப்பங்கள் சம்பந்தமாக தரவுகளைப் பெறக் காலதாமதம் ஆகிவிட்டதால் எமது அமைச்சர்களையும் அமைச்சுக்களையும் அடையாளம் காணவும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒருவரின் தரவுகள் இன்னும்கூட கிடைத்தபாடில்லை.

எமது கூட்டமைப்பின் மூன்று கட்சிகள் தமது அமைச்சர் விருப்புகளைத் தெரிவித்திருந்தன. எனினும் சகல உறுப்பினர்களும் ஒரேமாதிரியான தேர்வுக்கே உட்படுத்தப்பட்டனர்.

போருக்குப் பின்னரான சூழலை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெற்றுள்ளது. ஆட்சித்திறனுக்கு அடிகோலுபவை தகைமையும் திறமையும் ஆவன. எமது மக்களின் நம்பிக்கையை நடைமுறைப்படுத்தும் வண்ணம் இவற்றையே அத்திவாரமாகக் கொண்டு தேர்வு நடைபெற்றுள்ளது.

எதிர்க்கட்சியாக இதுவரை இருந்து தற்போது ஆட்சியில் ஈடுபட அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நாம் எமது நோக்குகளில் அடிப்படை வித்தியாசத்தைக் காட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றோம். அத்துடன் மக்கள் எமக்களித்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையும் கொண்டுள்ளோம்.

எனினும் குறிப்பிட்ட அளவு அமைச்சர்களையே சட்டப்படி நாங்கள் நியமிக்க வேண்டியிருந்தது. பலருக்குத் தகைமையிருந்தும் சிலருக்கே அமைச்சுப் பதவிகள் கொடுக்கக்கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் பிரதேச பிரதிநிதித்துவம், கட்சியடிப்படை, நிர்வாகப் பொறுப்புக்களின் அந்நியோன்யம் ஆகியனவும் கருத்தில் எடுக்கப்பட்டன.

மக்களின் ஆதரவைப்பெற்ற கட்சிகளுக்கு உரிய முன்னுரிமையும் அளிக்கப்பட்டது. இவ்வாறான அடிப்படையிலேயே அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். அதேநேரம் எந்த ஒரு உறுப்பினருக்குங் குறிப்பிட்ட அமைச்சுத் துறை சார் பொறுப்புக்கள் கொடுக்கப்படாமல் விடுபடவும் இல்லை.

அவர்கள் அந்தந்த அமைச்சின் குறிப்பிட்ட துறைசார் பொறுப்புக்களை ஏற்று அமைச்சர்களின் மேற்பார்வையின் கீழ் செயற்படுவார்கள். விடுபட்ட அமைச்சுப் பொறுப்புக்கள் அந்தந்த அமைச்சர்களால் நேரடியாகவே கண்காணிக்கப்படுவன. குறிப்பிட்ட பொறுப்புக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் சில பொது ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டே செயலாற்ற வேண்டியிருக்கும்.

அவையாவன:-

1.    காலத்திற்குக் காலம் பொறுப்புள்ள தலைமை அலுவலருடன் சேர்ந்து குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக ஆற்றப்படும் காரியங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்தல் வேண்டும்.

2.    அதேபோல் அந்தந்த அமைச்சரினால் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டங்களின் நன்மை தீமைகள், பயன்கள், விளைவுகள் ஆகியன தொடர்ந்தும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

3.    இரு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் தமது கருத்துக்களை மேற்படி உறுப்பினர்கள் எழுத்து மூலம் தெரியப்படுத்தி வரவேண்டும்.

இவற்றை விட சில நடவடிக்கைகளில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டி இருக்கும். அவை பின்னர் அறிவிக்கப்படும்.

அமைச்சர்கள், அமைச்சுக்கள், பொறுப்பான விடயங்கள், பொறுப்பானவர்கள் போன்ற விபரங்கள் பின்வருமாறு,

சபையின் தவிசாளர்              - சி.வீ.கே.சிவஞானம்; (இ.த.அ.கட்சி யாழ்)

சபையின் பிரதி தவிசாளர்  - அன்ரன் ஜெயநாதன் (இ.த.அ.கட்சி முல்லைத்தீவு)

முதலமைச்சர்                         - நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் (பொது வேட்பாளர் யாழ்)

வேளாண்மை, கால்நடை, நீர்ப்பாசனம், சூழல் அமைச்சர்    - பி.ஜங்கரநேசன் (ஈ.பீ.ஆர்.எல்.எஃப் யாழ்.)

கல்வி, கலாச்சார, அமைச்சர்    - தி.குருகுலராஜா (இ.த.அ.கட்சி கிளிநொச்சி)

சுகாதார அமைச்சர்                        - வைத்திய கலாநிதி .பி.சத்தியலிங்கம் (இ.த.அ.கட்சி வவுனியா)

மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் - டெனீஸ்வரன் (ரெலோ மன்னார்)

கட்சி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு -

இலங்கைத் தமிழரசுக் கட்சி                -    14
ஈ.பீ.ஆர்.எல்.எஃப்                                       -    06
ரெலோ                                                          -    05
புளொட்                                                         -    02
ரி.யு.எல்.எஃப்                                              -    01
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்   -    01
பொது வேட்பாளர்                                    -    01
 மொத்தம்                                                   -    30

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அமைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியாவிடினும் பிரதித் தவிசாளர் பதவியிலிருக்கும் அன்ரன் ஜெயநாதனுக்கு முக்கியமான துறைப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலதிக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அயுப் அஸ்மீனுக்கும் அப்பொறுப்புக்களில் குறிப்பிட்ட விடயங்களில் பங்கேற்க வழிவகுக்கப்பட்டுள்ளது. இவர்கள் முதலமைச்சருடன் சேர்ந்து கடமையாற்றுவார்கள்.

முல்லைத்தீவு மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்பது கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சுப் பதவிகள் மீள்பரிசீலனை செய்யப்படும் போது முல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படுவதானது முன்னுரிமை பெறும்.

வடமாகாணசபை மற்றைய மாகாண சபைகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பது எனது விருப்பம். இனியாவது கட்சி பேதங்களை மறந்து, வன்முறைகளைக் களைந்து, ஜனநாயக அடிப்படையில் பாதிப்புற்றிருக்கும் எம் மக்களின் இடர் களையப் பாடுபடுவோமாக
!.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com