Contact us at: sooddram@gmail.com

 

மிகவும் பலம் பொருந்திய இந்திய உளவுத்துறை புலிகளுக்குள் இருந்தது! - ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர்

 

இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது. அதனால் பொதுமக்களின் உயிரிழப்புக்களை அது கண்டுகொள்ளவில்லை என இலங்கைக்கான ஐ.நாவின் முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார். பிபிசி சிங்கள சேவையான சந்தேசியவிற்கு நேற்று அளித்த செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். போரின்போது முற்றுகையினால் ஓரிடத்தில் குவிந்த பொதுமக்களின் அவலங்களைப் போக்க ஐ.நா இன்னும் அதிகம் செய்திருக்க வேண்டும் என்று நிபுணர்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

ஆனால் ஐ.நா அதனை ஏன் செய்யவில்லை என்று எழுந்துள்ள கேள்விக்கு, இறுதிக் கட்டப் போர்க்காலத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக முறையான மீளாய்வு ஒன்றைச் செய்வதன் மூலமே இதற்கான பதிலைப் பெறமுடியும் என்று கோர்டன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

 

அப்போது ஐ.நா பணியகம் ஆட்சேதங்கள் பற்றிய கணக்கெடுப்புகளை மேற்கொள்ள முயற்சித்தது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்த போது இலங்கை அரசாங்கம் எதிர்த்தது. ஆட்சேதங்கள் எவ்வளவு, அது எப்படிக் கணக்கிடப்பட்டது என்பன போன்ற கேள்விகளை எழுப்பியது. இது எமது கவனத்தைத் திசைதிருப்பும் நடவடிக்கையாகவே இருந்தது. தம்மால் கனரக ஆயதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும், பொதுமக்களின் இரத்தம் சிந்தப்படவில்லை என்றும் இலங்கை அரசாங்கம் வாதிட்டது.

 

ஆனால் அதற்கு முரணான வகையில் ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை உள்ளது. பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறும் அந்த அறிக்கையில் அரசபடைகளின் எறிகணைத் தாக்குதல்களிலேயே அதிகளவு இழப்புகள் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் கனரக ஆயுதங்களை அரசபடைகள் பயன்படுத்துகின்றன என்ற பலத்த சந்தேகம் ஐ.நாவுக்கு அப்போது இருந்தது. இறுதியில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற வாக்குறுதியை உலகத் தலைவர்களுக்கு இலங்கை அரசு வழங்கியது. ஐ.நா பொதுச் செயலாளருக்கும் அந்த வாக்குறுதியை அளித்தது.

 

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான இறுதி 5 மாதங்களில் பலமுறை மீண்டும் இந்த வாக்குறுதியை அளித்த போதும் அவையெல்லாம் வெறும் பொய்களாகவே இருந்தன. ஆனால் கனரக ஆயுதங்களைத் தொடர்ந்தும் இலங்கை அரசு பயன்படுத்தி வந்தது என்பது இறுதியில் தெளிவாகத் தெரியவந்தது. பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்க ஐ.நா இன்னும் கடுமையான அழுத்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. இதை நான் தனிப்பட்ட முறையில் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

 

ஐ.நாவைப் பொறுத்த வரையில் இலங்கை விவகாரம் தொடர்பாக அதன் உறுப்பு நாடுகளிடத்தில் ஒருமித்த கருத்து இருக்கவில்லை என்றே கூற வேண்டும். ஐ.நா பாதுகாப்புச் சபைக்குள்ளேயும் எதுவும் நடக்கவில்லை. மனிதஉரிமைகள் பேரவைக்குள்ளேயும் எந்தவொரு முயற்சிகளும் இடம்பெற்றதாக எமக்குத் தென்படவில்லை. ஐ.நா தலைமைச் செயலகத்தில் என்ன நடக்கிறது என்பது கூட வெறும் ஊகத்துக்குரியவையாகவே இருந்தன. ஐ.நா என்பது ஒர் இராணுவ நோக்கத்துக்கான அணியோ அல்லது அரசியல் ரீதியான அமைப்போ அல்லது கண்காணிப்புப் பொறிமுறையோ அல்ல.

