Contact us at: sooddram@gmail.com

 

பதவியேற்பு நிகழ்வை ஏன் பகிஷ்கரித்தோம்? - புளொட்

2013 ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதியன்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. மேற்படி முடிவானது, மக்கள் மத்தியிலும், எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சில கேள்விகளை எழுப்பியிருக்கக் கூடும். எனவே இது குறித்து, சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எமக்குண்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடமாகாணசபை என்பது, உண்மையில் வடக்கு மக்களுடன் மட்டுமே தொடர்புபட்ட ஒரு விடயமல்ல. இது - ஒட்டுமொத்த தமிழ் மக்களும், இலங்கைத் தீவில் கௌரவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதற்கான, ஒரு அரசியல் தீர்வை நோக்கி முன்செல்வதற்கான, ஆரம்ப புள்ளியாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாணசபையை, அவ்வாறானதொரு நோக்கில் கையாள வேண்டும் என்பதுதான், கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்துவரும் சர்வதேச சமுகத்தின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் அத்தகையதொரு நோக்கிலிருந்து கூட்டமைப்பு விலகிச் சென்றுவிடுமோ, என்னும் அச்சம் எமக்குள் எழுந்துள்ளது. எமது மக்கள், வடமாகாணசபை தேர்தலின் போது, எமக்களித்த பேராதரவை, வெறும் கட்சி அரசியலுக்குள் முடக்கி, கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையும் இழந்துவிடக் கூடிய ஆபத்தை, நாம் உணர்கிறோம்.

வடமாகாணசபைக்கான அமைச்சர்கள் மற்றும் ஏனைய பொறுப்புகளுக்கான நியமனங்களின் போது, ஒரு கூட்டு அரசியல் தலைமைத்துவதற்கிற்கான ஜனநாயக பண்புகள் பின்பற்றப்படாமையானது. எதிர்காலத்தில் வடமாகாணசபையை, ஒரு அரசியல் தீர்விற்கான தளமாக பயன்படுத்திக் கொள்வதில், பல்தரப்பு உடன்பாட்டை காண முடியாத நிலைமையை தோற்றுவிக்கலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஜந்து கட்சிகள் இருந்தும், வடமாகாணசபை நிர்வாக முடிவுகளில், ஒரு கட்சி மேலாதிக்கத்தை நிலைநாட்டக் கூடிய ஏது நிலையே காணப்படுகிறது. ஜந்து கட்சிகளின் பொது உடன்பாட்டின் பேரில், வடமாகாணத்திற்கான முதல்வராக ஏற்றுக்கொள்ளப்பட்ட, விக்னேஸ்வரன்  அந்த உடன்பாட்டிற்கு மாறாக, வெறும் கட்சிமனோபாவ அரசியலுக்குள் முடக்கப்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

விக்னேஸ்வரன் மேற்படி நிலைமைகளை கவனத்தில் கொண்டு, அவற்றை ஆரம்பத்திலேயே நிவர்த்தி செய்யாது விட்டால், வடமாகாணசபையை ஒரு இறுதி அரசியல் தீர்வு நோக்கி முன்கொண்டு செல்வதில் நாம் தோல்வியடைய நேரிடலாம். நாம் தோல்வியடைய வேண்டும் என்பதுதான், அரசாங்கத்தின் விருப்பமும் கூட. எனவே வடமாகாணசபையில் ஒரு கட்சி மேலாதிக்கத்தை நிறுவ முற்படுவதானது, அதன் இறுதி அர்த்தத்தில், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை இழுத்தடிக்கும் நோக்கில், காரணங்களை தேடியலையும், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசியல் நிகழ்சி நிரலை வலுப்படுத்துவதில் முடிவுறும்.

இறுதியில் நாம், எமது மக்களுக்களித்த வாக்குறுதிகளை, ஆகக் குறைந்தளவு கூட நிவர்த்தி செய்ய முடியாத கையறு நிலைக்கு தள்ளப்படுவோம்.

எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில், எமக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கிலேயே, எமது அமைப்பு மேற்படி பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்திருந்தது. உரியதை உரிய நேரத்தில், சுட்டிக் காட்டும், மக்கள் நலன்சார் அரசியல் வேலைத்திட்டமாகவே, நாம் மேற்படி பகிஸ்கரிப்பை கருதுகிறோம். ஏனெனில் தலைவர்கள் வென்று கொண்டிருப்பதல்ல அரசியல், எங்களை நம்பும் மக்களை வெல்ல வைப்பதே அரசியல். அந்த வகையில், இறுதி அரசியல் தீர்வொன்றுதான், நாம் நேசிக்கும், அந்த மக்களை வெற்றிபெறச் செய்வதற்கான ஒரே வழியாகும். அந்த உயரிய நோக்கில் எமது அமைப்பு தொடர்ந்தும் பணியாற்றும்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் நாம் பங்கேற்காமை எந்த ஒரு சந்தர்ப்பதிலும் வட மாகாண சபையின் வருங்கால செயற்பாடுகளை பாதிக்காது என்பதுடன் வட மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு எமது முழுமையான ஆதரவினையும் கொடுப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com