|
||||
|
செனட் சபையில் தோல்வி முகம் சிரியாவை தாக்கும் திட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஒபாமா அறிவிப்பு சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர் களிடமிருந்து மட்டுமின்றி, தனது சொந்தக்கட்சி உறுப்பினர்களிடமிருந் தும் கடும் எதிர்ப்பை அமெரிக்க ஜனா திபதி பாரக் ஒபாமா சந்தித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில், சிரியாவைத் தாக்கும் தனது தீர்மானம் தோல்வியடைந்துவி டும் என்று தெளிவாக உணர்ந்து கொண்ட நிலையில், தீர்மானத்தை முன்மொழிவதையே ஒபாமா நிர்வா கம் தள்ளிவைத்தது. இது சமீப பத்து ஆண்டுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஏற்பட் டுள்ள ஒரு கடுமையான பின்னடைவா கும் என்று சர்வதேச நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலகெங்கி லும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த தோடு, ரஷ்யாவும் சீனாவும் இதர நாடு களும் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்ன ணியில், அமெரிக்க மக்களும் பெரும் எண்ணிக்கையில் வீதிகளில் இறங்கி சிரியாவைத் தாக்கதே என போராட துவங்கியிருப்பதால் போர்த்திட்டத் தை நிறுத்தி வைக்க வேண்டிய நிலை மை எழுந்துள்ளது. இதை பகிரங்கமாக ஒப்புக்கொண் டுள்ள ஜனாதிபதி ஒபாமா, சிரியா தன்வசம் உள்ள ரசாயன ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டால் அந்நாட்டின் மீது ராணுவத்தாக்குதல் நடத்தும் திட்டம் நிறுத்திவைக்கப்படும் என்று கூறினார்.ரஷ்யாவின் செயிண்ட்பீட்டர்ஸ் பர்க் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில், சிரியா மீது போர்தொடுக்கும் அமெரிக் காவின் திட்டத்திற்குகடும் எதிர்ப்பு எழுந்தது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் தவிர அனைத்து நாடுகளும் ஒபாமாவின் போர்த்திட்டத்திற்கு எதிராக நின்றன. குறிப்பாக ரஷ்யா அமெரிக்காவுக்கு கடும் எச் சரிக்கை விடுத்தது. அதே நேரத்தில் போரைத் தடுத்து நிறுத்து வதற்கான பல்முனை நடவடிக்கை களில் ரஷ்யா ஈடுபட்டு வந்தது. ஆனால், தன்னிச்சையாக சிரியா மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். அதே நேரத்தில் அமெரிக்காவிலும் எழுந்த எதிர்ப்பு தீவிரமடையத் துவங் கியதால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் அங்கீகாரத்தைப் பெற்று, அதன் பின்னர் தாக்குதல் நடத்துவோம் என்று அறிவித்தி ருந்தார். செப்டம்பர் 9ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபை கூடும் போது, சிரியா மீது போர் நடத்தும் தீர்மானத்தை நிறைவேற்றி, உடனடியாக மிகப்பெரும் தாக்கு தலை நடத்துவது என்று ஒபாமா நிர் வாகம் திட்டமிட்டது. நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு இந்நிலையில், சிரியா மீது கை வைக்காதே என்ற குரல் அமெரிக்கா முழுவதும் ஓங்கி ஒலிக்கத் துவங்கி யது. வெள்ளை மாளிகை முன்பும் ஆயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச நிலைமையும் உள்நாட்டு மக்களும் தங்களது போர்த்திட்டத்திற்கு ஆதர வாக இல்லை என்பதை உணர்ந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் களில் பெரும்பாலானவர்கள், ஒபாமா வின் தீர்மானத்திற்கு எதிராக வாக் களிப்பது என முடிவெடுத்தனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி, ஒபாமாவின் போர்த்திட்டத்திற்கு பகிரங்கமாகவே எதிர்ப்பு தெரிவித் தது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப் பினர்களும் எதிராக வாக்களிப் பார்கள் என்ற நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களில் 50க்கும் மேற்பட்டோர் தீர்மானத் திற்கு எதிராக வாக்களிப்போம் என அறிவித்தார்கள். 