 

இலங்கையைப் பொறுத்தவரையில் ஐ.நாவுக்கு அபிவிருத்தி மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்குரிய பங்கே உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அத்துடன் ஐ.நாவிடம் இருந்து பெரும் தலையீடுகள் எதுவும் ஏற்படுவதை அந்தக் காலகட்டத்தில் இலங்கை அரசு விரும்பவில்லை. எனவே இறுக்கமானதும், அரசாங்கத்தினது கடும் அழுத்தங்களுக்கும் மத்தியில் இருந்து கொண்டு தான் ஐ.நாவின் மனிதநேய நிறுவனங்கள் செயற்பட வேண்டியிருந்தது.

 

இலங்கையில் இடம்பெற்ற போரில் பல்வேறு நாடுகள் பங்குபற்றியிருந்தன. அரசுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைப்புகளை வழங்கிய நாடுகள் மற்றும் உதவுவதில் எல்லா வகையிலும் முன்னின்ற நாடுகள், குறிப்பாக இந்தியா என்று நீண்ட பட்டியலே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை சுதந்திர காலம் முதல் இலங்கையுடன் உறவுமுறை உள்ளது. 21ம் நூற்றாண்டில் இலங்கையுடனான செல்வாக்கை இந்தியா இழந்து வருகிறது என்றே கூற வேண்டும்.

 

இந்த விடயத்தில் சீனா மிக வேகமாக இலங்கையுடன் நெருங்கி வருகிறது. இந்த விடயத்தில் இந்தியா சற்றுக் குழப்பிப் போயுள்ளது. அதனால் இலங்கைக்கு உதவிசெய்து கொண்டு வருகிறது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இலங்கைக்கு பல்வேறு புலனாய்வு உதவிகளை வழங்கியுள்ளது. போர் வலயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றி விபரங்களும் அதற்குத் தெரிந்திருந்தது. இந்தியாவுக்கு பாதுகாப்பு வலயங்களுக்குள்ளேயும் புலனாய்வு வசதிகள் இருந்தன என்று தான் நான் நம்புகிறேன்.

 

அங்கிருந்த இழப்புகள் பற்றி இந்தியாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதன் விகிதாசாரங்கள் குறித்து அது கணித்துக் கொண்டிருந்தது. இந்திய அரசாங்க மட்டத்தில் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடு இருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான மத்தியஸ்த நடவடிக்கைளில் நான் ஈடுபட்டிருக்கவில்லை. அந்தக்கட்டத்தில் உயர்மட்டம் முதல் அடிமட்டம் வரை பலதரப்பினருக்கிடையில் பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன.

 

கடைசி வாரத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் பௌதிக ரீதியில் பிரிந்து காணப்பட்டது. பாதுகாப்பு வலயப் பகுதியில் இருந்து அவர்கள் வெவ்வேறான திசைகளில் தப்பிச் செல்ல முற்பட்டார்கள். புலிகளின் தலைவர்கள் சரணடையும் விவகாரத்தில் விஜய் நம்பியாரும் ஈடுபட்டிருந்தார் என்ற தகவல் உள்ளது. அதில் சூழ்ச்சிகள் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏதும் சூழ்ச்சிகள் தேவைப்பட்டிருக்கும் என்று நான் கருதவில்லை. எஞ்சியுள்ள தலைவர்களை சரணடையுமாறு தூண்டுதல் ஒன்று கொடுக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். அவர்கள் சரணடைந்தனர். ஆனால் சில காரணங்களுக்காக கொல்லப்பட்டு விட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்று பிபிசி சவுந்தேசியவிற்கு வழங்கிய செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com