|
||||
|
உத்தேச
அரசியலமைப்பு
திருத்தம்
தமிழ்க்கட்சிகளுடனும்
பேச்சு
உத்தேச அரசியலமைப்பு
திருத்தத்தின்
மூலம் ஜனநாயகத்திற்கோ
மக்களின்
இறைமைக்கோ
எதுவித பாதிப்பும்
ஏற்படாது. எதிர்க் கட்சி மற்றும் ஐ.ம.சு.மு. வில் அங்கம்
வகிக்கும்
கூட்டுக்
கட்சிகளுடன்
கலந்தாலோசித்த
பின்னரே இந்தத் திருத்தங்கள்
கொண்டுவரப்படுகின்றன.
இதற்கு ஐ.தே.க. தனது ஆதரவை
வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சி தலைவர்கள்
கேட்டுக்கொண்டனர்.
அரசியலமைப்பில் கட்டமைப்பு
ரீதியான திருத்தங்கள்
எதிர்காலத்தில்
முன்னெடுக்கப்படும்.
இது குறித்து
தமிழ் தேசிய கூட்டமைப்பு
மற்றும் கட்சிகளுடன்
பேச்சு நடத்தப்படும்
எனவும் அவர்கள் கூறினர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சி ஏற்பாடு செய்திருந்த
ஊடகவியலாளர்
மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில்
நடைபெற்றது. ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சி செயலாளர் அமைச்சர் மைத்திரிபால
சிறிசேன, ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சி சிரேஷ்ட உப தலைவர்
அமைச்சர்
நிமல் சிறிபால டி சில்வா,
ஐ.ம.சு.முன்னணி
செயலாளர்
அமைச்சர்
சுசில் பிரேம் ஜெயந்த் ஆகியோர் இங்கு கருத்துத்
தெரிவித்தனர்.
1978 ஆம் ஆண்டு யாப்பினூடாக
கடந்த 32 வருட காலமாக
பெறப்பட்ட
அனுபவத்தின்
அடிப்படையில்
புதிய யாப்புத் திருத்தம்
மேற்கொள்ளப்படுகிறது. எதிர்கால அபிவிருத்திப்
பணிகளுக்கு
தேவையானவாறே
இதில் திருத்தம்
செய்யப்படுகிறது.
அபிவிருத்திப் பணிகளுக்குள்ள
தடைகள் இதனூடாக நீக்கப்பட்டு
அரசியல் ஸ்திர நிலையை
ஏற்படுத்த
நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது.
யாப்புத் திருத்தம்
செய்தால்
அது அரசாங்கத்தின்
முடிவாக அமையும் என ஐ.தே.க.
ஊடகப் பேச்சாளர்
கூறியுள்ளார். அதலபாதாளத்தில் விழுந்துள்ள
நிலையில்
ஐ.தே.க இவ்வாறு
கூறுவது நகைப்புக்குரியதாகும்.
உத்தேச அரசியலமைப்பு
திருத்தத்திற்கு
ஐ.தே.க ஆதரவு
வழங்க வேண்டும் என அமைச்சர்
மைத்திரிபால
சிறிசேன கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் சுசில்
பிரேம் ஜெயந்த் கூறியதாவது,
உத்தேச யாப்பு திருத்தங்களின்
மூலம் ஜனநாயகத்திற்கோ
மக்களின்
இறைமைக்கோ
எதுவித பாதிப்பும்
ஏற்படாது. யாப்பு திருத்தம்
குறித்து
ஐ.தே.க வுடன்
பல சுற்றுப்
பேச்சுக்கள்
நடத்தப்பட்டன.
இந்தத் திருத்தங்கள்
எழுத்து மூலம் ஐ. தே.கவுக்கு
அறிவிக்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன்
பூர்வாங்க
பேச்சுகள்
நடத்தப்பட்டன.
கட்சித் தலைவர்
நாட்டில்
இல்லாததால்
அவருடன் பேச்சு நடத்தப்படவில்லை.
எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள
செனட்சபை
போன்ற விடயங்கள்
குறித்து
தமிழ் தேசிய கூட்டமைப்புடன்
ஆராயப்படும்.
ஐ.ம.சு. முன்னணியில் உள்ள கூட்டுக் கட்சிகளுடனும்
இது குறித்து
பேசப்பட்டது.
உத்தேச யாப்புத்
திருத்தம்
அமைச்சரவைக்கு
சமர்ப்பிக்கப்பட்டபோது
சமசமாஜக்
கட்சி மற்றும் கம்யூனிஸ்ட்
கட்சியைச்
சேர்ந்த அமைச்சர்களும்
அங்கு சமுகம ளித்திருந்தனர்.
ஏகமனதாகவே யாப்பு
திருத்தத்திற்கு
அனுமதி வழங்கப்பட்டது.
ஜனாதிபதியின் பதவிக்காலம்
புதிய திருத்தம்
மூலம் நீடிக்கப்படவில்லை. பதவி வகிக்கக்கூடிய
வரையறையே
நீக்கப்பட்
டுள்ளது.
ஒருவரை மூன்றாவது
தடவையோ 4 ஆவது தடவையோ
ஜனாதிபதியாக
தெரிவு செய்வது குறித்து மக்களே தீர்மானிப்பர்.
1978 ஆம் ஆண்டு யாப்பில்
இதுவரை 17 திருத்தங்கள்
செய்யப்பட்டுள்ளன. 18 ஆவது திருத்தமே
தற்பொழுது
முன்னெ டுக்கப்பட
உள்ளது. அரசியலமைப்பை முழுமையாக
திருத்த நீண்டகாலம்
பிடிக்கும்.
அதில் கட்டமைப்பு
ரீதியான மாற்றங்கள்
எதிர்காலத்தில்
மேற்கொள்
ளப்படும்
என்றார்.
அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா
கூறியதாவது,
மக்களின்
இறைமையை விரிவாக்கும்
வகையிலேயே
யாப்பில்
திருத்தம்
செய்யப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதியாக
2 தடவைகளே பதவி வகிக்கலாம்
என்ற சரத்து
நீக்கப்பட்டுள்ளபோதும்
ஒருவரை மூன்றாவது
தடவையாக நியமிக்கும்
உரிமை மக்களுக்கே
உள்ளது.
கட்சியை பலப்படுத்தி
யுத்தத்திற்கு
முடிவு கட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை
2 தடவையை விட கூடுதலாக
நியமிக்க
வேண்டும்
என்பதே ஸ்ரீலங்கா
சுதந்திரக்
கட்சியின்
நிலைப்பாடாகும்.
நிறைவேற்று அதிகாரம்
கொண்ட பிரதமர் முறை போன்ற
மாற்று யோச னைகள்
குறித்தும்
கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் நிறைவேற்று
பிரதமர் முறை உலகில்
எங்கும் வெற்றியளிக்கவில்லை.
யதார்த்த ரீதியாக
அமுல்படுத்தக்
கூடிய திருத் தங்களே முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட் டுத்
தலைவரை தெரிவு செய்யும் உரிமை வடக்கு,
கிழக்கு மக்களுக்கும்
வழங்கப்பட
வேண் டும்
என்பதால்
நிறைவேற்று
அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி முறையை தமிழ் தேசிய
கூட்டமைப்பு
விரும்புகிறது
என்றார்.
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |