|
||||
|
அபோதாபாத்தில் இருந்தவர்
பின்லாடன்
என
தெரியாது
-
காட்டிக்கொடுத்த மருத்துவர்
அப்ரிடி
“அமெரிக்கா
எமது மோசமான
எதிரி என்று அவர்கள்
சொன்னார்கள். இந்தியாவை
விடவும் மோசமான எதிரி என்றனர்”
ஒசாமா பின்லாடன்
தாக்குதலில்
தமக்கு தொடர்பிருப்பதாக
தெரிந்திருக்கவில்லை
என்று ஒசாமா பின்லாடனை
கண்டுபிடிக்க
அமெரிக்காவுக்கு
உதவிய பாகிஸ்தான்
மருத்துவர்
ஷகில் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் சிறைத்தண்டனை
அனுபவித்துவரும்
அப்ரிடி அமெரிக்காவின்
பொக்ஸ் தொலைக்காட்சிக்கு
பேட்டி அளித்துள்ளார்.
பெஷாவர் மத்திய
சிறையில்
இருக்கும்
அப்ரிடி எவ்வாறு பேட்டி வழங்கினார்
என்பது குறித்து விளக்கப்படவில்லை.
எனினும் ஒசாமா கொல்லப்பட்டதன்
பின்னர் கைது செய்யப்பட்ட
அப்ரிடி ஊடகங்களுக்கு
கருத்து வெளியிட்டுள்ளது
இதுவே முதல் முறையாகும்.
ஒசாமா கொல்லப்பட்டதன்
பின்னர் தாம் பாகிஸ்தானை
விட்டு தப்பிச் செல்ல தேவை
இருக்காது
என அப்ரிடி
நம்பி வந்த நிலையிலேயே
அவர் பாகிஸ்தான்
உளவு பிரிவான
ஐ. எஸ். ஐயினால் கடத்தப்பட்டுள்ளார்.
ஐ. எஸ். ஐ. தம்மை துன்புறுத்தியதாக
கூறியுள்ள
அப்ரிடி அமெரிக்காவை
மோசமான எதிரியாக ஐ.
எஸ். ஐ. கருதுவதாகவும்
அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.
அப்ரிடி போலியான மருத்துவ முகாமை நடத்தி ஒசாமாவை பிடிக்க டி.
என். ஏ. மாதிரியை
பெற முயற்சித்ததாக
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இராணுவ குழுவொன்றுக்கு
உதவிய குற்றத்திற்காக
அப்ரிடிக்கு
கடந்த மே மாதம்
பாகிஸ்தான்
நீதிமன்றம்
33 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
ஆனால் அமெரிக்க
உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. வுடனான தொடர்புக்காகவே
இவருக்கு
இந்த தண்டனை
வழங்கப்பட்டதாக
நம்பப்படுகிறது.
இந் நிலையில் இரட்டை கோபுர தாக்குதலின்
11 ஆவது ஆண்டு
நிறைவான நேற்றைய தினத்தில்
அப்ரிடியின்
பேட்டி வெளியிடப்பட்டது. இதே தினத்தில்
அல் கொய்தா
தலைவர் அய்மன் அல் சவாஹிரியும்
தனது உரையை
கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில்
மேற்கு மற்றும் இஸ்லாமியவாதிகளுக்கு
இடையில் அமைதி பேச்சுவார்த்தை
ஒன்றை முன்னெடுப்பதற்கான
முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டு
வருவதாக அய்மன் அல் சவாஹிரியின்
சகோதரர் மொஹமட் அல் சவாஹிரி
சி. என். என். தொலைக்காட்சிக்கு நேற்று
அளித்த போட்டியில்
குறிப்பிட்டார்.
பெஷாவர் மத்திய சிறையில் இருந்து பேட்டி அளித்துள்ள
டொக்டர் அப்ரிடி, தம் மூலம்
சி. ஐ. ஏ. ஒசாமா
பின்லாடனை
இலக்கு வைப்பது தமக்கு தெரியாது என கூறியுள்ளார்.
“எனக்கு கொடுக்கப்பட்ட
வேலை எந்த
இலக்கை கருத்தில்
கொண்டு முன்னெடுக்கப்படுகிறது
என்பது எனக்கு தெரியாமல்
இருந்தது”
என்று பொக்ஸ் தொலைக்காட்சிக்கு
தெரிவித்துள்ளார்.
“அந்த வளாகத்தில்
யாரோ தீவரவாதி
இருப்பதை
புரிந்து
கொள்ள முடிந்தது. ஆனால்
அது யாரென்று
எனக்கு தெரிந்திருக்கவில்லை.
ஒசாமா பின்லாடன்
கொல்லப்பட்டதும்
நான் அதிர்ச்சி
அடைந்தேன்.
அவரது கொலைக்கு
நான் பங்களிப்புச்
செய்தது எனக்கு தெரியாமலேயே
இருந்தது”
என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஒசாமா கொல்லப்பட்டதன்
பின்னர் தம்மை ஆப்கானுக்கு
தப்பியோடும்படி
சி. ஐ. ஏ. தம்மை
அறிவுறுத்தியதாக
அப்ரிடி தெரிவித்துள்ளார்.
ஆனால் எல்லையை
தாண்டும்
அபாயகரமான
அந்த பயணத்திற்கு
நான் பயப்பட்டேன்.
அத்துடன் அந்த கொலைக்கு நான் சம்பந்தப்பட்டவன்
என்று கருதவில்லை
என்பதால்
அவ்வாறு தப்பிச் செல்ல தேவையில்லை
என கருதியதாக
அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.
ஒசாமா பின்லாடன்
கொல்லப்பட்டு
20 தினங்கள்
கழித்து கடந்த ஆண்டு
மே 22 ஆம்
திகதி டொக்டர் அப்ரிடி ஹைத்ராபாத்
சோதனைச் சாவடியில்
வைத்து கைது செய்யப்பட்டார்.
தாம் கைது செய்யப்பட்டதன்
பின்னர் 8 மாதங்களாக
தமது கண்கள்
கட்டப்பட்டிருந்ததாகவும்
ஒருவருடமாக
கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும்
அவர் கூறியுள்ளார்.
இந்த காலத்தில்
தாம் இஸ்லாமா
பாத்தில்
உள்ள ஐ. எஸ். ஐ. தலைமையகத்தில்
சிறைவைக்கப்பட்டி
ருந்ததாகவும்
அப்ரிடி குறிப்பிட்டார்.
“உணவு உண்பதற்கு
வளைந்து நாயைப் போன்று எனது வாயை
மட்டுமே பயன்படுத்தினேன்”
அப்ரிடி அந்த பேட்டியில்
கூறினார். இதில்
தன் மீதான
புலன்விசாரணையின்
போது சிகரட்
துண்டுகள்
மற்றும் மின் அதிர்வுகளால்
தாம் துன்புறுத்தப்பட்டதாக
அவர் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்கா
எமது மோசமான
எதிரி என்று அவர்கள்
சொன்னார்கள். இந்தியாவை விடவும்
மோசமான எதிரி என்றனர்”
என்று அப்ரிடி சுட்டிக்காட்டினார்.
ஒசாமா மீதான தாக்குதலைத்
தொடர்ந்து
பாகிஸ்தான்
– அமெரிக்காவுக்கு
இடையிலான
உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த தாக்குதல்
நாட்டின்
இறையான்மையை
மீறும் செயல் என
பாகிஸ்தான்
கருதி வருகிறது. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |