Contact us at: sooddram@gmail.com

 

மீண்டும் முதலமைச்சராக வரமுடியாது என்பதை ஏற்கனவே விளங்கிக்கொண்டேன் - சந்திரகாந்தன்

'மீண்டும் நான் முதலமைச்சராக வரமுடியாது என்பதை தேர்தல் முடிவின் மூலம்  ிளங்கிக் கொண்டேன்' என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

'இந்தமுறை நான்கு முஸ்லிம் அமைச்சர்களும் ஒரு சிங்கள அமைச்சருமாக ஐந்து அமைச்சர்களும்தான் இந்த மாகாணத்தை நடத்தப் போகின்றார்கள் என்பது உண்மை. இருந்தாலும் தமிழர்களை எதிரணியில் கொண்டுசெல்ல வேண்டும் என்று வரலாற்றில் திரும்ப திரும்ப பிழைவிட்ட அரசியல் சக்திகள், குறிப்பாக சம்பந்தன் தான் இதையிட்டு கவலைப்பட வேண்டும். வெட்கப்படவேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

'கிழக்கு மாகாணத்தில் கூடுதலான விருப்பு வாக்குகளை நான் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது குறைந்தது மூன்று ஆசனங்களையாவது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியான நாங்கள் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இம்முறை கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் வரமுடியாது என்பது எனக்கு தெரிந்திருந்தது.

மாகாண முதலமைச்சராக இருந்து பல பணிகளை நான் செய்திருந்தேன். பின்னர் கிழக்கு மாகாண அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து பணி புரிவதென்பது சாத்தியமற்ற விடயமாகும். அத்தோடு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவது ஆசனங்களை பிரிப்பது போன்ற சங்கடங்களை அரசாங்கம் எதிர்நோக்கியிருந்தது.

இந்த கூட்டு ஆட்சிக்குள்ளே முதலமைச்சராக நாங்கள் இருந்தால் பல விடயங்களை சமாளித்து சட்ட ரீதியாக அதிகாரத்தை பயன்படுத்த முடியும். அமைச்சராக நான் இருந்து அதில் சாதித்துக்கொள்ளக் கூடிய, கட்டளை இடக்கூடிய சங்கடங்களை நாங்கள் எதிர்நோக்க வேண்டிவரும். இவற்றையெல்லாம் ஆராய்ந்த பின்னர்தான் மாகாண அமைச்சுப் பொறுப்பை பொறுப்பேற்க முடியாது என்று சொன்னேன்.

தொடர்ந்து கிழக்கு மாகாண அபிவிருத்தி குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி போன்ற விடயங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதியுடன் பேசி அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டேன்.

முந்தைய மாகாணசபை என்பது ஒரு சிறப்பான மாகாண சபையாகும். இன நல்லுறவையும் அபிவிருத்தியையும் கடந்த மாகாணசபையை ஏற்படுத்திருந்து. அதற்கு அரசியல் சூழலும் களம் அமைத்துக் கொடுத்திருந்தது.

நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு கிழக்கு மாகாணத்தின் அமைதி, நிருவாகம் எல்லாவற்றையுமே குழப்பி விட்டிருக்கின்றது. இந்த முறை நான்கு முஸ்லிம் அமைச்சர்களும் ஒரு சிங்கள அமைச்சருமாக ஐந்து அமைச்சர்களும்தான் இந்த மாகாணத்தை நடத்தப் போகின்றார்கள் என்பது உண்மை.

இருந்தாலும் தமிழர்களை எதிரணியில் கொண்டுசெல்ல வேண்டும் என்று வரலாற்றில் திரும்ப திரும்ப பிழை விட்ட அரசியல் சக்திகள் குறிப்பாக சம்பந்தன் அவர்கள் தான் இதையிட்டு கவலைப்பட வேண்டும். வெட்கப்படவேண்டும். அவர்தான் கிழக்கு மாகாண தமிழர்களை நடு ஆற்றில் விட்டிருக்கின்றார் என்பதுதான் அரசியல் ரீதியான உண்மை.

நான் மாகாணசபை உறுப்பினராக இருப்பேன். எனது ஆசனம் மாகாணத்துக்கு முக்கியமானது. அதே நேரம் நான் செய்து கொண்டிருந்த அபிவிருத்திகளை இடைநடுவில் விட்டு விட்டு செல்லமுடியாது. அவற்றையெல்லாம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும.; என்னை நம்பி வாக்களித்த 25000க்கும் அதிகமான மக்களின் நலன்கள், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும்.

அத்தோடு எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நிருவாக ரீதியான பிரச்சினைகளையெல்லாம் கருத்திற்கொண்டுதான் அதன் நிமித்தம் ஜனாதிபதியின் ஆலோசகர் எனும் பதவியைக்கூட நான் ஏற்றுக் கொண்டேன். அதைக்கூட எடுப்பதற்கு தனிப்பட்ட ரீதியான விருப்பமொன்று எனக்கு இருக்கவில்லை.

நான் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வதற்கு எந்த விதமான கோரிக்கையும் விடவில்லை. மக்களோடு என்றும் நாங்கள் நிற்போம். கிழக்கின்
அபிவிருத்தியில் கரிசணையுடன் செயலாற்றுவோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com