Contact us at: sooddram@gmail.com

 

இலங்கை யாத்திரிகர்கள் மீதான தாக்குதல்

புலம் பெயர் தமிழர்களின்  ூண்டுதலே காரணம்

தமிழகத்தில் அண்மையில் இலங்கை பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் புலி ஆதரவாளர்களான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் தூண்டுதலாலேயே இடம்பெற்றன. இவற்றில் ஜெயலலிதாவோ அல்லது கருணாநிதியோ சம்பந்தமில்லையென பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார். இச்சம்பவம் காரணமாக இரு நாடுகளு க்குமிடையிலான நல்லுறவுகளில் எவ்வித பாதிப்புமில்லையென தெரிவித்த பிரதியமைச்சர் மேற்படி சம்பவம் நடைபெற்ற இருவார காலங்களில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு யாத்திரிகர்களாக செல்லும் இலங்கை பக்தர்களுக்கு அங்கு ஏற்படும் அசெளகரியங்கள், பக்தர்கள் தாக்கப்படுகின்றமையை நிறுத்த நடவடிக்கை எடுத்தல் போன்றவை தொடர்பில் ஐ. தே. க. எம். பி. தயாசிறி ஜெயசேகர நேற்றுப் பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை முன்வைத்தார்.

இப்பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:-

அண்மையில் தமிழகத்தில் இலங்கை பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து பல்வேறு ஊடகங்கள் பல விதமாக செய்திகளை வெளியிட்டிருந்தன.

உண்மையில் இது புலி ஆதரவாளர்களின் பின்னணியில் அடிப்படைவாத குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களாகும். இந்திய அரசும் இலங்கை அரசும் அதே போன்று தமிழகத்தில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் கூட இதற்கு கண்டனத்தை வெளியிட்டிருந்தனர்.

உடனடியாகவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரு நாடுகளுமே தமது நல்லுறவுகளை மேலும் பலப்படுத்துவதில் முனைப்பாகச் செயற்படுகின்றன. அதேபோன்று இருநாட்டு மக்களும் நட்புறவுகளை வளர்த்துக் கொள்வதிலேயே ஆர்வத்துடன் செயற்படுகின்றனர். இதனைக் குழப்பும் விதத்திலேயே சில அடிப்படைவாத குழுக்கள் செயற்பட்டுள்ளன. இந்த சம்பவம் தமிழகத்தில் நடந்த போதும் தமிழக முதல்வர் இதில் நேரடியாக எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. மாறாக அதனைக் கண்டறிந்துள்ளதுடன், சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதுடன் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுத்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நெருங்கிய சிறந்த பலமான நட்புறவு உள்ளது. அந்த நட்புறவை சீர்குலைப்பதற்கே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் 2 பில்லியனைக் கொண்டதாகவே கடந்த காலங்களில் இருந்துள்ளன. தற்போது அது 5 பில்லியன்களாக அதிகரித்துள்ளது. அதே போன்று இலங்கையிலிருந்து இந்தியா செல்வோரின் எண்ணிக்கையும் இலங்கைக்கு வருவோரின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளன.

ஜே. ஆர். ஜயவர்தனவின் காலத்திலேயே புலி பயங்கரவாதத்தை ஒழிக்க வாய்ப்புகள் கிடைத்தன. எனினும் ஜே. ஆர். வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணிந்து அச்சந்தர்ப்பத்தை சாத்தியமாக்கத் தவறிவிட்டார். அதன் பின்னர் ஆயுதங்களையும் வழங்கி புலிகளுக்கு ஆதரவளித்த ரணசிங்க பிரேமதாசவைப் புலிகளே வீதியில் படுகொலை செய்தனர்.

அவர்கள் தமிழ், முஸ்லிம், சிங்களவர் என்றில்லை. அனைத்துத் தலைவர்களையும் படுகொலை செய்தனர். புலிகளுக்கு அரசியல் தீர்வுகாணும் எவ்வித அக்கறையும் தேவையும் இருந்ததில்லை.

இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதில் இந்தியா மட்டுமல்ல முழு ஆசியாவும் பயனடைந்தது. அதற்கான கெளரவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே கிடைத்துள்ளது.

இந்தியா மட்டுமன்றி லண்டன், கனடா என பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் புலிக் கொடிகள் தலைதூக்குகின்றன. எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட சில சக்திகள் இத்தகைய செயற்பாடு களுக்கு ஊக்கமளிப்பதைக் குறிப் பிடவேண்டும். இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் யாத்திரிகர்களுக்கு இந்தியா முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது.

இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கு இவர்கள் அறிவித்து வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்குக் கவனம் செலுத்துவது அவசியமாகும்.

நான் இந்தியா சென்றிருந்த சமயம் மத்திய மற்றும் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்தேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் சகல கட்சிகளுடனும் பேச்சு நடத்தி பாராளுமன்றம் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டனர் எனவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com