Contact us at: sooddram@gmail.com

 

கூட்டமைப்புக்குள் இன்னும் இழுபறி நிலை

சிவாஜிலிங்கம், இரு புளொட் உறுப்பினர்கள் ஜே.பி. முன்னிலையில் சத்தியப்பிரமாணம், சுரேஷ் அணியினர் இன்னும் முடிவு செய்யவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் வட மாகாண சபை உறுப்பி னர்கள் 9 பேரினது சத்தியப் பிரமாணம் தொடர்பில் கூட்டமை ப்பின் கட்சிகளிடையே நிலையான முடிவொன்று எட்டப்படாத நிலையில் நேற்று மேலும் மூன்று பேர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். எம். கே. சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க் காலில் சமாதான நீதவான் ஒருவர் முன்னி லையிலும் புளொட் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோர் யாழ். கந்தரோடையில் அக்கட்சியின் செயலாளர் சமாதான நீதவான் சு. சதானந்தம் முன்னிலையிலும் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். சுரேஷ் அணியினர் இன்னும் சத்தியப் பிரமாணம் எடுக்கவில்லை.

வட மாகாண சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மேலும் 9 பேர் சத்தியப் பிரமாணம் செய்யவிருந்த நிலையில் நேற்றைய தினம் அவர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொள்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த நிகழ்வு நடைபெறாத நிலையில் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று தனியே முள்ளிவாய்க்காலில் சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டுள்ளார்.

தமது கட்சி ஆதரவாளர்களுடன் நேற்று முல்லைத்தீவுக்குச் சென்ற சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் சேதமடைந்த நிலையிலுள்ள மண்டபம் ஒன்றுக்கு முன்பாக ஜே. பி. ஒருவரின் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். வல்வெட்டித்துறை யிலுள்ள மாவட்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி கே. மயிலேறு பெருமாள் சமாதான நீதவானின் முன்னிலையிலேயே சிவாஜிலிங்கம் சத்தியப் பிராணம் செய்து கொண்டுள்ளார்.

வட மாகாண சபை அமைச்சு நியமனம் தொடர்பில் தமிழரசுக்கட்சி மேற்கொண்ட தன்னிச்சையான தீர்மானங்களை எதிர்க்கும் வகையிலேயே முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் முன்னிலையில் நான் சத்தியப் பிரமாணம் எடுக்கவில்லை. மக்கள் எனக்கு வழங்கிய ஆணையை மதித்தே நான் முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டேன். வட மாகாண சபையை நான் எதிர்க்கவில்லைஎனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைக்கு தமிழத் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன்போது ஒன்பது உறுப்பினர்கள் அதனைப் புறக்கணித்ததுடன் அவர்கள் நேற்றைய தினம் முள்ளிவாய்க்காலில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளிவந்தன.

இதனையடுத்து மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலையீட்டையடுத்து நேற்றைய சத்தியப் பிரமாண நிகழ்வு நிறுத்தப்பட்டு பிறிதொரு தினத்தில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையிலேயே நேற்று மூன்று உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

நேற்யை தினமும் சத்தியப் பிரமாணம் சம்பந்தமாக கருத்துத் தேரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஏகமனதான ஒரு முடிவை தெரிவிக்கவில்லை. சிலர் இது ஒரு முக்கிய விடயமே அல்ல எனவும் முதலமைச்சர் முன்னிலையில்தான் சத்தியப் பிரமாணம் எடுப்பதென்பதில்லை, யாராவது ஒரு சமாதான நீதவான் முன்னிலையில் அவ்வாறு சத்தியப்பிரமாணம் எடுக்கலாம். எதிர்வரும் 25ம் திகதிவரை அதற்கான கால அவகாசமும் உள்ளது எனவும் தெரிவித்தனர்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி. இது பற்றிச் கூறுகையில்:- “சத்தியப் பிரமாணம் எடுப்பதென்பது ஒரு பெரிய வேலையல்ல. அது ஒரு பெரியஇசூவுமல்ல. ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்தவும் தேவையில்லை. எமது உறுப்பினர்கள் யாராவது ஒரு ஜே. பி. முன்னிலையில் சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். இது அலட்டிக்கொள்ள வேண்டிய விடயமொன்றல்லஎனவும் தெரிவித்தார்.

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இதுபற்றி தெரிவிக்கையில்: “நேற்று நடைபெறவிருந்த சத்தியப்பிரமாணம் நிகழ்வு ஒத்திப்போடப்பட்டுள்ளது என அறிந்தேன். ஏனைய விபரங்களை அந்தந்த கட்சிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்என இரண்டு வார்த்தையில் முடித்துக் கொண்டார்.

எது எவ்வாறாயினும் சத்தியப் பிரமானம் செய்வதில் எங்கு? யார் முன்னிலையில்? எப்போது, எடுத்துக் கொள்வது என்பதில் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளிடையே ஏகமனதான தீர்மானமொன்றில்லை என்பது மட்டும் தெளிவாகிறது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com