Contact us at: sooddram@gmail.com

 

எமது சுகாதார நலன்களுகேற்ப விதைகளை நாம் உற்பத்தி செய்யவேண்டும்.

விவசாயத்தில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கை கட்டியெழுப்பப்படும்

- ஜனாதிபதி

கப்பல் வரும்வரை காத்தி ராமல் விவசாய உற்பத்தியில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கையைக் கட்டியெழுப்ப அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வெற்றிகொள்ள முடியாது என்ற பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போல், நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்றி அபிவிருத்தியும் சுபீட்சமும் நிறைந்த நாடாக இலங்கையை மாற்ற அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

படஅத்த விவசாயப் பூங்காவிற்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் பெயரைச் சூட்டும் வைபவமும் விவசாய வாரம்- 2010 ற்கான ஆரம்ப வைபவமும் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அம்பாந்தோட்டை படஅத்த பூங்காவில் நடை பெற்றது. இந்நிகழ்வில் தேசிய விவசாய வாரம் –2010 ஞாபகார்த்த முத்திரை வெளியிடப் பட்டதுடன் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதியமைச்சர்கள், மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார, நாமல் ராஜபக்ஷ எம்.பி. உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது; 30 வருட காலமாக வெற்றிகொள்ள முடியாது எனக் கூறிய பயங்கரவாதத்தை வெற்றிகொண்டு நாம் நாட்டை அபிவிருத்தியிலும் சுபீட்சத்திலும் கட்டியெழுப்பியுள்ளோம்.

பொருளாதாரத்தில் தன்னிறைவு காணும் நாடாக இலங்கையை மாற்றும் பயணத்தின் முதற்படியை நாம் ஆரம்பித்துள்ளோம். சில வருடங்களுக்கு முன்னர் சமல் ராஜபக்ஷ விவசாய அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில் நான் இப்பூங்காவிற்கு விஜயம் செய்து இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தேன். எமது புதிய பரம்பரை விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்துகொள்ளவும் நாட்டின் இயற்கை வளம் பற்றி அறிந்துகொள்ளவும் இப்பூங்கா உறுதுணையாகிறது.

தன்னிறைவு காணும் பொருளாதாரம் எமக்கு மிகவும் அவசியம். எமக்குப் பல்வேறு தடைகள் உள்ளன. அரச நிறு வனங்கள் தொடர்பில் பல்வேறு கண்ணோ ட்டங்கள் நிலவுகின்றன. எனினும் நாம் எமது விவசாய உற்பத்தியில் கூடிய அவதானம் செலுத்தவேண்யுள்ளது. எமக்கான பயிர் விதைகளை நாமே உற்பத்தி செய்யும் நிலை உருவாக வேண்டும். தனியார் துறையினரால் மட்டுமே முடியும், எம்மிடம் நிதி இல்லை என நாம் எந்நாளும் கூறிக் கொண்டிருக்க முடியாது.

யுத்தம் செய்வதற்கும் நிதி இல்லை யென்றே ஒரு காலத்தில் காரணம் கூறப்பட்டது. ஆனால் புலிகளுக்கும் திறைசேரியிலிருந்து நிதி வழங்கியதையும் குறிப்பிடவேண்டும்.

எமது சுகாதார நலன்களுகேற்ப விதைகளை நாம் உற்பத்தி செய்யவேண்டும். அதிக விளைச்சல் பெரும் இலாபம்என்ற நோக்கில் நாம் விசமூட்டப்பட்ட விதைக ளை உபயோகிப்பது நிறுத்தப்பட வேண்டும்.

அம்பாந்தோட்டை மாவட்டம் தற்போது பெரும் முன்னேற்றம் கண்டு வருகிறது. ஏனைய மாவட்டங்களுக்கு முன்னுதாரண மாகத் திகழ்வதுடன் இங்கு இடம்பெறும் முன்னேற்றகரமான திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்க ஏனைய மாவட்டத்தினர் முன் வருகின்றனர். விவசாயத்துறையை மேம்படுத்துவதில் அரசாங்கம் தொடர்ந்தும் பல காத்திரமான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

விவசாயிகளுக்கு உரமானியம், ஊக்குவிப்புக் கொடுப்பனவுகளையும் நாம் வழங்கி வருகிறோம். 9000 ரூபாவிற்கு உரம் விற்கும்போது அதனை நாம் மானிய விலையில் 350 ரூபாவிற்கு வழங்கியதை அரசியல்வாதிகள் மறந்து போகலாம்.

ஆனால் இந்த நாட்டு விவசாயப் பெருமக்கள் என்றும் அதனை நினைவில் கொள்வர் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வின் போது விவசாயத் துறையை முன்னேற்றும் மூன்று வருட கருத் திட்டம் தொடர்பான ஆவணங்கள் விவசாய அபிவிருத்தி அமைச்சின் செயலாளரால் ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டது.

விவசாய வாரம்-2010 இனை நினைவுகூரும் வகையில் உழவுயந்திரங்கள் ஜனாதிபதியினால் விவசாயிகளுக்குக் கையளிக்கப்பட்டன.

அத்துடன் படஅத்த பூங்காவின் வாயிலில் அமைக்கப்பட்டுள்ள விதை விற்பனை நிலையத்தையும் ஜனாதிபதி நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

படஅத்த விவசாய பூங்காவுக்கு சமல் ராஜபக்ஷ விவசாய தொழில்நுட்ப சுற்றுலா பூங்கா என்ற பெயரையும் ஜனாதிபதி சூட்டியமை குறிப்பிடத்தக்கது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com