|
||||
|
மாகாணசபையை நாங்கள் புறக்கணிக்கவில்லை
- சுரேஷ்
வடமாகாணசபையினை எமது ஈ.பி.ஆர்.டில்.எப். கட்சி
புறக்கணிக்கவில்லை.
மாறாக, இன்று நடைபெற்ற
பதவியேற்பு
வைபவத்தினையே
நாங்கள் புறக்கணித்தோம்
என நாடாளுமன்ற
உறுப்பினரும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பேச்சாளருமான
சுரேஷ் பிரேமசந்திரன்
தெரிவித்தார்.
இன்று யாழில்
நடைபெற்ற
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
உறுப்பினர்களின்
மாகாணசபைக்கான
பதவியேற்பு
வைபவத்தில்,
மாகாணசபைக்கு
தெரிவு செய்யப்பட்ட
ஈ.பி.ஆர்.எல்.எப்.
உறுப்பினர்கள் பங்குபற்றாமை
தொடர்பில்
அக்கட்சியின்
தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம்
கேட்டபோதே
அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில்...“கூட்டமைப்பு
என்பதன் பதம் அனைவருக்கும்
நன்கு தெரியும். ஒரு கூட்டமைப்பில்
உள்ளவர்களின்
முடிவுகள்
எப்படி அமையவேண்டும்
என்பது பற்றியும்
யாவரும் அறிவர். அதாவது எதேட்சாதிகார
போக்கில்
தனிப்பட்ட
முடிவினை
எவரும் எடுக்க முடியாது.
கூட்டமைப்பில் அங்கம்
வகிக்கின்ற
அனைத்து கட்சிகளின்
சம்மதத்திற்கிணங்கவே
முடிவுகள்
எட்டப்பட
வேண்டும்
என்பது விதி. ஆனால்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப்
பொறுத்தமட்டில்
மேலாதிக்க
ரீதியான, தனிப்பட்ட
முடிவுகளே
எட்டப்படு
வருகின்றன.
தேர்தல் காலத்தில்
ஒன்றாக பிரசார நடவடிக்கைகளை
மேற்கொண்டுவிட்டு,
தேர்தல் வெற்றியின்
பின்னர் மக்கள் தந்த ஆணையினை
துஸ்பிரயோகம்
செய்வதை எமது கட்சி
ஒருபோதும்
ஏற்றுக்கொள்ளாது.
தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு
என்பது சம்பந்தன்,
சுமந்திரன்,
விக்னேஸ்வரன்
ஆகியோரை மாத்திரம்
உள்ளடக்கிய
கட்சியல்ல
என்பதை கூட்டமைப்பின்
தலைமை உணர மறுக்கிறது.
அடக்கப்பட்டிருந்த மக்களின் அபிலாஷைகளை
தமது வாக்கு
என்னும் ஆயுதத்தினால்
வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இதனால்தான் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு
ஆறில் ஐந்து பெரும்பான்மை
வெற்றிபெற்றிருக்கிறது.
இவ்வெற்றியானது
கூட்டமைப்பில்
இருக்கின்ற
தமிழரசுக்
கட்சியினால்
மாத்திரம்
பெறப்பட்டதல்ல.
அனைத்து கட்சிகளின்
ஒத்துழைப்பும்
இந்த வெற்றிக்கு
வித்திட்டிருக்கின்றன.
ஆனால், அமைச்சர்களின்
தெரிவில்
எமது கோரிக்கைகளுக்கு
செவிசாய்க்காமல்
சுயேட்சையாக
முடிவெடுப்பதென்பது
எவ்வகையில்
நியாயம். நான்கு அமைச்சுக்களையும்
நான்கு கட்சிகளுக்கு
பிரிந்துக்
கொடுங்கள்
என்று நாங்கள் கூட்டமைப்பின்
தலைமையிடம்
கேட்டோம்.
ஆனால், தமிழரசுக்
கட்சிக்கு
2 அமைச்சுக்கள்
வேண்டுமென
சம்பந்தன்
ஒற்றைக் காலில் நின்றார்.
அதுமட்டுமல்லாமல் எமது கட்சிக்கு
வழங்கவேண்டிய
அமைச்சுப்
பதவியை முல்லைத்தீவு
மாவட்டத்தில்
தெரிவுசெய்யப்பட்ட
எமது உறுப்பினருக்கு
வழங்கும்படி
பரிந்துரைத்தோம்.
ஆனால், அதனையும்
கூட்டமைப்பின்
தலைமை நிராகரித்து,
ஐங்கரநேசனை
அமைச்சராக
அறிவித்தார்கள்.
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ - அமைச்சு ஆசைகளைக் காட்டி எதிர்க்கட்சியினரை
வளைத்துப்போடுவதுபோல்,
கூட்டமைப்பின்
தலைமையும்
செயற்பட பார்க்கிறது.
இது, கூட்டமைப்பின்
எதிர்காலத்திற்கு
நல்லதல்ல.
அதுமட்டுமல்லாமல், தேர்தலுக்காக
இரவு பகலாக
கஷ்டப்பட்ட
பலர் வடக்கில்
இருக்கும்போது,
கொழும்பிலுள்ள
சிலரை ஆலோசகர்களாக
உள்வாங்கவும்
முதலமைச்சர்
முடிவுசெய்திருக்கிறார்.
இதனால் வடக்கிலுள்ள
மக்களுக்கு
என்ன நன்மை
கிடைக்கவுள்ளது?
இங்கு கஷ்டப்பட்டவர்கள்
சும்மா இருக்க, கொழும்பிலிருந்து
வருபவர்களுக்கு
முன்னுரிமை
என்றால் இதில் என்ன
நியாயமிருக்கிறது?
இதுபோன்ற பல
தவறுகளை கூட்டமைப்பின்
தலைமை மேற்கொண்டுவருவதை
தட்டிக்கேட்கின்ற
எம்மை குழப்பவாதிகளாக
ஊடகங்களும்
தமிழரசுக்
கட்சி விஸ்வாசிகளும்
சித்திரிப்பது
வேடிக்கையானதே.
நாங்கள் ஒற்றுமையாக
சேர்ந்து
செயலாற்ற
தயாராக இருக்கின்றோம்.
அதற்காகத்தான் மக்கள்
எம்மை ஆதரித்திருக்கிறார்கள்.
ஆனால், அதனை கூட்டமைப்புக்குள்ளிருக்கும்
அனைத்து கட்சிகளும்
ஏற்றுக்கொள்ளும்
விதத்தில்
நடைமுறைப்படுத்த
வேண்டும்.
அதனைவிடுத்து,
ஏதேச்சாதிகார
போக்கில்
தன்னிச்சையான
முடிவுகளை
கூட்டமைப்பின்
தலைமை எடுக்குமேயானால்,
இதன் பின்விளைவுகளுக்கும்
அவர்களே பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும்
வேண்டும்.
எமது கட்சி சார்பாக
தெரிவுசெய்யப்பட்டவர்கள்
நிச்சயமாக
பதவிப்பிரமாணம்
எடுப்பார்கள். அத்தோடு
தங்களாலான
அனைத்து உதவிகளையும்
மக்களுக்குச்
செய்வார்கள்
என்பதையும்
இங்கு நான் சுட்டிக்காட்ட
விரும்புகின்றேன்”
என நாடாளுமன்ற
உறுப்பினர்
சுரேஷ் பிரேமச்சந்திரன்
மேலும் குறிப்பிட்டார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |