Contact us at: sooddram@gmail.com

 

சிரியாவின் துருக்கி எல்லை நகரில் ஐ.எஸ். நுழைவு

அமெரிக்க வான் தாக்குதல்கள் முற்றுகையை தளர்த்துவதில் தோல்வி

துருக்கி எல்லையில் இருக்கும் சிரியாவின் கொபானி; நகருக்குள் நுழைந்திருக்கும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) படையினர் மூன்று மாவட்டங்களை கைப்பற்றியுள்ளனர். சிரிய குர்திஷ் போராளிகளுடன் இடம்பெற்ற வீதிக்கு வீதி மோதலுக்கு பின்னரே ஐ.எஸ். முன்னேற்றம் கண்டுள்ளது. இதில் கடந்த திங்கட்கிழமை கொபானி நகரின் கிழக்கு பகுதியை ஆக்கிரமித்த ஐ.எஸ். போராளிகள் அங்கிருக் கும் கட்டடங்கள் மற்றும் மலைகளில் தனது கறுப்பு கொடியை ஏற்றினர். துருக்கி எல்லையில் இருந்து சுமார் 2,000 சிவிலியன் கள் வெளியேறி இருப்பதாக உள்@ர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கொபானி நகர் கடந்த மூன்று வாரங்களாக ஐ.எஸ். முற்றுகையில் இருந்தது. இந்நிலையில் அந்நகருக்குள் ஊடுருவி இருப்பதன் மூலம் ஐ.எஸ். போராளிகளுக்கு துருக்கி-சிரியவின் நீண்ட எல்லையை தமது கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவர வாய்ப்பு எற்பட்டுள்ளது.

ஐ.எஸ். முன்னேற்றத்தால் குர்திஷ்களை பிரதானமா கக் கொண்ட 160,000க்கும் அதிகமானவர்கள் நகரை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். முன்னதாக கொபானி நகரின் உள்ளுர் அதிகாரி ஒருவரான இத்ரிஸ் நஸ்ஸான் என்பவர் பி.பி.சிக்கு அளித்த தகவலில் "நகரம் விரை வில் வீழ்ந்துவிடும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதில் கொபானி நகருக்கு மேலால் இருக்கும் யுத்த ரீதியில் முக்கியம் வாய்ந்த மிஸ்டனூர் மலைப் பகுதியை ஐ.எஸ். கைப்பற்றியிருப்பதாக குறிப் பிட்ட அந்த அதிகாரி, அங்கிருந்து தொடர்ந்து n'ல் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் கொபானி நகர் தற்போது மூன்று முனைகளால் முற்று கையிடப்பட்டிருப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்நிலையில் அமெரிக்கா தலைமையி லான கூட்டணி நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து மேலும் வான் தாக்குதல்களை நடத்தியுள் ளது. எனினும் அதனது இலக்குகள் இன் னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறா யினும் இந்த வான்தாக்குதல்கள் மூலம் ஐ.எஸ். முற்றுகையை தளர்த்துவதில் அமெ ரிக்கா தலைமையிலான கூட்டணி தோல்வி கண்டு வருகிறது.

இந்த மோதல் குறித்து துருக்கி எல்லை யில் இருந்து அவதானித்து வரும் செய்தியா ளர்கள் கொபானி நகரில் இருந்து பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாகவும் அங்கி ருந்து கறும்புகை வெளிவந்துகொண்டிருப் பது காணக்கூடியதாக உள்ளதாகவும் விப ரித்துள்ளனர்.

மறுபுறத்தில் ஐ.எஸ். போராளிகள் தென் மேற்கு பகுதியால் திங்கள் இரவு நகருக்குள் ஊடுருவி இருப்பதாக செய்திகள் குறிப்பிட்டுள்ளன. ஸ்னைப்பர் துப்பாக்கிச்சூடு உட்பட மோதல்கள் இடம்பெற்று வருவ தாக சிரிய உள்நாட்டு யுத்தம் குறித்து கண்காணிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐ.எஸ். நகரத்தை ஆக்கிரமித்தால் பாரிய பேரழிவை சந்திக்க வேண்டி வரும் என்று குர்திஷ் பிராந்திய அர சின் பிரதிநிதியான அமெரிக்காவில் இருக்கும் கர்வான் செபரி என்பவர் எச்சரித்துள்ளார். "கொபானியில் போரா டும் குர்திஷ்களுக்கு இராணுவ உதவி மற்றும் சர்வதேச உதவிகள் கிடைக்காத பட்சத்தில் இது தொடர்ந்தால் நகரம் ஐ.எஸ். இடம் வீழும் வாய்ப்பு இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

கொபானி நகர மக்களுக்காக துருக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். "துருக்கி தனது தேசிய பாதுகாப்பு பற்றியே அதிக கவனம் செலுத்துகிறது என்று நான் நினைக்கிறேன். இதற்கு முன்னேறி வரும் ஐ.எஸ். குழுவை முறியடிக்க குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி உதவுவது முக்கிய மானதாகும்" என்றார்.

சிரிய குர்திஷ்களின் பிரதிநிதியான குர்திஷ் ஜனநாயக ஒன்றிய கட்சியின் இணை தலைவர் அஸ்யா அப்துல்லாஹ், நகரில் தற்போது தொடரும் மோதல் குறித்து பி.சி.சி. தொலைக்காட்சிக்கான பேட்டியின்போது விபரித்திருந் தார். அதில் அவர், "நகரில் தொடர்ந்து ஆயிரக்கணக் கான பொதுமக்கள் தங்கியுள்ளனர். அவர்களது முன் னேற்றத்தை தற்போது தடுக்காவிட்டால் அங்கு பாரிய படுகொலை ஒன்று நிகழும்.

யுத்த டாங்கிகளைக் கொண்டு அவர்கள் நகரை அனைத்து பக்கங்களாலும் சூழ்ந்துவிட்டார்கள். கனரக ஆயுதங்களை கொண்டு அவர்கள் நகரின் மீது கடுமை யாக தாக்குதல் நடத்துகிறார்கள். தம்மிடம் இருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு குர்திஷ் போராளிகள் முடியுமானவரை எதிர்த்து போராடுகிறார் கள்" என்றார்.

கொபானி நகரில் இருக்கும் அனைத்து பொதுமக்க ளுக்கும் வெளியேறும்படி உத்தரவிட்டிருப்பதாக குறிப் பிட்டிருக்கும் குறித்த நகர குர்திஷ்களின் பேச்சாளர் ஒருவரான முஸ்தபா பெலி, திங்களன்று 2,000 சிவிலி யன்கள் வெளியேற்றப்பட்டதாக ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு விபரித்தார். எனினும் கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா தலைமை யிலான யுத்த விமானங்கள் நடத்திய வான் தாக்குதல் களில் கொபானி நாகரின் தென் புறமாக இருக்கும் ஐ.எஸ். போராளிகளின் இரு நிலைகள் அழிக்கப்பட்ட தாக அமெரிக்காவின் தலைமை கட்டளையகம் உறுதி செய்தது.

"ஐ.எஸ். இடம் கனரக ஆயுதங்கள் மற்றும் யுத்த டாங்கிகள் இருப்பதாலேயே எமது எதிர்ப்பு போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளது. எனவே மேலும் வான் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்" என்று முஸ்தபா பெலி குறிப்பிட்டுள்ளார்.

கொபானி நகரில் இரந்து புகைமூட்ட வெளிவருவதும் திடீரெ வெடிப்புச் சத்தங்கள் கேட்பதுமாக உள்ளது. துருக்கி எல்லைக்கு காயத்துடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக துருக்கி அம்புலஸ் வண்டிகள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன.

இந்த மோதலையொட்;டி துருக்கி நாட்டு குர்திஷ்கள் மற்றும் தஞ்மடைந்திருக்கும் அகதிகள் எல்லையில் துருக்கி படையினருடன் கடந்த இரு தினங்களாக மோத லில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். மீது துருக்கி எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து இவர்கள் கோபம டைந்துள்ளனர். அதோபோன்று ஐ.எஸ். க்கு எதிராக போராட குர்திஷ்கள் எல்லை கடந்து சிரியா செல்வ தையும் துருக்கி படையினர் தடுத்து வருகின்றனர்.

கொபானி நகர் ஐ.எஸ். இடம் வீழ்வதை தடுப்பதாக துருக்கி கடந்த வாரம் உறுதியளித்திருந்தது. ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். க்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கும் துருக்கி பாராளுமன்றத்தில் கடந்த வாரம் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. எனினும் இது குறித்து துருக்கி எந்த நடவடிக்கையையும் முன்னெடுக் கவில்லை.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com