Contact us at: sooddram@gmail.com

 

நியூயார்க் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம்

ஐக்கிய நாடுகள் சபையில்  ஈரான் அதிபர் அகமதிநிஜாத்

நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.

ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கி்ன்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீ்ண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.

அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம்.

இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது. தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது என்றார். அகமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய அகமதிநிஜாத், இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். அணு ஆராய்ச்சி விஷயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும். அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும். சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com