50 உறுப்பினர்களின் வாக்குகள் எதிராக பதிவானால், ஒபாமா அரசு தோல்வியடையும்; ஒபாமாவின் ஆட்சி நெருக்கடியில் சிக்கும் என்ற நிலை ஏற்பட்டது.இந்நிலையில், நாடாளுமன்றத் தின் செனட் சபையில் தீர்மானத்தை முன்மொழிவதை வேறு வழியின்றி ஒபாமா அரசு கைவிட்டது. த னது சொந்தக்கட்சியின் உறுப்பி னர்களது நம்பிக்கையைக் கூட ஒபா மாவால் பெற முடியவில்லை என்று அமெரிக்காவின் அனைத்து ஏடுக ளும் பரபரப்பாக செய்தி வெளியிட் டுள்ளன. நிலைமையை உணர்ந்து போரைக் கைவிட்டு ஒழுங்காக அமெரிக்க மக்களுக்கு ஆட்சி நடத் தும் வழியைப்பார்க்கட்டும் என்று ஒபாமா அரசுக்கு பல்வேறு ஏடுகளும் தலையங்கம் வாயிலாக இடித்துரைத் துள்ளன.நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்து செனட் சபையின் ஆளுங் கட்சித் தலைவர் ஹேரி ரீடு, போது மான வாக்குகள் கிடைக்காது என்ற நிலையில் தீர்மானத்தை முன்மொழிய நாங்கள் அவசரம் காட்டவில்லை என்று வாஷிங்டனில் செய்தியாளர் களிடம் கூறினார். எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியிடம் பேசினோம்; எமது ஜனநாயகக் கட்சியின் செனட் உறுப்பினர்கள் அனைவரிடமும் பேசினோம். ஆனாலும் தீர்மானத்தை நிறைவேற்றும் அளவிற்கு போது மான வாக்குகளைப் பெற முடியாது என்பதை உணர்ந்துள்ளோம் என ஹேரி ரீடு தெரிவித்தார். ஒபாமா பேட்டி இந்நிலையில், அமெரிக்க மக்களி டம் நேரடியாகப் பேசிய பின்பு இது குறித்து இறுதி முடிவு எடுக்கப்போவ தாக ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார். ஆறு செய்திச் சேனல்களுக்கு தனித் தனியாக அவர் விளக்கங்கள் அளித் தார். அனைத்திலும், செனட் சபையில் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்ற நிலை உருவாகியிருப்பது உண்மையே என ஒப்புக்கொண்டார். “இந்த விஷயத்தில் நான் நம்பிக்கை யுடன் இருக்கிறேன் என்று சொல்ல மாட்டேன். நாடாளுமன்ற உறுப்பி னர்கள் இந்தப்பிரச்சனையில் மிகவும் கவனமாக ஆலோசனை நடத்தியி ருக்கிறார்கள். அதை நான் வரவேற் கிறேன்” என்று என்பிசி தொலைக் காட்சியில் அவர் கூறினார். சிரியா பிரச்சனைக்கு ராஜ்ய ரீதியாக தீர்வு காண தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ரஷ்யாவின் சமாதான திட்டம் அமெரிக்காவிலிருந்து ஒபாமா வின் பேட்டி வெளியான சில மணி நேரங்களில், சிரியா வெளியுறவு அமைச்சர் வாலித் அல் முல்லம், மாஸ்கோ சென்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவை திங்க ளன்று சந்தித்து பேசினார். அமெரிக் காவின் தாக்குதல் திட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்தும் விதமாக ‘ரசாயன ஆயுதங்கள்’ என்ற பிரச்ச னையை சர்வதேச கண்காணிப்பின் கீழ் கொண்டுவர தயாராக இருப்பதாக சிரியா அமைச்சர் உறுதியளித்தார். சிரியாவில் ரசாயன ஆயுதம் இருப் பதாக சர்வதேச குழு கண்டறிந்தால் அதை அந்நாட்டின் பஷால் அல்-அசாத் அரசு முறையாக ஐ.நா. கண் காணிப்பின்கீழ் கொண்டுவரும் என்று சிரியா ஒப்புக்கொண்டதாக ரஷ்யா வும் அறிவித்தது. இதற்கிடையில் ரஷ்யாவின் சமா தான திட்டத்தை சீனா, ஈரான், பிரிட் டன் உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள் ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீ முனும் வர வேற்றுள்ளார். |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |