|
||||
|
லிபியாவின் அயல் நாடான
நைகரில் ஆயுதம் தாங்கிய கடாபி ஆதரவுப்படை
லிபியாவின் முஅம்மர் கடாபி ஆதரவு
இராணுவம்
அண்டைய நாடான நைகரின்
பாலைவன எல்லையை கடந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கனரக ஆயுதங்களை
தாங்கி 200 முதல் 250 வாகனங்கள்
வரை நைகர்
எல்லையை தாண்டியதாக
அந்நாட்டு
இராணுவம்
தெரிவித்துள்ளது.
இந்த தகவலை பிரான்ஸ் இராணுவமும்
உறுதி செய்துள்ளது.
அத்துடன் இந்த இராணுவத்தில்
சக்திவாய்ந்த
தூரப் பழங்குடியின
வீரர்கள்
இடம்பெற்றுள்ளதாக
செய்தி வெளியாகியுள்ளது.
இந்த இராணுவத்திற்கு
தூரப் பழங்குடியின
தலைவர் ரிஸ்ல் அக்பவுலா தலைமை வகிப்பதாகவும்
நேற்றைய தினம் இவர்கள்
நைகரின் அகடாஸ் நகரை எட்டியதாகவும்
நைகர் இராணுவம் தெரிவித்துள்ளது.
பிரமாண்ட இராணுவ அணிவகுப்பொன்று
நேற்று அகடாஸ் நகரை தாண்டி
தலைநகர் நோக்கி சென்றதாக அங்குள்ள தனியார் பத்திரிகை
நிறுவன உரிமையாளர்
ஒருவர் ஏ. பி.
செய்திச் சேவைக்கு
தெரிவித்துள்ளார்.
‘அகடாஸ்
இன்போ’ பத்திரிகையின்
உரிமையாளர்
அப்துலே ஹரூனா கூறும்
போது, ஆயுதம்
தாங்கிய வாகன அணிவகுப்பொன்று
கடந்த திங்கட்கிழமை
அகடாஸ் நகரை எட்டினர்.
அவர்கள் நேற்று
அதிகாலை தலைநகர் நியாமியை நோக்கி பயணித்தனர்
என்றார்.
எனினும் இந்த இராணுவத்தினருடன்
கடாபியோ, அவரது குடும்ப
உறுப்பினர்களோ
அல்லது அவரது அரசின்
முக்கிய நபர்களோ இருப்பதற்கான
தகவல்கள்
எதுவும் வெளியாகவில்லை. அத்துடன் இந்த இராணுவம் குறித்து பல முரண்பட்ட
தகவல்கள்
வெளியாகியுள்ளன.
எனினும் இராணுவத்தினருடன்
கடாபி மற்றும் அவரது மகன்
சைப் அல்
இஸ்லாம் புர்கினா போசோ பகுதியில்
வைத்து இணைந்து கொள்ள வாய்ப்பு
இருப்பதாக
பிரான்ஸ்
இராணுவம்
சந்தேகம்
தெரிவித்துள்ளது.
இவர்கள் வேறு நாடொன்றில்
தஞ்சம் புக வாய்ப்பு
இருப்பதாகவும்
அது கூறியுள்ளது.
இதேவேளை, முஅம்மர் கடாபி தொடர்ந்து
லிபியாவில்
இருப்பதாக
கடாபி அரசு பேச்சாளர்
மூஸா இப்ராஹிம்
தெரிவிதுள்ளார். சிரியாவில்
இருந்து இயங்கும் “அராய்” தொலைக்காட்சிக்கு
மூஸா இப்ராஹிம்
கூறும்போது,
முஅம்மர்
கடாபி நல்ல தேக
ஆரோக்கியத்துடன்
உற்சாகமாக
லிபியாவுக்குள்ளேயே
இருக்கிறார்.
அவர் இருக்கும்
இடத்தை அந்த முரண்பட்ட
குழு அடையவில்லை
என்றார்.
இதற்கிடையில்
“என்னை சட்ட விரோதமாகக்
கடத்திச்
சென்று சித்திரவதை
செய்ததற்காக
பிரிட்டன்
மற்றும் அமெரிக்க நாடுகள் மன்னிப்பு
கேட்க வேண்டும்” என கிளர்ச்சியாளர்களின்
இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
விபிய தலைநகர்
திரிபோலியில்
உள்ள கடாபியின்
குடியிருப்பு
வளாகமான “பாப் அல்
அசீசியாவில்”
உளவுத்துறை
அலுவலகத்தில்
சமீபத்தில்
கண்டெடுக்கப்பட்ட
ரகசிய உளவு ஆவணங்கள்
மூலம், கடாபியின்
அரசுக்கும்,
அமெரிக்க
புலனாய்வுப்
பிரிவான சி. ஐ. ஏ. மற்றும்
பிரிட்டனின்
உளவுத்துறையான
எம். ஐ. 6 ஆகியவற்றுக்கிடையில்
ரகசிய தொடர்புகள்
இருந்தது
வெளியானது.
லிபியாவில் தடை
செய்யப்பட்ட
பயங்கரவாத
அமைப்பான
“லிபிய இஸ்லாமிய போராட்டக்
குழு”வில்
இருந்தவரும்,
தற்போதைய
லிபியா கிளர்ச்சியாளர்
இராணுவப்
பிரிவில்
தளபதியாகப்
பணியாற்றுபவருமான
அப்துல் ஹக்கீம் பெல்ஹாஜ்,
2004 இல் பாங்கொக்கில்
இருந்த தன்னை சி.
ஐ. ஏ. மற்றும்
எம். ஐ. 6 உளவாளிகள்
லிபியாவுக்கு
கடத்திச்
சென்றதாகவும்,
தன்னை கடுமையாகச்
சித்திரவதைப்படுத்தியதாகவும்
தெரிவித்திருந்தார்.
இது குறித்து பெல்ஹாஜ் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கும் என் குடும்பத்துக்கும்
இழைக்கப்பட்ட
கொடுமைகள்
சட்ட விரோதமானவை. இந்தக் கொடுமைகளுக்காக,
இருஉளவு நிறுவனங்களும்
என்னிடம்
மன்னிப்புக்
கேட்க வேண்டும்” என்றார். பெல்ஹாஜின் இந்தப்
பேட்டி குறித்து, பிரிட்டன்
வெளியுறவு
அமைச்சகம்
கருத்து கூற மறுத்து
விட்டது.
இந் நிலையில்
கடாபி ஆதரவுப் படை சரணடைவதற்கு
வழங்கப்பட்ட
காலக்கெடு
முடிவடையும்வரை
அவர்களுடனான
பேச்சுவார்த்தை
தொடரும் என கிளர்ச்சியாளர்களின்
தேசிய மாற்ற கெளன்ஸில்
தலைவர் முஸ்தபா அப்துல் ஜலில் தெரிவித்துள்ளார்.
கடாபி ஆதரவுப்
படையினர்
சரணடைவதற்கு
வரும் சனிக்கிழமை
வரை அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது.
எனினும் லிபியாவின்
முக்கிய நான்கு நகர்கள் கடாபி ஆதரவுப்
படை வசமே
தொடர்ந்தும்
நீடிக்கிறது. முஅம்மர் கடாபியின்
பிறந்தகமான
சிர்த், ஜப்ரா, சபா
மற்றும் பானி வலீத்
பகுதிகள்
கடாபி ஆதரவாளர்கள்
கட்டுப்பாட்டிலுள்ளது.
எனினும் மேற்படி
பகுதிகளை
சுற்றி கிளர்ச்சியாளர்கள்
தரித்து நிற்கின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |